நெடுஞ்சாலைகளில் 100 சார்ஜிங் ஸ்டேஷன்கள்... அமைச்சர் செந்தில் பாலாஜி போடும் புதிய ஸ்கெட்ச்...

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் 100 இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்த விரிவான விளக்கங்களை காணலாம் வாருங்கள்.

நெடுஞ்சாலைகளில் 100 சார்ஜிங் ஸ்டேஷன்கள் . . . அமைச்சர் செந்தில் பாலாஜி போடும் புதிய ஸ்கெட்ச் . . .

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. ஒரு காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களா என விசித்திரமாக பார்த்த மக்கள் எல்லாம் இன்று எலெக்டரிக் வாகனங்களை சாதாரனமாக பார்க்கும் அளவிற்கு இந்தியாவின் ஒவ்வொரு ஊர்களிலும் இந்த எலெக்ட்ரிக் கார்கள் வந்துவிட்டது.

நெடுஞ்சாலைகளில் 100 சார்ஜிங் ஸ்டேஷன்கள் . . . அமைச்சர் செந்தில் பாலாஜி போடும் புதிய ஸ்கெட்ச் . . .

இன்று வரை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை சார்ஜிங் ஸ்டேஷன் தான். எலெக்ட்ரிக் வாகனங்களில் பெட்ரோல் வாகனம் போல நம்பி நீண்ட தூரம் பயணிக்க முடியாது. பெட்ரோல் வாகனங்களில் ஆங்காங்கே பெட்ரோல் அடைத்துக்கொண்டு பயணிக்க முடியும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் போட இதுவரை இந்தியாவில் போதுமான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை.

நெடுஞ்சாலைகளில் 100 சார்ஜிங் ஸ்டேஷன்கள் . . . அமைச்சர் செந்தில் பாலாஜி போடும் புதிய ஸ்கெட்ச் . . .

இந்த பிரச்சனையை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் சார்ஜிங் ஸ்டேஷன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு மின்சார வாரியம் (Tangedco) தான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

நெடுஞ்சாலைகளில் 100 சார்ஜிங் ஸ்டேஷன்கள் . . . அமைச்சர் செந்தில் பாலாஜி போடும் புதிய ஸ்கெட்ச் . . .

கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு எலெக்டரிக்கல் பாலிசியின் படி நெடுஞ்சாலை மற்றும் சாலைகளில் ஒவ்வொரு 25 கி.மீ ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதை இலக்காக கொண்டிருந்தது. அந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் எலெக்டரிக்கல் சப் ஸ்டேஷன்களிலிருந்து 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் என திட்டம் வகுத்திருந்தது. மத்திய அருசு தமிழ் நாட்டிற்கு மொத்தம் 256 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க அனுமதியளித்திருந்தது.

நெடுஞ்சாலைகளில் 100 சார்ஜிங் ஸ்டேஷன்கள் . . . அமைச்சர் செந்தில் பாலாஜி போடும் புதிய ஸ்கெட்ச் . . .

இந்த 256 சார்ஜிங் ஸ்டேஷன்கள் என்பது தனியார், மற்றும் பொது துறை நிறுவனங்களால் உருவாக்கப்படும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் என கணக்கிடுகிறது. இதில் 151 சார்ஜிங் ஸ்டேஷன்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே கட்டுமானம் செய்யப்பட்டு செயல்படதுவங்கிவிட்டன. இந்நிலையில் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்தாக 100 சார்ஜிங் ஸ்டேஷன்களை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

நெடுஞ்சாலைகளில் 100 சார்ஜிங் ஸ்டேஷன்கள் . . . அமைச்சர் செந்தில் பாலாஜி போடும் புதிய ஸ்கெட்ச் . . .

சார்ஜிங் ஸ்டேஷன் என்றால் வெறும் கார்களை நிறுத்தி சார்ஜ் ஏற்றும் இடமாக மட்டும் இருக்ககூடாது. ஒவ்வொரு சார்ஜிங் ஸ்டேஷன்களிலும் அங்கு வரும் பயனர்களுக்கான சில வசதிகளை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காத்திருப்பு அறைகள் ஒவ்வொரு சார்ஜிங் ஸ்டேஷனிலும் இருக்க வேண்டும். இது போக கார்களை நிறுத்த போதுமான இட வசதி இருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் 100 சார்ஜிங் ஸ்டேஷன்கள் . . . அமைச்சர் செந்தில் பாலாஜி போடும் புதிய ஸ்கெட்ச் . . .

சார்ஜ் ஏற்ற வரும் மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும். இது போக தீ பிடிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நேர்தால் அதற்கான அவசர கால தடுப்பு பொருட்கள் விதிமுறைகளின்படி இருக்க வேண்டும். கட்டாயம் கழிப்பிட வசதி இருக்க வேண்டும். பாதுகாப்பு குறித்த வழிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் தான். சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முடியும்.

நெடுஞ்சாலைகளில் 100 சார்ஜிங் ஸ்டேஷன்கள் . . . அமைச்சர் செந்தில் பாலாஜி போடும் புதிய ஸ்கெட்ச் . . .

தற்போது தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் 100 சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. Tangedco விரைவில் இதற்கான டென்டரை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டென்டரின் போது இந்த சார்ஜிங் ஸ்டேஷன் எப்படி செயல்படுகிறது. அதை கட்டமைப்தற்கான தகுதி என்ன உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tangedco prepares to float tenders for 100 ev charging station across TN highways
Story first published: Thursday, August 18, 2022, 15:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X