அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

சாலை விபத்தில் கார் இரண்டு துண்டுகளாக பிளந்த நிலையில், அதன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பெரும்பாலான விபத்துக்களுக்கு வாகனங்களை ஓட்டுபவர்கள் செய்யும் தவறுகளே முக்கியமான காரணமாக உள்ளது. தாங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளால் விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பறிபோவதை ஒரு சிலர் உணர்வதே கிடையாது.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

உலகில் தினமும் பல்வேறு சாலை விபத்துக்கள் நடைபெற்றாலும் கூட, ஒரு சில சாலை விபத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சாலை விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அதிர்ஷ்டவசமாக இந்த சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

அப்படி இருந்தும் இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்த காரணம் உள்ளது. இந்த விபத்தில் சிக்கிய கார் இரண்டு துண்டாக உடைந்து நொறுங்கியுள்ளது. அதுவும் உடைந்து நொறுங்கியது டெஸ்லா நிறுவனத்தின் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் கடுமையான சேதத்தை சந்தித்திருப்பது டெஸ்லா மாடல் எக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Tesla Model X Electric SUV) கார் ஆகும்.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. அந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றுதான் மாடல் எக்ஸ். இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஆகும். நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார் (Nissan GT-R Supercar) மோதியதால், ஒரு டெஸ்லா மாடல் எக்ஸ் இரண்டாக நொறுங்கியுள்ளது.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

இந்த விபத்து அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. வெள்ளை நிற நிஸான் ஜிடி-ஆர் கார் மோதியதால், டெஸ்லா மாடல் எக்ஸ் இரண்டு துண்டுகளாக நொறுங்கியுள்ளது. ஆனால் டெஸ்லா மாடல் எக்ஸ் காரை ஓட்டி வந்தவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

ஆனால் நிஸான் ஜிடி-ஆர் காரில் வந்தவர்கள் காயம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெஸ்லா மாடல் எக்ஸ் காரை ஓட்டி வந்தவரின் பெயர் ஜோஸ் டியாஸ் என கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு காலில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நிஸான் ஜிடி-ஆர் காரில் இரண்டு பேர் வந்துள்ளனர்.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

அவர்கள் இருவருமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நிஸான் ஜிடி-ஆர் கார் அதிவேகத்தில் வந்ததே இந்த விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை விளக்கும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

உலகில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு அதிவேகமே முக்கியமான காரணமாக உள்ளது. இதுதவிர குடிபோதையில் வாகனங்களை இயக்குவதாலும் ஏராளமான விபத்துக்கள் நிகழ்கின்றன. எனவே இந்த 2 தவறுகளையும் செய்யும் வாகன ஓட்டிகள் மீது அனைத்து நாடுகளிலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதிசயம்... விபத்தில் 2 துண்டுகளாக பிளந்த கார்... தூசியை தட்டி விட்டு கெத்தாக நடந்து வந்த டிரைவர்!!

இருந்தபோதும் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனக்கூறி, கடும் எதிர்ப்புகளையும் மீறி புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: WPLG Local 10/YouTube

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tesla Model X Crashes with Nissan GT-R : Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X