அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

இந்தியாவில் ஸ்மார்ட் போனின் வருகைக்கு பிறகு இந்திய மக்களும் ஸ்மார்ட்டாக மாறி வருகின்றனர். இதற்கு தகுந்தார் போல் மத்திய அரசும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல வசதிகளை செய்து கொடுக்கிறது.

By Balasubramanian

இந்தியாவிற்கு ஸ்மார்ட் போன் வந்ததற்கான பெரும்பாலான பலனை, கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் தான் அனுபவிக்கின்றன. மக்கள் இன்டெர்நெட்டில் போக்கும் அநேக நேரங்கள் இந்த இரு நிறுவனங்களின் தளங்களில்தான்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

இவ்வாறு மக்களை முழ்கி கிடக்க செய்யும் அளவிற்கு பல வசதிகளை கொடுக்கிறது கூகுள் நிறுவனம், இதற்கு முக்கிய காரணம் அவர்கள் மக்களுக்கு தேவையானதை சரியாக புரிந்து அதை எளிமையாக அவர்கள் கையில் வழங்குகின்றனர்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

சில ஆண்டுகளுக்கு முன்பு தெரியாத ஊர்களுக்கு சென்று தொலைந்து விடாதே என்று வீட்டில் பெரியவர்கள் சொல்லுவார்கள். இனி அதற்கான வாய்பே இல்லை. உலகில் நீங்கள் எந்த மூலைக்கு சென்றாலும் உங்கள் கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் கூகுள் மேப் உதவியுடன் நீங்கள் பத்திரமாக வீடு திரும்பிவிடலாம்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்தும் பலர் தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு யாரிடமும் விசாரிப்பதில்லை நேடியாக கூகுள் ஆப்ஸ்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அது தான் சரியான மற்றும் குறைந்த தூரத்தில் உள்ள வழியை காட்டுகிறது.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

இப்படியாக தினம் தோறும் உங்கள் வாழ்வோடு ஒன்றாக ஒன்றிபோன கூகுள் மேம் ஆப்பில் நீங்கள் வியக்கும் பல ஆச்சரியமான விஷயங்கள் இருக்கின்றன. அடங்கப்பா இவ்வளவு இருக்கிறதா என நீங்கள் வியக்கும் வகையில் உள்ள இந்த அம்சங்களை கீழே ஒவ்வொன்றாக பார்ப்போம்

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

விரைவான செயல்பாடு

மார்க்கெட்டில் உள்ள மேம் ஆப்ளிகேஷன்களை காட்டிலும் கூகுள் மேப் ஆப் மிக விரைவாக செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள இண்டர்நெட்டின் வேகத்தை மனத்தில் வைத்து இந்த ஆப் உருவாக்கப்பட்டிருக்கலாம். குறைந்த நேரத்தில் தகவல்களை தந்து விடுகிறது.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

தேவையான தகவல்கள் மட்டும்

கூகுள் மேப் உங்களுக்கு தரும் தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ள வகையில் வரிசைபடுத்துகிறது. உதாரணமாக நீங்கள் உங்கள் அருகில் உள்ள உணவகம் குறித்து தேடுகின்றீர்கள் என்றால் அருகில் உள்ள உணவகம் எது, அதில் எது சைவ உணவகம், எது அசைவ உணவகம், என பல தகவல்களை தரும். உங்களுக்கு வேண்டியதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

வானிலை தகவல்கள்

நீங்கள் வெளியூர் பயணம் செய்கிறீர்கள் என்றால் குகூள் மேம் ஆப்களில் அதை தேடும் போது நீங்கள் செல்லும் ஊரில் வானிலை எப்படி இருக்கிறது? நீங்கள் செல்லும் நேரத்தில் வானிலை நிலவரங்கள் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் செல்லும் பாதையில் உள்ள வானிலை நிலவரங்கள் என்ன என வானிலை குறித்த முழு தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

சரியான பாதையை வழங்கும்

நீங்கள் இருக்கும் இடத்தையும், செல்ல வேண்டிய இடத்தையும் கூகுளில் வழங்கியுடன் அது நீங்கள் செல்ல வாய்ப்புள்ள பாதைகளை ஒரே ஸ்கிரில் வழங்கும், அதில் சிறந்த பாதையை தனியாக எடுத்துக்காட்டும். அதன் மூலம் குறைந்த தூரப்பாதை/ குறைந்த பயண நேர பாதையை நீங்கள் தேர்ந்தேடுக்கலாம்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

இருப்பிடம் பகிர்தல்

நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் செல்போன் ஜி.பி.எஸ் கொண்டு கண்டுபிடிப்பதுடன். அந்த இடத்தை உங்கள் நண்பருடன் பகிரலாம். இது அவர் உங்கள் இடத்திற்கு வருவதற்கான வழியை அவர் எளிமையாக பெற உதவியாக இருக்கும்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

வெளிநாடுகளில் சிலர் தங்கள் குழந்தை பள்ளிக்கு செல்லும் போது கூகுள் ஆப்ஸ் மட்டும் இயக்கும் வகையில் ஒரு போனை தங்கள் கூகுள் மேப்புடன் இணைத்து குழந்தையின் பள்ளி பேக்கில் வைத்து விடுகின்றனர். அதை வைத்து குழந்தையின் இருப்பிடத்தை அறிந்து கொள்கின்றனர். இதன் மூலம் குழந்தை கடத்தலை தடுக்கலாம்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

வாய்ஸ் கமெண்ட்

கூகுள் மேப்பில் நாம் பயணம் செய்யும் போது அந்த பயணம் குறித்த தகவல் அதாவது நாம் பயணம் செய்யும் ரோடு அடுத்து எவ்வளவு தூரத்தில் எந்த திசையில் திரும்ப வேண்டும், திரும்ப வேண்டிய இடம் அருகில் வந்ததும் அதற்கான தகவல் என இது போன்ற தகவல்களை வாய்ஸ் மூலமாக தருகிறது. மேலும் இந்த வாய்ஸ் கமெண்ட் ஐபோன் பயன்பாட்டாளர்ளுக்கு மிக துள்ளியமாக புரியும் படி அமைக்கப்பட்டிருக்கிறது.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

உங்கள் மொழியில்

கூகுள் நிறுவனம் பல மொழிகளில் தங்கள் சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக தமிழ் மொழியும் அதில் அடங்கும். என உங்களுக்கு வேண்டிய தகவல்களை உங்கள் மொழியிலேயே வழங்குகிறது, கூகுள் நிறுவனம்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

பிழை திருத்தம்

கூகுள் மேப்ஸ்களில் நீங்கள் தேடும் வார்த்தைகளை பிழையுடன் கொடுத்தாலும் நீங்கள் எதை தேட முயற்சிக்கிறீர்கள் என்று அத யூகித்து அதற்கான முடிவுகளை வழங்குகிறது. ஒரு வேலை அது சரியாக யூகிக்காமுடியாவிட்டாலும், நீங்கள் கொடுத்துள்ள தகவலை வைத்து அதற்கு பொருந்தும் சில தகவல்களை கொடுக்கிறது. நீங்கள் கூகுளில் முடிவுகள் இல்லை என்ற பதில் வருவதை பார்ப்பது மிக கடினம்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

நேரத்தை கணக்கிடும்

நீங்கள் கூகுள் மேப்பை பயன்படுத்தி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்கிறீர்கள் என்றால் நீங்கள் எதில் செல்கிறீர்கள் என்பதை பொருத்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இன்னும் எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும். எத்தனை மணிக்கு நீங்கள் அங்கு அடைய வாயப்புள்ளது என்ற தகவல்களையும் தரும்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

ஸ்டிரீட் வியூ

கூகுள் சில பகுதிகளில் மட்டும் ஸ்டிரீட் வியூ என்ற வசதியை தருகிறது. அந்த வசதி மூலம் நீங்கள் தெருவில் நடந்து செல்வது போன்ற உணர்வை பெறலாம். இந்த தொழிற்நுட்பம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. எனினும் அனைத்து இடங்களிலும் இந்த வசதியில்லை இந்தியாவில் சில தனியார் இடங்ளுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

டிராபிக் தகவல்கள்

கூகுள் மேப் நீங்கள் செல்லும் பகுதியில் உள்ள டிராபிக் குறித்த தகவல்களை தருகிறது. இதன் மூலம் அந்த பாதை வழியாக செல்லலாமா, அல்லது வேறு பாதையை தேர்ந்தேடுக்கலாமா என்று நீங்கள் முன்னரே முடிவு செய்யலாம்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

இப்படி பல வசதிகள் கூகுள் நிறுவனம் உங்களுக்காக தருகிறது. இதை பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய தகவல்களை நீங்கள் உடனே பெறுவதுடன் உங்கள் பயணத்தையும் எளிதாக திட்டமிடலாம் அதே நேரத்தில் இந்த கூகுள் மேப் ஆப்பில் குறைகள் இல்லாமலும் இல்லை. அவற்றையும் கீழே காணலாம்

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

ஐபோனில் ஸிங்க் இல்லை

ஆப்பிள் நிறுவன மொபைல், ஐபேட் ஆகியவற்றில் கூகுள் மேப் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் மேப்புடன் கூகுள் மேப்பை ஸிங்க் செய்ய முடியவில்லை , இதில் உள்ள தகவல்களை அதற்கும், அதில் உள்ள தகவல்களை இதற்கும் பெறமுடிவதில்லை.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

லேன் திசை காட்டுவதில்லை

நீங்கள் ஸ்டிரீட் வியூ பயன்படுத்தும்போது நீங்கள் செல்லும் வாகனத்தையும் திசையையும் பொறுத்து நீங்கள் ரோட்டின் எந்த பகுதியில் செல்ல வேண்டும் என்ற தகவலை அது சொல்லுவதில்லை.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

மாற்று பாதையை காட்டுவதில்லை

நாம் பயணத்தின் போது டிராபிக் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ நாம் மாற்று பாதையில் பயணிக்க விரும்பினால் அந்த பாதையை கூகுளில் பெற வழியில்லை. எனினும் நாமா கண்டுபிடித்து அந்த பாதையில் சில தூரம் சென்ற பிறகு நமது தேவையை அறிந்து நாம் செல்ல வேண்டிய பாதையை பரிந்துரைக்கும்.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

அதிக பேட்டரி பயன்பாடு

கூகுள் மேப்ஸ் ஆப்பை நாம் பயன்படுத்தும் போது நம் மொபைல்/டேப்பில் பேட்டரியின் பயன்பாடு அதிக அளவு இருக்கிறது. இதனால் சீக்கரம் நமது செல்போன்/டேப்பில் சார்ஜை இழக்கும் சூழ்நிலை நேரிடுகிறது.

அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!

எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் அதையும் மீறி கூகுள் மேப்புகள் மக்களுக்கு அதிக பயன்னுள்ள தகவல்களை வழங்குவதில் முதலிடத்தில்தான் உள்ளது. மேலும் கூகுள் நிறுவனமும் மேப் ஆப்பில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்து பயன்படுத்துபவர்களுக்கு மேலும் சில அம்சங்களையும் எளிமையையும் வழங்கி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Google Maps App – Pros & Cons. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X