அதிக உயிர்களை காவு வாங்கும் உலகின் அபாயகரமான சாலைகள்!

Written By:

அனுபவமும், திறமையும் மிக்க ஓட்டுனர்களுக்கே சில சாலைகள் மிக சவாலானதாகவும், ஆபத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. அந்த சாலையில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் மரணங்களை வைத்து அவற்றை அபாயகரமானதாக வர்ணிக்கின்றனர்.

மேலும், அந்த சாலைகளின் சூழ்நிலை தகவமைப்பும் திறமைசாலி ஓட்டுனர்களையும் திணற வைக்கிறது. ஒவ்வொரு நொடியிலும் அபாயத்தை தாங்கி நிற்பதோடு, புள்ளிவிபரங்களின்படி, அதிக உயிரிழப்புகள் நடந்த உலகின் மிகவும் அபாயகரமான சாலைகளின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. ஸ்கிப்பர்ஸ் கேன்யான் சாலை, நியூசிலாந்து

01. ஸ்கிப்பர்ஸ் கேன்யான் சாலை, நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டின் ஸ்கிப்பர்ஸ் கேன்யான் சாலை உலகின் மிகவும் மோசமான சாலைகளில் ஒன்று. செங்குத்தான மலையின் பக்கவாட்டில் தொங்கிச் செல்லும் இந்த சாலையின் செங்குத்தான, அதேசமயம் பல ஆபத்தான வளைவுகளையும் கொண்டது. இதில், பயணிக்கும் ஒவ்வொரு நொடியின் மரணத்தை வழுக்கிச் செல்வதற்கு சமம்.

02. ஸோஜி கணவாய், இந்தியா

02. ஸோஜி கணவாய், இந்தியா

காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர்- லே இடையில் அமைந்திருக்கும் இந்தியாவின் உயரமான கணவாய்களில் ஒன்று. தேசிய நெடுஞ்சாலை 1டியில் அமைந்திருக்கும் இந்த கணவாய் வழியாக செல்லும் சாலை வாகன ஓட்டுனர்களுக்கு ஒவ்வொரு நொடியும் ஆபத்தானதாகவே அமைகிறது.

03. குவாலியங் டனல் ரோடு, சீனா

03. குவாலியங் டனல் ரோடு, சீனா

சீனாவில் அமைந்திருக்கும் இந்த சாலை, செங்குத்தான மலைகளின் ஓரத்தில் சுரங்கச் சாலையாக செல்கிறது. அங்குள்ள கிராமத்தினரின் முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சரிவாகவும், பக்கவாட்டில் தடுப்பு இல்லாமலும் செல்கிறது. அப்போது வாகன ஓட்டிகளின் மொத்த வித்தையையும் இறக்க வேண்டியிருக்கும்.

04. லாஸ் கரகோல்ஸ் கணவாய், சிலி

04. லாஸ் கரகோல்ஸ் கணவாய், சிலி

சிலி நாட்டில் அமைந்திருக்கும் மிகவும் அபாயகரமான சாலை. செங்குத்தான மலைகள் மற்றும் ஈரப்பதம் மிகுந்த சாலைகளில் வாகனத்தை வழுக்காமல் ஓட்டிச் சென்று கரை சேருவதே, ஓட்டுனர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைகிறது.

05. ஸ்டெல்வியோ பாஸ், இத்தாலி

05. ஸ்டெல்வியோ பாஸ், இத்தாலி

இத்தாலியின் மிக உயரமான கணவாய்களில் ஒன்றான ஸ்டெல்வியோவை இணைக்கும் சாலையும் வாகன ஓட்டிகளின் ஒட்டுமொத்த ஆற்றலையும் வெளிக்கொணரும் விதத்திலேயே இருக்கிறது. செங்குத்தானதாகவும், பல ஆபத்தான கொண்டை வளைவுகளுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இந்த சாலையிலும் விபத்துக்களின் எண்ணிக்கையும், மரணிப்பவரின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது.

06. காரகோரம் நெடுஞ்சாலை, பாகிஸ்தான்

06. காரகோரம் நெடுஞ்சாலை, பாகிஸ்தான்

நட்பு நெடுஞ்சாலை என்று செல்லமாக அழைக்கப்படும் காரகோரம் நெடுஞ்சாலை வாகன ஓட்டுனர்களுக்கு நட்பாக மட்டும் இருக்காது என்பதை படத்தை பார்த்தே புரிந்து கொள்ளலாம். சீனாவையும், பாகிஸ்தானையும் இணைக்கும் இந்த சர்வதேச சாலை, காரகோரம் மலைத்தொடர் ஊடாக பயணிக்கிறது. மலைச்சரிவுகள், திடீர் வெள்ளப்பெருக்குகளும் கூடுதல் அபாயத்ததை வாகன ஓட்டிகளுக்கு தருகிறது.

 07. ஜேம்ஸ் டால்டன் ஹைவே, அமெரிக்கா

07. ஜேம்ஸ் டால்டன் ஹைவே, அமெரிக்கா

அமெரிக்காவின், அலாஸ்கா பகுதியில் அமைந்திருக்கும் இந்த நெடுஞ்சாலை 667 கிமீ நீளம் கொண்டது. ஆபத்துக்கு கூட வழியில் எதுவும் எதிர்பார்க்க முடியாது. அந்த அளவு அந்திரான பகுதியின் ஊடாக செல்கிறது. அத்துடன், அலாதியாக வீசும் சூறைக்காற்றும் வாகன ஓட்டிகளுக்கு சவாலானதாக இருக்கிறது.

08. ஏ537 நெடுஞ்சாலை, இங்கிலாந்து

08. ஏ537 நெடுஞ்சாலை, இங்கிலாந்து

இங்கிலாந்து நாட்டின் Killer Highway என்று அழைக்கப்படுகிறது. அதிக விபத்துக்களை சந்தித்திருக்கும் இந்த சாலையில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் மூலமாக தெரியவந்திருக்கிறது.

09. ஜலாலாபாத்- காபூர் நெடுஞ்சாலை, ஆப்கானிஸ்தான்

09. ஜலாலாபாத்- காபூர் நெடுஞ்சாலை, ஆப்கானிஸ்தான்

உலகின் மிக மோசமான சாலைகளில் ஒன்றாக கூறப்படுகிறது. இந்த சாலையின் 65 கிலோமீட்டர் தூரம் மிகவும் சவாலானது. அத்துடன், தாலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கமும் மிகுந்த பகுதி.

 10. யங்கஸ், பொலிவியா

10. யங்கஸ், பொலிவியா

உலகின் Death Highway என்று அழைக்கப்படும் உலகின் மிகவும் அபாயகரமான சாலை. இதில், விபத்து நிகழாத நாளே இல்லை எனும் அளவுக்கு மிக மோசமானதாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு 200 முதல் 300 பேர் வரை மரணிப்பதாக புள்ளிவிபரங்கள் அபாயத்தை உணர்த்துகின்றன.

 
English summary
Ten Most Dangerous Roads in the World.
Story first published: Wednesday, November 11, 2015, 15:48 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos