ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லாதவர்களுக்காக ஆசிரியர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லாத மாணவர்களுக்காக ஆசிரியர் செய்து வரும் நல்ல காரியத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லாதவர்களுக்காக ஆசிரியர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஷோரூமில் இருந்து டெலிவரி எடுத்து வரும் வாகனங்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ளும் வழக்கம் பலரிடமும் காணப்படுகிறது. உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் டயர்களை மாற்றி விட்டு பெரிய டயர்களை பொருத்தி கொள்வது மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் மூலம் மாடிஃபிகேஷன் செய்வது பலரும் தங்களுக்கு பிடித்த வகையில் மாறுதல்களை செய்கின்றனர்.

ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லாதவர்களுக்காக ஆசிரியர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்த மாடிஃபிகேஷன்கள் வாகனத்தின் அழகை கூட்டுவதாகவோ அல்லது அதன் செயல்திறனை அதிகரிக்க செய்வதாகவோ இருக்கும். ஆனால் இங்கே ஆசிரியர் ஒருவர் தனது வாகனத்தை நடமாடும் வகுப்பறையாக மாற்றியுள்ளார். ஆன்லைன் மூலம் கல்வி பயில முடியாத மாணவர்களுக்காக இந்த ஏற்பாட்டை அவர் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லாதவர்களுக்காக ஆசிரியர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்து மிக நீண்ட காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எனவே ஆன்லைன் மூலமாக கல்வி கற்க வேண்டிய சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். செல்போன் மற்றும் லேப்டாப்கள் மூலம்தான் ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றனர்.

ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லாதவர்களுக்காக ஆசிரியர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஆனால் கிராமப்புறங்களை சேர்ந்த பலரால், செல்போன் மற்றும் லேப்டாப்களை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி தர முடியாத சூழல் காணப்படுகிறது. இப்படிப்பட்ட மாணவர்களுக்காக, அவர்களின் ஊர்களுக்கே சென்று பாடம் நடத்தி வருகிறார் ஆசிரியர் ருத்ரா ராணா. ஆசிரியர் ருத்ரா ராணாவிடம் யமஹா மோட்டார்சைக்கிள் ஒன்று உள்ளது.

ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லாதவர்களுக்காக ஆசிரியர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்த பைக்கைதான் அவர் நடமாடும் வகுப்பறையாக மாற்றியுள்ளார். மாணவர்களுக்கு பாடங்களை எழுதி கற்பிப்பதற்காக, ஆசிரியர் ருத்ரா ராணா இந்த பைக்கில் பலகை ஒன்றை பொருத்தியுள்ளார். அத்துடன் வெயில், மழை ஆகியவற்றை சமாளிப்பதற்காக குடை ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு பைக்கில் சென்றதும் ருத்ரா ராணா மணியடித்து மாணவர்களை அழைக்கிறார்.

ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லாதவர்களுக்காக ஆசிரியர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

மணி சத்தம் கேட்டதும் மாணவர்கள் ஓடி வந்து அங்குள்ள திண்ணையில் அமர்ந்து கொள்கின்றனர். இதன் பின்னர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பலகை மூலம் தெருவிலேயே அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா பகுதியில்தான் ஆசிரியர் ருத்ரா ராணா மாணவர்களுக்கு இப்படி பாடம் நடத்தி வருகிறார்.

ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லாதவர்களுக்காக ஆசிரியர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

இதுகுறித்து அவர் கூறுகையில், ''மாணவர்களால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்பதால், அவர்களுடைய வீட்டு வாசலுக்கே நான் கல்வியை கொண்டு வருகிறேன். பல மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி பயிலும் வாய்ப்பு இல்லை. எனவே அவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்'' என்றார். இதற்காக ஆசிரியர் ருத்ரா ராணாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆன்லைனில் படிக்கும் வசதி இல்லாதவர்களுக்காக ஆசிரியர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க

ஆனால் ஆசிரியர்கள் இப்படி அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரானை சேர்ந்த ஒரு ஆசிரியர் ஒரே ஒரு மாணவிக்கு பாடம் நடத்துவதற்காக தனது காரை பயன்படுத்தியது நினைவிருக்கலாம். அதாவது கரும்பலகை இல்லாததால், வெள்ளை நிற காரில் பாடங்களை எழுதி அவர் மாணவிக்கு கற்பித்தார்.

காரில் கீறல்கள் விழக்கூடும் என்பதையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. அந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலகட்டத்தில் மாணவ, மாணவிகளின் இருப்பிடங்களுக்கே சென்று பாடம் நடத்தி வரும் இப்படிப்பட்ட ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Teacher Conducting Classes On Yamaha Bike. Read in Tamil
Story first published: Thursday, September 17, 2020, 20:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X