பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், மத்திய அரசின் திட்டம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால், உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளிலும் முக்கியமான தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டன. மேலும் ஏராளமான முன்னணி நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

இதன் விளைவால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களும் மற்றும் தனி நபர்களும் மட்டுமல்லாது, அரசாங்கங்களும் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள, அதிகமான தொகையை மத்திய, மாநில அரசுகள் தற்போது செலவிட வேண்டியுள்ளது. நிவாரண பணிகள் மற்றும் சலுகைகளை வழங்குவதற்கு அதிகப்படியான நிதி தேவைப்படும் நிலையில், வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளும் தடுமாறும் சூழல் உருவாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய நிதி நெருக்கடிகள் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்துவதற்கு மத்திய அரசு தற்போது திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு, லிட்டருக்கு 3 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலால் வரியை எப்போது உயர்த்துவது? என்பது தொடர்பான இறுதி முடிவு மிக விரைவில் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் இதன் பலன் இந்திய மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த மாதம் சுமார் 45 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது தற்போது 40 டாலர்களாக குறைந்துள்ளது. ஆனால் மத்திய அரசு அதிகப்படியான வரிகளை விதிப்பதால், இதன் உண்மையான பலனை இந்திய மக்கள் அனுபவிக்கவில்லை. சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரியை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் சுமார் 70 சதவீதத்தை நாம் வரியாக செலுத்தி வருகிறோம். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி கலால் வரி உயர்த்தப்பட்டால், இது 75-80 சதவீதமாக உயரலாம். ஆனால் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தினாலும், சில்லறை விலையில் அது எதிரொலிக்குமா? என்பது சந்தேகம்தான்.

பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

அதாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால், சில்லறை விலை மாறாமல் இருக்கலாம். அல்லது சற்றே உயரலாம். ஏற்கனவே கூறியதை போல், கச்சா எண்ணெய் விலை தற்போது மிகவும் குறைவாக உள்ளது. எனவே மத்திய அரசு மனது வைத்து, வரிகளை உயர்த்தாமல் இருந்தாலோ அல்லது குறைத்தாலோ அதன் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

அதாவது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலை வெகுவாக குறையும். ஆனால் மத்திய அரசு வரிகளை உயர்த்தி கொண்டே இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும், அதன் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. அதாவது தொடர்ந்து அதிகப்படியான விலையில் பெட்ரோல், டீசலை வாங்க வேண்டிய சூழல் காணப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க மத்திய அரசு செய்யும் செம ட்ரிக்! என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க

வருவாயை பெருக்கி கொள்வதற்கு, மத்திய அரசு பின்பற்றும் யுக்தி இது. இதனால் பாதிக்கப்பட்டு வருவது என்னவோ வாகன ஓட்டிகள்தான். ஏற்கனவே அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசலை வாங்கி வரும் நிலையில், கலால் வரியை மேலும் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல், வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Taxes On Petrol, Diesel May Go Up Further - Details. Read in Tamil
Story first published: Monday, October 26, 2020, 17:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X