பாவம் விட்றுங்க... தி கிரேட் காளி செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

வைரலாக பரவி வரும் வீடியோவில், தி கிரேட் காளி செய்த காரியத்தை பார்த்து, அவரது ரசிகர்கள் உறைந்து போயுள்ளனர்.

பாவம் விட்றுங்க... தி கிரேட் காளி செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

டபிள்யூடபிள்யூஇ (WWE) போட்டிகளில், இந்தியர்களை பார்ப்பது அரிதான ஒரு விஷயம்தான். ஆனால் அந்த குறையை போக்கியவர் தி கிரேட் காளி. இந்தியரான தி கிரேட் காளி, டபிள்யூடபிள்யூஇ போட்டிகளில் ஒரு கலக்கு கலக்கியதால், இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் ரசிகர்களையும் ஈர்த்துள்ளார்.

பாவம் விட்றுங்க... தி கிரேட் காளி செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

தி கிரேட் காளி தற்போது இந்தியாவில்தான் இருக்கிறார். அவர் பல்வேறு வாகனங்களில் வலம் வருவதை நாம் பல முறை பார்த்துள்ளோம். இந்த வரிசையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக்கை, தி கிரேட் காளி ஓட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சாதாரண 100 சிசி கம்யூட்டர் பைக்கான (Commuter Bike) ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் அவரிடம் சிக்கி படாதபாடுபட்டு விட்டது.

பாவம் விட்றுங்க... தி கிரேட் காளி செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

பிரம்மாண்ட உருவம் கொண்ட தி கிரேட் காளியுடன் பார்க்கையில் அந்த பைக் மெலிந்து காணப்படுகிறது. தி கிரேட் காளி 7 அடிக்கும் மேல் உயரம் கொண்டவர். எனவே அவருடன் சேர்த்து பார்க்கும்போது, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக், ஏதோ சிறுவர்கள் விளையாடும் பொம்மை போல் காட்சியளிக்கிறது. இந்த பைக்கை தி கிரேட் காளி கரடு முரடான இடத்தில் ஓட்டியுள்ளார்.

பாவம் விட்றுங்க... தி கிரேட் காளி செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

மோசமான மேற்பரப்பு மற்றும் தி கிரேட் காளியின் ஹெவி வெயிட் ஆகிய காரணங்களால் அந்த பைக் 'ஸ்டக்' ஆகி விட்டது. ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பிரீமியம் கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கில் 97.2 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7.94 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்க கூடியது.

பாவம் விட்றுங்க... தி கிரேட் காளி செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

ஏர் கூல்டு இன்ஜின் மற்றும் 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை இந்த பைக் பெற்றுள்ளது. தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் பைக் எதிர்பார்ப்பவர்களை குறிவைத்து, இந்த மாடல் களமிறக்கப்பட்டுள்ளதால், ஒரு லிட்டருக்கு 83 கிலோ மீட்டர் மைலேஜை வாரி வழங்கும் என ஹீரோ நிறுவனம் கூறுகிறது. ஆனால் பெர்ஃபார்மென்ஸ் பைக்காக இது வடிவமைக்கப்படவில்லை.

பாவம் விட்றுங்க... தி கிரேட் காளி செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

தி கிரேட் காளி போல் எடை கொண்டவர்கள் இந்த பைக்கை ஓட்டுவதை பார்க்க ஆச்சரியமாகதான் உள்ளது. ஆனால் பைக் அல்லது கார் போன்ற வாகனங்களில் தி கிரேட் காளியை பார்ப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளுடன் தி கிரேட் காளியை நம்மால் பார்க்க முடிந்துள்ளது.

பாவம் விட்றுங்க... தி கிரேட் காளி செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

ஆனால் அதுவும் கூட தி கிரேட் காளியுடன் பார்க்கையில், பொம்மை போலதான் இருந்தது. இளைஞர்களின் விருப்பமான மாடல்களில் ஒன்றான பஜாஜ் பல்சருக்கும் கூட இதே நிலைமைதான். பஜாஜ் பல்சர் பைக்கை அவர் பொது சாலையில் ஓட்டியது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மாஸ் புரொடக்ஸன் வாகனங்கள், சராசரி உயரம் கொண்டவர்களுக்கு பொருந்த கூடிய வகையில்தான் வடிவமைக்கப்படுகின்றன.

பாவம் விட்றுங்க... தி கிரேட் காளி செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

இதனால் மிகவும் அதிக உயரம் கொண்டவர்களோ அல்லது மிகவும் குறைவான உயரம் கொண்டவர்களோ அந்த வாகனங்களை இயக்கும்போதும், பயணிக்கும்போதும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தி கிரேட் காளியிடம் சிக்கி, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மோட்டார்சைக்கிள் படாதபாடுபடும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இந்த வீடியோ திகைப்பை ஏற்படுத்துகிறது.

பைக்குகள் தவிர கார்களுடனும் தி கிரேட் காளியை இதற்கு முன்பு நம்மால் பார்க்க முடிந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா சுமோ காருடன் தி கிரேட் காளியை நாம் பார்த்தோம். ஆனால் அவருக்கு அந்த கார் அவ்வளவு சௌகரியமாக இல்லை. சமீப கால அளவில் பார்த்தால், டொயோட்டா பார்ச்சூனர் காருடன் காளியை காண முடிந்துள்ளது.

ஆனால் அதிலும் கூட தி கிரேட் காளி அவ்வளவு வசதியாக இருக்கவில்லை. அவரது பிரம்மாண்ட உருவம்தான் இதற்கு காரணமாக உள்ளது. அதே சமயம் தி கிரேட் காளியின் கவனத்திற்கு ஒரு விஷயத்தை கொண்டு செல்வதற்கு நாங்கள் விரும்புகிறோம். பைக் ஓட்டும் சமயங்களில் அவர் எந்த பாதுகாப்பு உபகரணங்களையும் அணிவதில்லை.

விபத்துக்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். எனவே இரு சக்கர வாகனங்களை ஓட்டும் சமயத்தில், ஹெல்மெட் அணிவது மிகவும் முக்கியம். குறைவான வேகத்தில் செல்லும்போது கீழே விழுந்தால் கூட, தலையில் காயம் ஏற்பட்டு, மரணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால்தான் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

பாவம் விட்றுங்க... தி கிரேட் காளி செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

ஆனால் இந்தியாவில் டூவீலர்களில் பயணிக்கும் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிவது கிடையாது. முடி கொட்டுகிறது, வியர்க்கிறது என ஏதாவது சாக்கு போக்குகளை சொல்லி ஹெல்மெட் அணிவதை அவர்கள் தவிர்க்கின்றனர். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பாதுகாப்பு உபகரணமே ஹெல்மெட்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

பாவம் விட்றுங்க... தி கிரேட் காளி செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க அரசு முயற்சி செய்து வரும் நிலையில், மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள தி கிரேட் காளி போன்றவர்கள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இதன் மூலம் அவரது ரசிகர்களும் இதனை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Great Khali Rides Hero HF Deluxe 100cc Commuter Bike - Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X