பழைய வாகனங்களை அழிக்கும் ஆலையை அமைக்க டாடா திட்டம்... லிஸ்டில் நான்கு முக்கிய நகரங்கள்... எந்தெந்த நகரங்கள்?..

டாடா மோட்டார்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்யும் ஆலையைத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழைய வாகனங்களை அழிக்கும் ஆலையை அமைக்க டாடா திட்டம்... லிஸ்டில் நான்கு முக்கிய நகரங்கள்... எங்கு தெரியுமா?

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் வாகனங்களை அழிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க இருப்பதாக தவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில், மஹிந்திரா மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டநிலையில் தற்போது டாடாவும் வெளியிட்டிருக்கின்றது.

பழைய வாகனங்களை அழிக்கும் ஆலையை அமைக்க டாடா திட்டம்... லிஸ்டில் நான்கு முக்கிய நகரங்கள்... எங்கு தெரியுமா?

ஹவுரா, கர்ணல், ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நான்கு நகரங்களிலேயே டாடா தனது வாகன அழிப்பு ஆலையை அமைக்க இருக்கின்றது. அதேசமயம், இப்பணியில் டாடா நிறுவனம் நேரடியாக களமிறங்கப்போவதில்லை என நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் சிலர் கூறியிருக்கின்றனர்.

பழைய வாகனங்களை அழிக்கும் ஆலையை அமைக்க டாடா திட்டம்... லிஸ்டில் நான்கு முக்கிய நகரங்கள்... எங்கு தெரியுமா?

தொழில்நுட்பம் போன்ற குறிப்பிட்ட சில முக்கிய உதவிகளை மட்டுமே நிறுவனம் வழங்க இருக்கின்றது. அப்படியானால், இந்த புதிய தெழிலுக்கான முதலீடு எப்படி?, இதற்கான முதலீடுகளை டீலர்களிடத்தில் இருந்து கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலையும் டாடா நிறுவனத்தின் அதிகாரிகளே உறுதிப்படுத்தியுள்ளனர்.

பழைய வாகனங்களை அழிக்கும் ஆலையை அமைக்க டாடா திட்டம்... லிஸ்டில் நான்கு முக்கிய நகரங்கள்... எங்கு தெரியுமா?

ஆகையால், வாகன விற்பனையின் மூலம் வரும் வருமானம் மட்டுமல்லாது ஸ்கிராப்பிங் தொழிலின் வாயிலாகவும் டீலர்களால் வருமானத்தை ஈட்ட முடியும். இந்த நோக்கத்திற்காகவே இப்புதிய பணியை விற்பனையாளர்களின் மூதலீட்டில் மேற்கொள்ள டாடா திட்டமிட்டுள்ளது.

பழைய வாகனங்களை அழிக்கும் ஆலையை அமைக்க டாடா திட்டம்... லிஸ்டில் நான்கு முக்கிய நகரங்கள்... எங்கு தெரியுமா?

கோவிட்-19 மற்றும் பிற காரணங்களால் நிறுவனத்தின் விற்பனை கடந்த காலங்களில் கடுமையான சரிவைச் சந்தித்து. இதில் இருந்து லேசான மீட்டெடுப்பை வழங்கும் நோக்கில் இப்புதிய தொழிலுக்கான முதலீட்டை விற்பனையாளர்களிடத்தில் இருந்தே பெற்று, அதன்மூலம் வரும் வருமானத்தை அவர்களுக்கே வழங்க டாடா திட்டமிட்டிருக்கின்றது.

பழைய வாகனங்களை அழிக்கும் ஆலையை அமைக்க டாடா திட்டம்... லிஸ்டில் நான்கு முக்கிய நகரங்கள்... எங்கு தெரியுமா?

மேலும், ஸ்கிராப் ஆலைகளை இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு நகரங்களில் மட்டுமின்றி நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர டாடா திட்டமிட்டுள்ளது. ஆகையால், எதிர்காலத்தில் பொதுத்துறைகளுடன் இணைந்து டாடா இப்புதிய தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பழைய வாகனங்களை அழிக்கும் ஆலையை அமைக்க டாடா திட்டம்... லிஸ்டில் நான்கு முக்கிய நகரங்கள்... எங்கு தெரியுமா?

பயன்பாட்டில் இருக்கும் அனைத்து பழைய (15 ஆண்டுகள் பழைய வர்த்தக மற்றும் 20 ஆண்டுகள் தனியார்) வாகனங்களையும் அடியோடு ஒழிக்கும் விதமாக மத்திய அரசு அண்மையில் பழைய வாகன அழிப்பு கொள்கையை வெளியிட்டது. காற்று மாசு, விபத்து மற்றும் அதிக எரிபொருள் செலவு ஆகியவற்றை காரணம் காட்டி இந்த கடுமையான திட்டத்தை நாட்டில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

பழைய வாகனங்களை அழிக்கும் ஆலையை அமைக்க டாடா திட்டம்... லிஸ்டில் நான்கு முக்கிய நகரங்கள்... எங்கு தெரியுமா?

தற்போது நாட்டில் 1.7 மில்லியன் 15 ஆண்டுகள் பழைய வாகனமும், 5.1 மில்லியன் 20 ஆண்டுகள் பழைய வாகனங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றின் மூலமே நாடு அதிகம் காற்று மாசினை சந்திப்பதாக அரசு குற்றம் சாட்டுகின்றது. இவற்றிற்கே புதிய விதிகளின் வாயிலாக ஃபிட்னஸ் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பழைய வாகனங்களை அழிக்கும் ஆலையை அமைக்க டாடா திட்டம்... லிஸ்டில் நான்கு முக்கிய நகரங்கள்... எங்கு தெரியுமா?

இந்த சான்றை பெறும் வாகனங்கள் சில குறிப்பிட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் முக்கியமாக மாசு உமிழ்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அதில், அரசு நிர்ணயித்திருக்கும் அளவை இந்த வாகனம் பெறவில்லை என்றால் உடனடியாக வாகன அழிப்பிற்கு வைக்கப்படும். இத்துடன், தகுதியற்ற வாகனம் என்ற காரணத்தினால் அதன் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கவும் அரசு திட்டமிட்டிருக்கின்றது.

பழைய வாகனங்களை அழிக்கும் ஆலையை அமைக்க டாடா திட்டம்... லிஸ்டில் நான்கு முக்கிய நகரங்கள்... எங்கு தெரியுமா?

அதேசமயம், பழைய வாகனங்களை தாமாக முன் வந்து ஸ்கிராப் செய்வோருக்கு புதிய வாகனத்தை வாங்கும்போது தள்ளுபடி மற்றும் புதிய வாகனத்தின் பதிவின்போது தள்ளுபடி என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இது பழயை வாகன அழிப்பை ஊக்குவிக்க உதவும் என அரசு நம்புகின்றது.

Most Read Articles

English summary
Tata Motors Planning To Build Vehicle Scrapyards With Dealers Collaboration. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X