“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

டாடா கார்கள் என்றாலே பொதுவாக பாதுகாப்பானவை என்கிற கருத்து உள்ளது. ஏனெனில் பெரும்பாலான டாடா கார்கள் உலகளாவிய மோதல் சோதனைகளில் சிற்ப்பாக செயல்பட்டு ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்கள், முழு ஐந்து நட்சத்திரங்கள் என பெற்றுள்ளன.

“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

நிறைய வெளிநாட்டினருக்கு இந்தியா என்றாலே சாலை விபத்துகள் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். இதனை கருத்தில் கொண்டே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரமான கார்களை உள்நாட்டில் விற்பனை செய்ய முயற்சிக்கிறது. ஏனெனில் இதன் மூலமாக விபத்தின் வீரயத்தை கணிசமாக குறைக்க முடியும்.

“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

இதற்கு உதாரணமாக சம்பவங்கள் பலவற்றை இதற்கு முன் பார்த்துள்ளோம். இந்த வகையில் விபத்தில் பெரியதாக பாதிப்படையாமல், உரிமையாளரின் பாராட்டை பெற்ற டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஒன்றை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

அஸ்ஸாமை சேர்ந்த இந்த அல்ட்ராஸ் காரின் உரிமையாளர் அவரது முகப்புத்தக பக்கத்தில், விபத்தில் சேதமடைந்த அல்ட்ராஸ் காரின் படத்துடன், வாகனத்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், இன்று காலை எனது அல்ட்ராஸ் எக்ஸ்.இசட் விபத்தில் சிக்கியது. மூன்று பெரியவர்கள், மூன்று சிறியவர்கள் என மொத்தம் நாங்கள் 6 பேர் அப்போது பயணம் செய்தோம்.

“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

இந்த விபத்தில், எங்களுக்கு சிறு கீறல்கள் கூட இல்லை, நாங்கள் முற்றிலுமாக நன்றாக இருக்கும். எனது வாழ்க்கையையும், எனது குடும்பத்தையும் காப்பாற்றியதற்காக அல்ட்ராஸிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றப்படி இந்த விபத்திற்கான காரணத்தையும், இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை பற்றியும் உரிமையாளர் தெரிவிக்கவில்லை.

“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

அவர் வெளியிட்டுள்ள படத்தில், அல்ட்ராஸ் காரின் முன்பக்கத்தின் இடதுபுறம் சற்று பெரியதாகவே சேதமடைந்துள்ளதை பார்க்க முடிகிறது. இந்த விபத்தினால் காரின் உள்ளே இரு முன்பக்க காற்றுப்பைகளும் வெளியே வந்துவிட்டன. முன்பக்கமாக, இடதுபுறத்தில் மோதலை சந்தித்துள்ள இந்த ஹேட்ச்பேக் கார், இடது பக்கவாட்டில் சற்று உராய்வுகளை பெற்றுள்ளது.

“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

விபத்தின்போது காரின் உள்ளே அனைவரும் சீட்பெல்ட் அணிந்திருந்துள்ளனர். இதனால் தான் எவருக்கும் பெரிய அளவில் எந்த காயமும் இல்லை. இவ்வாறான பெரிய விபத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், காரின் உடலமைப்பு மிக முக்கியமானது. அதேபோல் சீட்பெல்ட்கள் அனைத்திருப்பதும் அவசியமாகும்.

“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

பாதுகாப்பான காராக இருப்பினும், சீட்பெல்ட் அணியாமல் பயணித்தால் எவரொருவரும் விபத்தில் சிக்க நேரிடும். டாடா மோட்டார்ஸின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸ் உலகளாவிய மோதல் சோதனையில் முழு ஐந்து நட்சத்திரங்களை பெற்றிருந்தது. இந்த சோதனை சராசரியாக மணிக்கு 64கிமீ வேகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

பெரியவர்கள் பாதுகாப்பில் அல்ட்ராஸ் 17க்கு 16.13 புள்ளிகளை பெற்று ஆச்சிரியப்படுத்தி இருந்தது. அதேபோல் குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் 49க்கு 29 மதிப்பெண்களை இந்த டாடா தயாரிப்பு வாகனம் பெற்றிருந்தது. ஏனெனில் அல்ட்ராஸின் அனைத்து வேரியண்ட்களிலும் குறைந்தப்பட்சமாக 2 காற்றுப்பைகளாவது நிலையாக வழங்கப்படுகின்றன.

“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

அல்ட்ராஸில் ஓட்டுனர் மற்றும் சக பயணிகளின் தலை, கழுத்து மற்றும் முட்டிகள் விபத்தின்போது மிகவும் பாதுகாக்கப்படுவதாக உலகளாவிய NCAP அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் பயணிகளின் மார்பு பகுதியும் போதிய அளவிற்கு பாதுகாக்கப்படுகின்றனவாம். இவற்றை கண்டறிய அல்ட்ராஸ் முன்பக்கமாகவும், பக்கவாட்டு பக்கமாகவும் மோதலுக்கு உட்படுத்தப்பட்டது.

“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

டாடா அல்ட்ராஸில் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏபிஎஸ், இபிடி, கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், முன்பக்க பயணிகள் சீட்பெல்ட் அணியாததையும், அதிவேகத்தையும் எச்சரிக்கும் வசதி மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர் உள்ளிட்டவை அதன் வேரியண்ட்கள் அனைத்திலும் வழங்கப்படுகின்றன.

“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் முழு ஐந்து நட்சத்திரங்களையும் உலகளாவிய NCAP சோதனையில் பெற்றுள்ள அல்ட்ராஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட முதல் வாகனமாக விளங்குகிறது.

“டாடா தயாரிப்பினால் தான் எங்கள் குடும்பம் விபத்தில் தப்பித்தது” - உருக்கமாக பதிவிட்ட அல்ட்ராஸ் கார் உரிமையாளர்

பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் டாடா அல்ட்ராஸிற்கு ஹூண்டாய் ஐ20 மற்றும் மாருதி சுஸுகி பலேனோ உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் பாதுகாப்பு என்கிற ஒற்றை விஷயத்தில் அல்ட்ராஸ் மட்டம் தட்டி வருகிறது. டாரா அல்ட்ராஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.84

லட்சத்தில் இருந்து ரூ.9.59 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Tata Altroz owner thanks car’s solid build quality for saving his life.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X