Just In
- 5 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
சீனாவில் டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள அன்டர்க்ரவுண்டு கராஜில், டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் தயாரித்து வரும் முன்னணி எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக மாடல் 3 திகழ்கிறது. தற்போது இந்த எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் இந்தியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் மாடல் 3 எலெக்ட்ரிக் காரைதான் டெஸ்லா நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஷாங்காய் நகரில் டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரில் தீப்பற்றிய சம்பவம் நேற்று முன் தினம் (ஜனவரி 19ம் தேதி) இரவு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதி ஒன்றின் அன்டர்க்ரவுண்டு கராஜில் நிறுத்தப்பட்டிருந்த சமயத்தில் டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரில் தீப்பற்றியுள்ளது. காருக்கு கீழே ஏற்பட்ட மோதல் காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எப்படி தீப்பற்றியது? என்பது தொடர்பாக தற்போது வரை உறுதியாக தகவல் வெளியாகவில்லை.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அன்டர்க்ரவுண்டு கராஜின் நுழைவுவாயிலுக்கு நெருக்கமாக இந்த டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் நிறுத்தப்பட்டிருந்தது. ஷாங்காயில் உள்ள தொழிற்சாலையில் டெஸ்லா நிறுவனம் மாடல் 3 எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தியை தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது.

ஆனால் தீப்பற்றிய மாடல் 3 எலெக்ட்ரிக் கார், ஷாங்காயில் உற்பத்தி செய்யப்பட்டதா? அல்லது இறக்குமதி செய்யப்பட்ட வெர்ஷனா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் சீனாவில் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் தீப்பற்றி எரிவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாகவும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

சீனாவில் உற்பத்தியை தொடங்குவதற்கு முன்னதாக, மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களை டெஸ்லா நிறுவனம் சீனாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்து கொண்டிருந்தது. இதில், ஒரு மாடஸ் எஸ் எலெக்ட்ரிக் கார் கடந்த 2019ம் ஆண்டு தீப்பிடித்தது. ஷாங்காயில் தற்போது டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் காரில் தீப்பிடித்திருக்கும் சம்பவம் தொடர்பாக சிஎன்பிசி செய்தி வெளியிட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் கார்களை விற்பனை செய்து வந்தாலும், இந்தியாவில் இன்னும் வர்த்தகத்தை தொடங்கவில்லை. ஆனால் இந்திய சந்தையில் டெஸ்லா கார்களின் விற்பனை நடப்பாண்டு தொடங்கப்படவுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் விலை குறைவான கார் என்பதால், மாடல் 3 எலெக்ட்ரிக் கார்தான் இந்திய சந்தையில் முதலில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா நிறுவனத்தின் வருகையை இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் நடைபெற்றுள்ள தீ விபத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரிதாக நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதை மறுக்க முடியாது.
Note: Images used are for representational purpose only.