கார் 100 கிமீ வேகத்தில் பறந்தபோது டிரைவர் செய்த காரியம்! வீடியோவை பாத்து அப்படியே உறைந்து போன மக்கள்

100 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனர் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் 100 கிமீ வேகத்தில் பறந்தபோது டிரைவர் செய்த காரியம்! வீடியோவை பாத்து அப்படியே உறைந்து போன மக்கள்

அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா (Tesla). அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் டெஸ்லா நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது. டெஸ்லா நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் கார்களும், உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.

கார் 100 கிமீ வேகத்தில் பறந்தபோது டிரைவர் செய்த காரியம்! வீடியோவை பாத்து அப்படியே உறைந்து போன மக்கள்

டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்படும் முக்கியமான தொழில்நுட்ப வசதிகளில் ஒன்று ஆட்டோபைலட் (Autopilot). காரின் ஸ்டியரிங் வீல் மற்றும் பிரேக் என அனைத்தையும் ஆட்டோபைலட் தொழில்நுட்பமே கட்டுப்படுத்தி கொள்ளும். மேலும் தேவைப்படும் நேரங்களில், வேகத்தையும் தானாகவே கூட்டி, குறைத்து கொள்ளும்.

கார் 100 கிமீ வேகத்தில் பறந்தபோது டிரைவர் செய்த காரியம்! வீடியோவை பாத்து அப்படியே உறைந்து போன மக்கள்

அதாவது டெஸ்லா கார்களில் ஆட்டோபைலட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், ஓட்டுனரின் பணி வெகுவாக குறைக்கப்படும். பொதுவாக ஓட்டுனர்களால் செய்யப்படும் மனித தவறுகள்தான் சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளன. அப்படிப்பட்ட தவறுகள் நிகழாமல் தவிர்த்து, விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதுதான் இதன் முக்கியமான நோக்கம்.

கார் 100 கிமீ வேகத்தில் பறந்தபோது டிரைவர் செய்த காரியம்! வீடியோவை பாத்து அப்படியே உறைந்து போன மக்கள்

அத்துடன் நெடுந்தூர பயணங்களின்போது, ஓட்டுனர் சற்றே ஓய்வாக காரை ஓட்டுவதற்கும் ஆட்டோபைலட் தொழில்நுட்பம் பயன்படும். எனவே இது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அதற்காக காரை ஆட்டோபைலட்டில் போட்டு விட்டு, நாம் பின் இருக்கையில் படுத்து தூங்கி கொண்டே வரலாம் என்பதெல்லாம் கிடையாது. உண்மையில் இது சாத்தியம்தான்.

கார் 100 கிமீ வேகத்தில் பறந்தபோது டிரைவர் செய்த காரியம்! வீடியோவை பாத்து அப்படியே உறைந்து போன மக்கள்

ஆனால் அப்படி செய்வது மிகவும் ஆபத்தானது மற்றும் முட்டாள்தனமானது. டெஸ்லாவின் ஆட்டோபைலட் தொழில்நுட்பம், காரை தானாகவே இயக்கி கொள்ளும் என்றாலும், ஓட்டுனர் இருக்கையில்தான் டிரைவர் அமர்ந்திருக்க வேண்டும். அத்துடன் அவர் ஸ்டியரிங் வீலை பிடித்திருக்க வேண்டும். அதாவது கார் ஆட்டோபைலட்டில் இருந்தாலும், ஓட்டுனர்கள் சாலையில் கவனம் செலுத்த வேண்டும்.

கார் 100 கிமீ வேகத்தில் பறந்தபோது டிரைவர் செய்த காரியம்! வீடியோவை பாத்து அப்படியே உறைந்து போன மக்கள்

அப்படி சாலையில் கவனம் செலுத்தாவிட்டால், அது சட்டப்படி விதிமுறை மீறலாக பார்க்கப்படும். எனினும் டெஸ்லா கார்களின் உரிமையாளர்கள் பலர், இதனை காதில் வாங்கி கொள்வது கிடையாது. டெஸ்லா கார் ஆட்டோபைலட்டில் இருக்கும்போது, ஓட்டுனர்கள் தூங்கி கொண்டு வந்த காணொளி காட்சிகள் கடந்த காலங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

கார் 100 கிமீ வேகத்தில் பறந்தபோது டிரைவர் செய்த காரியம்! வீடியோவை பாத்து அப்படியே உறைந்து போன மக்கள்

அத்துடன் காரை ஆட்டோபைலட்டில் போட்டு விட்டு, ஓட்டுனர்கள் செல்போனில் திரைப்படங்களை பார்த்து கொண்டு வந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதன் காரணமாக விபத்துக்களும் அரங்கேறியுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது காணொளி ஒன்று காட்டுத்தீ போல பரவி வருகிறது.

கார் 100 கிமீ வேகத்தில் பறந்தபோது டிரைவர் செய்த காரியம்! வீடியோவை பாத்து அப்படியே உறைந்து போன மக்கள்

இதில், டெஸ்லா நிறுவனத்தின் கார் ஒன்று ஆட்டோபைலட்டில் தானாக ஓடி கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. ஆனால் ஓட்டுனர் இருக்கையில் யாரும் இல்லை. காரில் ஒரே ஒரு நபர் மட்டுமே இருக்கிறார். அவர் ஓட்டுனர் இருக்கைக்கு பதிலாக, முன் பக்க பாசஞ்சர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, கார் தானாக இயங்குவதை செல்போனில் பதிவு செய்து கொண்டு வருவதை பார்க்க முடிகிறது.

கார் 100 கிமீ வேகத்தில் பறந்தபோது டிரைவர் செய்த காரியம்! வீடியோவை பாத்து அப்படியே உறைந்து போன மக்கள்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இது டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எக்ஸ் (Tesla Model X) கார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆல்பெர்ட் சிப்லென் என்பவரின் முகநூல் பக்கத்தில், இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27ம் தேதி வெளியிடப்பட்ட இந்த காணொளியை, ஏராளமானோர் பார்த்துள்ளனர்.

இந்த காணொளியில் கார் மணிக்கு சுமார் 65 மைல்கள் (மணிக்கு 104 கிலோ மீட்டர்கள்) வேகத்தில் பறப்பதை காண முடிகிறது. இது ஆபத்தான வேகம் என்பதுடன், ஓட்டுனர் தனது இருக்கையில் அமரவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். ஆட்டோபைலட் தொழில்நுட்பத்தை இப்படி தொடர்ந்து தவறாக பயன்படுத்தும் நபர்களால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tesla Model X Driver Hops Into Passenger Seat And Records Car Driving Itself - Video Goes Viral. Read in Tamil
Story first published: Thursday, October 1, 2020, 14:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X