ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கப்படுகிறது? என்பதற்கான பிரம்மிக்க வைக்கும் காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

விமானங்கள் வானத்தில் அதிக நேரம் பறக்க கூடியவை. 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, விமானத்தின் வெளிப்புற அழகை யாரும் கண்டு ரசிக்க போவதில்லை. எனவே விமானங்களுக்கு பெயிண்ட் தேவையற்றது என ஒரு சிலர் நினைக்கலாம். ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. உண்மையில் விமானங்களுக்கு பெயிண்ட் மிகவும் அவசியம்.

ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

அழகு என்ற பொதுவான காரணத்திற்காக மட்டுமல்லாது, வேறு ஒரு சில முக்கியமான காரணங்களுக்காகவும் விமானங்களுக்கு பெயிண்ட் மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அந்த சுவாரஸ்யமான அறிவியல் காரணங்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள் செய்திக்குள் செல்லலாம்.

ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

வெப்பம், புற ஊதா கதிர்களை துரத்தி அடிக்க!

வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்கள் (UV - Ultraviolet Light) ஆகிய இரண்டையும் விரட்டுவதுதான், விமானங்கள் பெயிண்ட் செய்யப்படுவதற்கான மிக முக்கியமான காரணம். வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்கள் என இரண்டாலும் விமானங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அவை விமானங்களுக்கு பாதுகாப்பு இல்லாதவை.

ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

உண்மையில் தரையில் இருப்பதை காட்டிலும், 30 ஆயிரம் அடி உயரத்தில் புற ஊதா கதிர்கள் 2 மடங்கு அதிக வலிமையாக இருக்கும். வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டால், விமானத்தின் ஏர் ஃப்ரேமில் (Airframe) பாதிப்புகள் ஏற்படலாம். இதை தவிர்ப்பதற்காகவே விமானங்களுக்கு பெயிண்ட் அடிக்கப்படுகிறது.

ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

விமானங்களை நன்றாக கவனித்தால் உங்களுக்கு மற்றொரு விஷயம் தெரியவரும். உலகில் பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில்தான் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும். விமானங்கள் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுவதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமான காரணத்தை மட்டும் இங்கே கூறுகிறோம்.

ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

கருப்பு மற்றும் இதர அடர்த்தியான வண்ணங்களுடன் ஒப்பிடும்போது வெள்ளை நிறம்தான் வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்களை துரத்தும் திறனை மிகவும் அதிகமாக பெற்றுள்ளது. உலகில் இருக்கும் பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பதற்கு இதுவே மிகவும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

வெள்ளையை தவிர வேறு வண்ணங்களில் விமானங்களே இல்லையா? என்ற சந்தேகம் தற்போது உங்களுக்கு வரலாம். இந்த கேள்விக்கு 'இருக்கின்றன' என்பதுதான் பதில். கருப்பு நிறத்தில் கூட விமானங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் வெள்ளை நிற விமானங்களுடன் ஒப்பிடும்போது, மற்ற நிற விமானங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

அரிப்பில் இருந்து பாதுகாக்க!

அரிப்பிற்கு எதிரான பாதுகாப்பை பெயிண்ட் வழங்குகிறது. பொதுவாக விமானங்கள் பல்வேறு வகையான மெட்டீரியல்கள் மூலம் உருவாக்கப்படுகின்றன. ஒரு சில விமானங்கள் ஸ்டீல் ஃப்யூஸலேஜை (Steel Fuselage) கொண்டிருக்கும். வேறு சில விமானங்களோ அலுமினியம் ஃப்யூஸலேஜை (Aluminum Fuselage) பெற்றிருக்கும்.

ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

இங்கே நாங்கள் ஃப்யூஸலேஜ் என்று கூறுவது, விமானத்தின் முக்கிய பகுதியாகும். இன்ஜின்கள், இறக்கைகள் மற்றும் வால் ஆகியவற்றை இது குறிக்காது. உங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும்படி சொல்வதென்றால், விமானத்தின் உடற்பகுதிதான் ஃப்யூஸலேஜ் என அழைக்கப்படுகிறது. சரி, எப்படி பார்த்தாலும் மெட்டல் (Metal) அல்லது மெட்டல் அலாய் (Metal Alloy) மூலமாகவே விமானங்கள் தயார் ஆகின்றன.

ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

ஈரப்பதத்தால் பாதிக்கப்படும்போது மெட்டல்களும், மெட்டல் அலாய்களும் அரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் பெயிண்ட் இதனை தடுக்கிறது. விமானத்தின் ஃப்யூஸலேஜ் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு இடையே தடையை ஏற்படுத்துவதன் மூலமாக அரிப்பை தடுக்கும் பணியை பெயிண்ட் கச்சிதமாக மேற்கொள்கிறது.

ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

காற்றில் ஈரப்பதம் இருந்தாலும் கூட, அது பெயிண்ட் செய்யப்பட்ட ஃப்யூஸலேஜில்தான் இறங்கும். எனவே பெயிண்ட்டிற்கு அடியில் இருக்கும் மெட்டல் அல்லது மெட்டல் அலாய் உலர்ந்தே காணப்படும். இதன் காரணமாக அது துருப்பிடிக்காது. விமானங்கள் பெயிண்ட் செய்யப்படுவதற்கு இது மற்றொரு மிக முக்கியமான காரணம் ஆகும்.

ஸ்டைலுக்காக மட்டும் அல்ல! உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா? இதை கேள்விபட்டதே இல்லயே!

இவ்வளவு நாட்களாக அழகிற்காக மட்டுமே விமானங்கள் பெயிண்ட் செய்யப்படுகின்றன என பலர் நினைத்து கொண்டிருந்திருக்கலாம். அழகிற்காகவும் விமானங்கள் பெயிண்ட் செய்யப்படுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அழகிற்காக மட்டுமே விமானங்கள் பெயிண்ட் செய்யப்படுவதில்லை. கூடவே வெப்பம், புற ஊதா கதிர்கள் மற்றும் அரிப்பு ஆகியவற்றிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் சேர்த்தே விமானங்கள் பெயிண்ட் செய்யப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The real reasons behind painting the airplane
Story first published: Monday, June 20, 2022, 19:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X