Just In
- 21 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 2 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 14 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- Movies
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- News
ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்
- Sports
அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பத்திரமாக வெளியே வந்த பயணிகள்... மீண்டும் ஒரு முறை வலுவான கட்டுமான தரத்தை நிரூபித்த டாடா கார்...
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாரியர் எஸ்யூவி, சாலை விபத்தில் இருந்து பயணிகளை காப்பாற்றியதன் மூலம், மீண்டும் ஒரு முறை வலுவான கட்டுமான தரத்தை நிரூபித்து காட்டியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொடூரமான சாலை விபத்துக்களில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் பயணிகளின் உயிரை காப்பாற்றிய பல செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த வகையில் தற்போது நமக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. டாடா ஹாரியர் கார் ஒன்று சாலை விபத்தில் சிக்கியுள்ளது. ஆனால் அனைத்து பயணிகளும் காரில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய கார்களின் வலுவான கட்டுமான தரத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. புது டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில், ஒரு ஃப்ளை ஓவரின் கீழே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சாலையின் நடுவே இருந்த கான்கீரிட் டிவைடரில் டாடா ஹாரியர் கார் மோதியதால், இந்த விபத்து அரங்கேறியுள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்த விபத்து காரணமாக, டாடா ஹாரியர் காரின் முன் பக்க பம்பர் பகுதி பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. ஆனால் காரின் உள்ளே இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் மூலம் டாடா ஹாரியர் காரின் வலுவான கட்டுமான தரம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தில் இருந்து பயணிகளை காப்பாற்றியுள்ள டாடா ஹாரியர், எஸ்யூவி ரக கார் ஆகும்.
புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 டிசைன், பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கு? வீடியோ பாருங்க...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டாடா ஹாரியர் எஸ்யூவி காரானது, எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவிக்களுடன் போட்டியிட்டு வருகிறது. ஆனால் நாம் ஏற்கனவே கூறியபடி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்று விபத்தில் இருந்து பயணிகளை காப்பது இது முதல் முறை கிடையாது.

கடந்த காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளை காயம் கூட இல்லாமல் பல முறை காப்பாற்றியுள்ளன. குறிப்பாக இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டாடா நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, பயணிகளுக்கு பல முறை கடவுளாக மாறியுள்ளது.

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் டாடா நெக்ஸான்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சர்வதேச அரங்கில் டாடா நெக்ஸான் இந்தியாவிற்கு மிகப்பெரிய கௌரவத்தை தேடி கொடுத்தது. சமீப காலமாக டாடா நிறுவனத்தின் கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் அமர்க்களப்படுத்துகின்றன.

டாடா நிறுவனத்தின் நெக்ஸானை தொடர்ந்து, அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக தன்வசப்படுத்தியது. இதன் மூலம் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற 2 கார்களை வைத்திருக்கும் ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமைக்கு உரித்தான நிறுவனமாக டாடா உருவெடுத்தது.

அத்துடன் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மிகவும் பாதுகாப்பான காராகவும் டாடா அல்ட்ராஸ் திகழ்கிறது. மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வரும் நிலையில், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெற்ற 5 நட்சத்திர ரேட்டிங்கை முன்னிலைப்படுத்தியே அல்ட்ராஸ் காரை டாடா விளம்பரப்படுத்துகிறது.

பாதுகாப்பு என்ற அம்சத்திற்கு முன்னிலை கொடுத்து டாடா அல்ட்ராஸ் காரை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த இரண்டு கார்கள் தவிர மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது டாடா நெக்ஸானுடன் போட்டியிட்டு வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும்.