ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த ஆட்டோவை தடுத்து நிறுத்திய போலீசார் அதிர்ச்சியில் நிலை குலைந்தனர்.

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறது. இந்திய சாலைகள் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 1.50 லட்சம் உயிர்களை காவு வாங்கி வருகின்றன. போக்குவரத்து விதிமுறைகளுக்கு வாகன ஓட்டிகள் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காததே இதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

அதிலும் ஆட்டோ டிரைவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை சட்டை செய்வதே கிடையாது. இந்திய சாலைகளில் ஆட்டோக்கள் தாறுமாறாக ஓடி வருகின்றன. அதிலும் ஷேர் ஆட்டோக்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று விடுகின்றன.

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

சாலைகளில் பயணிக்கும்போது ஷேர் ஆட்டோக்களிடம் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் பயணிகளை ஏற்றி, இறக்குவதற்காக ஷேர் ஆட்டோக்கள் திடீர் திடீரென நிற்கும். இன்டிகேட்டர்கள் மூலம் எச்சரிக்கை செய்யாமலேயே திடீர் திடீரென திரும்பும். ஷேர் ஆட்டோக்களை தாறுமாறாக இயக்கும் டிரைவர்களும் கூட சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணம்.

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

ஷேர் ஆட்டோக்கள் என்றால் மற்றொரு முக்கியமான நிகழ்வும் உங்கள் நினைவிற்கு வரும். ஷேர் ஆட்டோ டிரைவர்கள் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் ஏராளமானோரை ஏற்றி செல்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை ஆட்டோக்களில் 4 பேர் (1 டிரைவர் + 3 பயணிகள்) மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

ஆனால் ஷேர் ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான பயணிகள் திணிக்கப்படுகின்றனர். அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஷேர் ஆட்டோ டிரைவர்களின் மனநிலையே அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்ல காரணம். இப்படிப்பட்ட சூழலில் தற்போது சமூக வலை தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயம் உங்கள் கண்களை நீங்களே நம்ப மாட்டீர்கள். ஆம், ஒரு ஆட்டோவில் 24 பேர் பயணம் செய்துள்ளனர்! இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று ஒரு ஆட்டோவில் 24 பேர் பயணம் செய்து வந்துள்ளனர். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த ஆட்டோவை நிறுத்துகிறார்.

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

போலீஸ் அதிகாரி நிறுத்தியதும், அந்த ஆட்டோ டிரைவர் கடுமையாக அதிர்ச்சியடைகிறார். அவரது முகத்தில் பதற்றம் தொற்றிக்கொள்வதை நம்மால் தெளிவாக உணர முடிகிறது. அத்துடன் ஆட்டோவில் பயணம் செய்த பயணிகளும் அதிர்ச்சியடைகின்றனர். இதன்பின் அந்த போலீஸ் அதிகாரி பயணிகளை ஒவ்வொருவராக ஆட்டோவில் இருந்து இறங்கும்படி கூறுகிறார்.

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

இதன்படி பயணிகள் ஒருவர் பின் ஒருவராக இறங்குகின்றனர். அவர்களை போலீஸ் அதிகாரி எண்ணிக்கொண்டே இருக்கிறார். இறுதியில் பயணிகள் அனைவரும் இறங்கி முடித்தபின் போலீஸ் அதிகாரியே அதிர்ச்சியில் உறைந்து விட்டார். நான்கு பேர் பயணிக்க வேண்டிய ஒரு ஆட்டோவில் 24 பேர் பயணம் செய்தால் யார்தான் அதிர்ச்சியடையாமல் இருப்பார்கள்.

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் போலீஸ் கமிஷனர் தற்போது டிவிட்டரில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். தங்கள் பாதுகாப்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே அவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஆனால் இந்த சம்பவம் வேறு எந்த விரிவான தகவல்களும் வெளியாகவில்லை. அத்துடன் தெலங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகமும் (Telangana State Road Transport Corporation - TSRTC) இன்னும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. இந்த வீடியோ மற்றொரு விஷயத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

மக்கள் தங்கள் பயணங்களுக்கு ஆட்டோ மற்றும் பஸ் போன்ற பொது போக்குவரத்து முறைகளைதான் அதிகம் நம்பியுள்ளனர். ஆனால் ஒரு சில இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லை. எனவே மக்கள் இதுபோல் நெருக்கியடித்து கொண்டு பயணம் செய்ய வேண்டியதாகி விடுகிறது.

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

நகர்ப்புறங்களிலும் கூட இந்த நிலை காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு செல்வோர் உள்பட பலரும் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணிப்பதை தினசரி பார்க்க முடியும். அதிலும், கூட்ட நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் கூட படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணிப்பது கொடுமை.

ஒரு ஆட்டோவில் 24 பேரை ஏற்றி சென்ற டிரைவரின் வீடியோ வைரல்! தடுத்து நிறுத்திய போலீசார் நிலை குலைந்தனர்

பஸ்கள் மற்றும் ரயில்களின் கூரையின் மீது அமர்ந்து பயணிக்கும் சம்பவங்களும் கூட இந்தியாவில் நடந்து கொண்டுதான் உள்ளன. இதுபோன்ற முக்கியமான பிரச்னைகளுக்கு அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவது சிரமமே. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
24 Passengers Travelling In One Autorickshaw In Telangana: Shocking Video. Read in Tamil
Story first published: Monday, August 12, 2019, 15:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X