டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு

கேரளாவில் டாடா டியாகோ கார் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் மழை நேரங்களில் காருக்குள் தண்ணீர் ஓழுகும் பிரச்சனையை சந்தித்து வந்தார். இதை பலமுறை சர்வீஸ் சென்டரில் சரியாகவில்லை.

By Balasubramanian

கேரளாவில் டாடா டியாகோ கார் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் மழை நேரங்களில் காருக்குள் தண்ணீர் ஓழுகும் பிரச்சனையை சந்தித்து வந்தார். இதை பலமுறை சர்வீஸ் சென்டரில் சரியாகவில்லை. அடுத்த என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் விழித்து கொண்டிருந்த நிலையில் அவர் டிரைவ்ஸ்பார்க் மலையாள தளத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இது குறித்து அதில் செய்தி வெளியான பின்பு டாடா நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு அவரது காரில் உள்ள பிரச்னையை சரி செய்து தருவதாக உறதியளித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேரந்தவர் ஜிஜோ ராஜ். இவர் கடந்த பிப். மாதம் 8ம் தேதி திருவனந்தபுரத்தில் டாடா டியாகோ எக்ஸ் டி வேரியன்ட் காரை வாங்கியுள்ளார். கார் வாங்கிய அடுத்த நாளே மலைப்பகுதிக்கு காரை கொண்டு சென்றுள்ளார். சிறு சிறு ஏற்றங்களில் எளிதாக ஏறி இறங்கிய கார் பெரிய ஏற்றங்களில் ஏற முடியாமல் திணறியது. ஒரு பெரிய ஏற்றத்தில் இவர் முழு ரேஸ் கொடுத்தும் கார் ஏற முடியாமல் திணறி ஆக்ஸிலரேஷன் கட் ஆனது.

டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு

இதையடுத்து அவர் டாடா சர்வீஸ் சென்டருக்கு இந்த பிரச்னை குறித்து புகார் செய்த போது முதலில் அவர்கள் ஸ்பார்க் பிளக்கில் ஏதேனும் பிரச்னை இருக்கும் என கூறி அதை செக் செய்துள்ளனர். ஆனால் அதில் எந்த பிரச்னையும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு

தொடர்ந்து பியூயல் சென்சாரில் தான் பிரச்னை இருப்பதாக கூறி அதை சரி செய்து இனி இது போன்ற பிரச்னைகள் ஏற்படாது என்ற சொல்லி அனுப்பினார். அனாலும் அவர் அவ்வப்போது இந்த பிரச்னையை சந்தித்து வந்துள்ளார். இது குறித்து தொடர்ந்து 3-4 முறை சர்வீஸ் செய்தும் அவரது காரில் இந்த பிரச்னை சரியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு

இந்நிலையில் கேரளாவில் தற்போது கோடை காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. கார் முதன் முறையாக நனைந்த போதே காரில் இருந்து மழை நீர் காருக்குள் லீக் ஆக துவங்கியது. இதையடுத்து அவர் மீண்டும் சர்வீஸ் சென்டருக்கு சென்று இந்த பிரச்னை குறித்து புகார் அளித்தார்.

டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு

அதற்கு அவர்கள் காரில் உள்ள புஷ்கள் தான் பிரச்னை ஏன அவற்றை மாற்றிகொடுத்தவர் ஆனால் புஷ் மாற்றிய 5வது நாளே மீண்டும் மழை வந்த போது காருக்குள் மீண்டும் லீக்காக துவங்கியது.

டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு

பின்னர் மீண்டும் சர்வீஸ் சென்டரை தெடர்பு கொண்ட போது அவர்கள் டோரில் பிரச்னை இருக்கும் ஆனால் அதற்கான ஸ்பேர் பார்ட்ஸ் தற்போது இல்லை 5 நாட்கள் ஆகும் என அவர்கள் கூறினர். மேலு்ம அவர்கள் நீங்கள் காரை எடுத்து செல்லுங்கள் ஸ்பேர் பார்ட்ஸ் வந்தவுடன் காரை நாங்களே வந்து காரை பிக்கப் செய்து கொள்கிறோம் என அவர் கூறினர்.

டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு

அதன் பின் 2 வாரங்கள் ஆகியும் சர்வீஸ் சென்டரை அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. இது குறித்து ஜிஜோ ராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் நடந்ததை குறிப்பிட்டு பதிவு ஒன்றை செய்திருந்தார். அந்த போஸ்ட் பேஸ்புக்கில் வைரலாகியது. இதன் பின் வந்த சர்வீஸ் சென்டர் ஊழியர்கள் அவரின் காரை பிக்கப் செய்து சர்வீஸ் சென்டரில் கொண்டு போய் செக் செய்தனர்.

டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு

அதில் கார் டோரிலும் பிரச்னை இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் இந்த காரில் ஏன் தண்ணீர் ஓழுகும் பிரச்னை இருக்கிறது என தெரியவில்லை. காரை சர்வீஸ் செய்ய முடியாது என அவர்கள் கைவிரித்தனர். இதன் பின் செய்வது அறியாது திகைகத்த ஜிஜோராஜ் நமது டிரைவ்ஸ்பார்க் தளத்தின் மலையாள டீமை தொடர்பு கொண்டு நடந்ததை முழுமையாக விவரித்தார்.

டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு

இதையடுத்து நமது மலையாள டீம் இது குறித்து செய்தி ஒன்றை நமது மலையாள தளத்தில் வெளியிட்டிருந்தது. இந்த போஸ்ட் கேரளாவில் வைரலாக பரவியயதையடுத்து இன்று மீண்டும் அந்த சர்வீஸ் சென்டர் குழு ஜிஜோ ராஜை தொடர்பு கொண்டு அவரின் காரை எடுத்து சென்றுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு

அதற்கு பதிலாக தற்காலிகமாக அவர் பயன்படுத்த ஒரு காரை அவரிடம் கொடுத்து சென்றுள்ளனர். மேலும் ஜிஜோராஜின் கார் முழுமையாக சரி செய்யப்பட்ட பின்னரே அவரிடம் ஒப்படைப்போம் என்றும், அதன் பின் எந்த பிரச்னையும் ஏற்படாது என்றும் அவர்கள் உறுதியளித்து சென்றுள்ளதாக ஜிஜோராஜ் நம்மிடம் தெரிவித்துள்ளார். மேலும் சர்வீஸ் சென்டர் மேனேஜர் கேட்டு கொண்டாதால் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்த போஸ்டை நீக்கி விட்டார்.

டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு

இது போன்று கார், பைக் தொடர்பான சுவரஸ்யமான அல்லது மோசமான அனுபவங்கள் உங்களுக்கு சமீபத்தில் ஏற்பட்டால் நீங்கள் டிரைவஸ்பார்க் தளத்தை தொடர்பு கொண்டு உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது கீழே உள்ள கமெண்டில் அது குறித்து தெரிவியுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Tata Tiago Problems Faced By The Owner. Read in Tamil.
Story first published: Saturday, June 2, 2018, 14:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X