இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... ஹெல்மெட்கள் பற்றிய இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஹெல்மெட்களில் என்னென்ன வகைகள் இருக்கின்றன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... ஹெல்மெட்கள் பற்றிய இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

முதல் முறையாக ஹெல்மெட் வாங்க செல்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஏனெனில் ஹெல்மெட்களில் நிறைய வகைகள் உள்ளன. எனவே ஹெல்மெட் வகைகளை பற்றி தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியமானது. ஹெல்மெட்களில் என்னென்ன வகைகள் உள்ளன? என்பதை இந்த செய்தியில் உங்களுக்கு விளக்குகிறோம்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... ஹெல்மெட்கள் பற்றிய இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆஃப் ரோடு ஹெல்மெட்கள் (Off-Road Helmets)

ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த வகை ஹெல்மெட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்ளும்போது அதிக தூசி மற்றும் அழுக்கு கண்களில் விழும். ஆனால் ஆஃப் ரோடு ஹெல்மெட்களை பயன்படுத்தும்போது, கண்களில் தூசி மற்றும் அழுக்கு விழுவதை கூடுமானவரை குறைக்க முடியும்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... ஹெல்மெட்கள் பற்றிய இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அதற்கு ஏற்ற வகையில் ஆஃப் ரோடு ஹெல்மெட்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். கண்களுக்கு சிறப்பான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஆஃப் ரோடு ஹெல்மெட்களில் வைசருக்கு பதிலாக சன்க்ளாஸ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அத்துடன் ஆஃப் ரோடு ஹெல்மெட்களில் நிறைய ஏர் வெண்ட்களும் வழங்கப்பட்டிருக்கும்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... ஹெல்மெட்கள் பற்றிய இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்கள் (Full Face Helmets)

இதுதான் வழக்கமான ஹெல்மெட். ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்களுடன் நமக்கு நன்கு பரிட்சயம் இருக்கிறது. பெயருக்கு ஏற்றபடி ரைடரின் முழு முகத்தையும் இந்த ஹெல்மெட் கவர் செய்யும். இதன் மூலம் ரைடருக்கு அதிகபட்ச பாதுகாப்பு கிடைக்கும். காற்று, மழை மற்றும் வெளிப்புற சத்தத்தில் இருந்து இந்த ஹெல்மெட்கள் போதுமான அளவிற்கு பாதுகாப்பை வழங்குகின்றன.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... ஹெல்மெட்கள் பற்றிய இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

தொலைதூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்கள் மிகவும் சௌகரியமாக இருக்கும். எனவே நீங்கள் அடிக்கடி தொலைதூர பயணங்களை மேற்கொள்பவர்கள் என்றால், ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்களை வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம். உங்களின் அதிகபட்ச பாதுகாப்பையும் இது உறுதி செய்யும்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... ஹெல்மெட்கள் பற்றிய இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்கள் (Open Face Helmets)

குறுகிய தொலைவு பயணிப்பவர்களும், நகர பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும் ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். ரைடரின் தலை, நெற்றி மற்றும் காதுகளை இந்த ஹெல்மெட்கள் கவர் செய்து விடும். ஆனால் முகத்தின் முன் பகுதியை, அதாவது தாடை போன்ற பகுதிகளை கவர் செய்யாது.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... ஹெல்மெட்கள் பற்றிய இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்கள் சற்று எடை குறைவானதாக இருக்கும். எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சூழல்களில் ரைடருக்கு நல்ல சௌகரியம் கிடைக்கும். ஆனால் ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்களை மிகவும் பாதுகாப்பானதாக கருத முடியாது. எனவே ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்களை வாங்குவதற்கு முன் நன்கு பரிசீலனை செய்வது நல்லது.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... ஹெல்மெட்கள் பற்றிய இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

மாடுலர் ஹெல்மெட்கள் (Modular Helmets)

ஃபுல் ஃபேஸ் மற்றும் ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்களுக்கு இடையேயான க்ராஸ் என மாடுலர் ஹெல்மெட்களை கூறலாம். இந்த வகை ஹெல்மெட்களில் முன் பகுதியை மேலே உயர்த்தி கொள்ள முடியும். எனவே ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்களை ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்கள் போலவும் பயன்படுத்தி கொள்ளலாம். ரைடருக்கு எப்படி தேவையோ அந்த வகையில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... ஹெல்மெட்கள் பற்றிய இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் இது சற்று அதிக எடை கொண்டது. அதேபோல் இந்த ஹெல்மெட்களை பயன்படுத்தினால், அதிக வேகத்தில் பயணிக்கும்போது காற்றின் சத்தம் கேட்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வகை ஹெல்மெட்களும் இந்தியாவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து கொண்டுள்ளது.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... ஹெல்மெட்கள் பற்றிய இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த தகவல்கள் ஹெல்மெட் வாங்கும்போது உங்களுக்கு உதவும் என நம்புகிறோம். ஹெல்மெட் வகைகளை அறிந்து கொள்ளும் அதே நேரத்தில், இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவருடன், பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.

இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே... ஹெல்மெட்கள் பற்றிய இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு ஹெல்மெட்கள்தான் அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகின்றன என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆனால் இங்கே பலர் ஹெல்மெட் அணிவது கிடையாது. இதில் நீங்களும் ஒருவர் என்றால், அந்த பழக்கத்தை இன்றோடு விட்டு விடுங்கள். சிறிய தொலைவுதான் பயணிக்க வேண்டியுள்ளது என்றாலும், கட்டாயமாக ஹெல்மெட் அணியுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The different types of two wheeler helmets available in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X