போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

எலக்ட்ரிக் கார்களின் இழுவை திறன் குறித்து சந்தேகம் நிலவி வந்தது. ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார், 1,30,000 கிலோ எடை கொண்ட விமானத்தை இழுத்து, உலக சாதனை படைத்துள்ளது.

By Arun

எலக்ட்ரிக் கார்களின் இழுவை திறன் குறித்து சந்தேகம் நிலவி வந்தது. ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார், 1,30,000 கிலோ எடை கொண்ட விமானத்தை இழுத்து, உலக சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த பிரம்மிப்பூட்டும் செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

நம்ம ஊரு கோயில் பண்டிகை போல்...!

நமது ஊர் கோயில் பண்டிகைகளில், முதுகில் அலகு குத்தி கொண்டு, கார், டெம்போ உள்ளிட்ட வாகனங்களை இழுத்து நம்மை ஆச்சரியப்படுத்துவார்கள். வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக ஒரு சில பக்தர்கள் செய்யும் இந்த சாகசங்களை பார்க்கவே பிரமிப்பாக இருக்கும்.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

அவை எல்லாவற்றையும் மீறும் வகையில், க்வாண்டஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 'ஸ்டண்ட்' ஒன்றை செய்ய முடிவு எடுத்தது டெஸ்லா கார் நிறுவனம்.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

க்வாண்டஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 787-9 டிரீம்லைனர் போயிங் ரக விமானத்தை, தனது மாடல் எக்ஸ் பி100டி எஸ்வியூ எலக்ட்ரிக் கார் மூலமாக, கயிறு கட்டி இழுப்பதுதான் (டவ்விங்) அந்த 'ஸ்டண்ட்'.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

என்னங்க சொல்றீங்க? எலக்ட்ரிக் கார் மூலமாக விமானத்தை இழுப்பதா? அது சாத்தியமா? என்றுதான் தொடக்கத்தில் பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்களின் வாயை எல்லாம் அடைத்துள்ளது டெஸ்லா மாடல் எக்ஸ் பி100டி எஸ்வியூ எலக்ட்ரிக் கார்.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

கின்னஸ் உலக சாதனை...!

திட்டமிட்டபடி, 787-9 டிரீம்லைனர் போயிங் ரக விமானத்தை, கயிறு கட்டி இழுத்து, அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது டெஸ்லா மாடல் எக்ஸ் பி100டி எஸ்வியூ எலக்ட்ரிக் கார். இது ஒரு புதிய உலக கின்னஸ் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

787-9 டிரீம்லைனர் போயிங் ரக விமானம், பொதுவாக பயணிகளுடன் சேர்த்து டேக் ஆப் ஆகும்போது, 2,54,000 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

ஆனால் டெஸ்லா மாடல் எக்ஸ் பி100டி எஸ்வியூ எலக்ட்ரிக் கார், விமானத்தை இழுக்கும்போது, அதில் பயணிகள் யாரும் இல்லை. எனினும் விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. காரானது, விமானத்தை இழுத்த நேரத்தில், விமானத்தின் ஒட்டுமொத்த எடையானது 1,30,000 கிலோவாக இருந்தது.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

பயணிகள் எலக்ட்ரிக் வாகனம் ஒன்றால் இழுக்கப்பட்ட அதிகபட்ச எடை இதுதான். இதற்கு முன்பாக வேறு எந்த பயணிகள் எலக்ட்ரிக் வாகனமும் இவ்வளவு பெரிய எடையை இழுத்ததே இல்லை. எனவேதான் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், டெஸ்லா மாடல் எக்ஸ் பி100டி எஸ்வியூ எலக்ட்ரிக் காரால் இடம்பெற முடிந்திருக்கிறது.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

போயிங் ரக விமானத்தை சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு, டெஸ்லா மாடல் எக்ஸ் கார் இழுத்து சென்றது. அந்த பிரம்மிப்பூட்டும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

மிரட்டலான டார்க் திறன்...!

அதிகபட்ச டார்க் திறன் உள்ள ஒரு காரால்தான் இவ்வளவு பெரிய எடையை இழுக்க முடியும். டெஸ்லா மாடல் எக்ஸ் பி100டி எஸ்வியூ எலக்ட்ரிக் காரின் மோட்டார்கள், 1,072 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகின்றன. இதனால்தான் அந்த காரால் கின்னஸ் உலக சாதனை படைக்க முடிந்திருக்கிறது.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்தில் வைத்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த வீடியோவை டெஸ்லா நிறுவனம் தற்போதுதான் வெளியிட்டுள்ளது.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

பெட்ரோல், டீசல் கார்களால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகள் வேக வேகமாக எலக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகின்றன.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

இந்த சூழலில் எலக்ட்ரிக் கார்களின் முக்கியத்துவத்தையும், அதன் இழுவை திறனையும் உணர்த்தும் வகையில் ஒரு விழிப்புணர்வுக்காகவே இந்த ஸ்டண்ட் நிகழ்த்தி காட்டப்பட்டுள்ளது.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

எலக்ட்ரிக் கார்களின் இழுவை திறன் குறித்து பெரிய சந்தேகம் நிலவி வந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கிடைத்து விட்டது. ஒரு எலக்ட்ரிக் கார் இவ்வளவு பெரிய எடையை இழுத்துள்ளதா? என அனைவரும் வாயடைத்து போயுள்ளனர்.

போயிங் ரக விமானத்தை கயிறு கட்டி இழுத்து உலக சாதனை படைத்த எலக்ட்ரிக் கார்! பிரம்மிப்பூட்டும் வீடியோ!!

முன்னதாக வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், தனது முதுகில் கயிற்றை கட்டி கொண்டு, விமானத்தை இழுத்து சென்றுள்ளார்!! அந்த திகைப்பூட்டும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி இந்த ஸ்டண்ட் நிகழ்த்தப்பட்டது. இதுவும் ஒரு கின்னஸ் உலக சாதனைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Tesla Model X enters record books by towing a Boeing Airplane. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X