எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்ற சிறப்பு தொகுப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம்.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஒரு போலீஸார் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பாரானால் உங்களின் ஒரு சில சிறு விதிமீறல்களுக்குகூட உங்களின் ஓட்டுநர் ரத்து செய்ய அவர்களால் முடியும். ஏனென்றால், பல விதிமீறல்களுக்கு தண்டனையாக உடனடி ஓட்டுநர் உரிம ரத்தையே முன் மொழியப்படுகின்றது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

இருப்பினும், பெரும்பாலான போக்குவரத்து போலீஸார் விதிமீறல்களுக்கான தண்டனையாக, வெறும் அபராங்களுடன் முடித்துக்கொள்கின்றனர்.

அந்தவகையில், எந்தெந்த விதிமீறல்களுக்கெல்லாம் போலீஸார் நம்முடைய லைசென்ஸை ரத்து செய்கின்ற அளவிற்கு அதிகாரம் இருக்கின்றது என்பதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

இந்த பதிவில் தரப்பட்டுள்ள சில தகவல்கள் உங்களுக்கு அதிர்ச்சியை வழங்கலாம். இந்த சிறு தவறுக்குக்கூடவா ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வார்கள்...? என கேட்கத் தோன்றலாம்.. அதைப் பற்றிய தகவலைதான் கீழே பார்க்கவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்...

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

அதிக ஒலியில் இசையை ரசித்தல்

அண்மைக் காலங்களாக ஒலி மாசு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பெரு நிறுவனங்களில் உள்ள எந்திரங்கள் மற்றும் அதிகளவிலான வாகனங்கள் போன்றவற்றால் அது நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட ஆரம்பித்துள்ளது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் போலீஸார் அதிக சத்தத்தில் ஒலிக்கப்படும் இசைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தூண்டப்படுகின்றனர். குறிப்பாக, பயணத்தின்போது காரில் அதிக சத்தத்துடன் இசையைக் கேட்பதால் பின்னால் வரும் வாகனத்தைப் பற்றி அறிந்துகொள்வதில் தடை ஏற்படுகின்றது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

இதனால் விபத்து போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஆகையால், போலீஸார் இந்த விதி மீறலுக்கு ரூ. 100 என்ற அபராதத்தை வழங்குகின்றனர். இந்த விதிமீறலில் சட்டத்திற்கு புறம்பான மியூசிக் சிஸ்டம் அளவுக்கு அதிகமான ஒலியில் பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்த வாகனத்தின் ஓட்டுநரின் லைசென்ஸைக் கூட போலீஸார் பறிமுதல் செய்ய முடியும்.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

இதுபோன்ற விதிமீறல்கள் இந்தியாவில் மிகவும் பொதுவான ஒன்றுதான். ஏனென்றால், பல கார்களில் காணப்படும் வாகன மாடிஃபிகேஷன்களில் இத்தகைய செயல்பாடே அதிகளவில் காணப்படுகின்றது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

முக்கியமான பகுதிகளில் வேக வரம்பை மீறுதல்

பள்ளிகள், மருத்துவமனைகள், கட்டுமான தளங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்கள் போன்றவை அதி முக்கியமான இடங்களாக கருதப்படுகின்றன. ஆகையால், இதுபோன்ற இடங்களில் மணிக்கு 25 கிமீ வேக வரம்பை தாண்டக்கூடாது என போக்குவரத்து வாகன சட்டம் கூறுகின்றது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

தொடர்ந்து, இதுபோன்ற இடங்களை குறிப்பிட்டு காட்டும் வகையில், வேகத் தடைகள் மற்றும் அடையாள பலகைகள் வைக்கப்படுகின்றன.

இருப்பினும், ஒரு சிலர் அவற்றைக் கண்டுகொள்ளாமல் உச்சபட்ச வேகத்தில் சென்று விதிமீறலில் ஈடுபடுகின்றனர். இத்தகைய விதிமீறலுக்கும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்கின்ற அதிகாரம் போலீஸாருக்கு உள்ளது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

மேப்பைத் தவிர வேறு எதற்காகவும் செல்போனை பயன்படுத்தக் கூடாது

புதிய இடங்களைச் சென்றடைய தற்போது செல்போன் மிக முக்கியமானதாகிவிட்டது. இதில், உள்ள நேவிகேஷன் உலகில் எந்த மூலைக்கும் செல்ல வழிகாட்டிக் கொடுக்கும். ஆகையால், பயணத்தின்போது இந்த பயனுக்காக மட்டுமே செல்போன் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

மாறாக, அழைப்புகளை ஏற்க அல்லது மேற்கொள்ளவோ செய்யக்கூடாது. மேலும், இயர்போன் மூலம் இசையைக் கேட்டலும் கூடாது. இதுபோன்ற தவறுகள் சில நேரங்கள் கவனத்தைச் சிதைத்து விபத்து வழிவகுக்கும். ஆகையால் இந்த விதிமீறலுக்கும் கூட ஓட்டுநர் உரிமத்தை போலீஸாரால் ரத்து செய்ய முடியும்.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

அழைப்புகளுக்கு ப்ளூ டூத் பயன்படுத்துதல்

செல்போன்தான் பயன்படுத்தக்கூடாது சொல்லீட்டிங்க. ப்ளூடூத்துமா என கேள்விக் கேட்கத் தோன்றலாம். பயணத்தின்போது அழைப்புகளை ஏற்பதன்மூலம் உங்களின் கவனம் சிதறக்கூடும் அது சில நேரங்களில் விபத்து போன்ற அசாதாரணமான சூழ்நிலை உருவாக்க வழிவகுக்கும் என கருதப்படுகின்றது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

ஆகையால், கார்களில் அல்லது பைக்குகளில் பயணிக்கும்போது ப்ளூடூத்களைப் பயன்படுத்தக்கூடாது என போலீஸார் திட்டவட்டமாக கூறுகின்றனர். இந்த குற்றம் தொடர்ச்சியாக செய்யப்பட்டதைப் போலீஸார் கண்டால், உங்களின் ஓட்டுநர் உரிமத்தை அவர்கள் ரத்து செய்ய நேரிடலாம்.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

ஜீப்ரா க்ராஸிங்கை கடந்து வாகனத்தை நிறுத்துதல்

இந்தியச் சாலைகளில் காணப்படும் பொதுவாகன பிரச்னைகளில் ஒன்று வெள்ளைக் கோட்டை (சிக்னலில் நிறுத்துமிடம்) தாண்டி நிறுத்துவது. சாலையைக் கடப்பவர்களுக்கு இடையூறு வழங்கும் வகையில் குறுக்காக வாகனத்தை நிறுத்துவதன் மூலம் வயதான பாதசாரிகள் மிகுந்து சிரமத்திற்குள்ளாகின்றனர்.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

சில நேரங்களில் சாலையை கடக்க முடியாமல் தத்தளிக்கும் சூழல்கூட உருவாகின்றது. இதுபோன்று பாதசாரிகளுக்கு இடையூறாக நிற்கும் வாகனங்களைப் போலீஸார் சில நேரங்களில் வேறு வழி மாறி திரும்பிச் செல்ல வைக்கின்றனர்.

பல நேரங்களில் அபாரதம் விதிக்கின்றனர். சில முக்கியமான இடங்களில் இதுபோன்ற தவறு நிகழுமேயானால் அந்த வாகன ஓட்டியின் ஓட்டுநர் ரத்து செய்தல் அல்லது பறிமுதல் செய்தல் நடவடிக்கை போலீஸாரால் மேற்கொள்ளப்படுகின்றது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

நடை பாதையில் வாகனத்தை ஓட்டுதல்

நடைபாதை நடப்பதற்கே என சாலையில் அடையாள கம்பம் வைக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் சிக்னலை சீக்கிரம் கடக்க வேண்டும் என்பதற்காக நடைபாதையை பயன்படுத்துகின்றனர்.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

அவ்வாறு, பயன்படுத்துவதன் மூலம் பாதசாரிகள் நடப்பதில் தடை ஏற்படுகின்றது. அதுமட்டுமின்றி, சில நேரங்களில் நடைபாதையில் நடக்கும் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதும் சூழல்கூட ஏற்படுகின்றது. இதனை தவிர்க்கும் விதமாக போலீஸார் அபராதத்தை வழங்கி வருகின்றனர். ஆனால், இந்த தவறுக்குக்கூட ஓட்டுமர் உரிமத்தை ரத்து செய்யலாம் வாகன சட்டம் கூறுகின்றது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

அதிக ஒலியை எழுப்பும் பிரஷ்ஷர் ஹாரன்கள்

பிரஷ்ஷர் ஹாரன்கள் அதிக ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மற்ற சாலை பயனர்களையும் அதிர்ச்சியடையச் செய்கின்றது. இதற்காகவே பிரஷ்ஷர் ஹாரன்கள் பயன்படுத்த தடைச் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில வாகன ஓட்டிகள் சட்டத்திற்கு புரம்பாக இந்த அதிக அழுத்தம் கொண்ட ஹாரன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

இத்தகைய தடைச் செய்யப்பட்ட கருவியைப் பயன்படுத்துவது மிகப்பெரிய குற்றமாக போக்குவரத்துச் சட்டம் கருதுகின்றது. ஆகையால், அத்தகைய பயனருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் விதமாக அபராதம் அல்லது ஓட்டுநர் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

அதிவேக லேனை பயன்படுத்துவது மற்றும் குறுக்கிடுவது

பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் வளைந்து, நெலிந்து, புகுந்துச் செல்வதை நம்மால் காண முடிகின்றது. அத்தகைய வாகன ஓட்டிகள் சிலர் குறிப்பிட்ட லேனைக் கடந்து பயணிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இது வேகமாக வரும் வாகனங்களுக்கு தடையாக இருப்பதுடன் சில நேரங்களில் விபத்திற்கு வழி வகுக்கின்றது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

மேலும், சில நேரங்களில் வேக வரம்பையும் மீறுவர். அத்தகையோருக்கான தண்டனையாக அபராத செல்லாண் அல்லது உரிமம் ரத்து போன்ற நடவடிக்கை தொடுக்கப்படுகின்றது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

ஆம்புலன்ஸ் செல்ல தடைாக நிற்தல்

வளர்ந்த நகரங்களில் காணப்படும் சாதாரண விஷயமாக இது இருக்கலாம். ஆனால், உண்மையில் அவசர சென்றுக் கொண்டிருக்கும் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் செல்வது போக்குவரத்துச் சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும்.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

பலர் ஆன்புலன்ஸுக்கு குறுக்காக செல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஒரு சிலர் ஆம்புலன்ஸின் பின்னாடியே ஒட்டுண்ணியைப் போல் சிக்னலைக் கடக்கின்றனர். இத்தகைய விதிமீறல்வாதிகளுக்கு தண்டனையாக அபராதச் செல்லாணும், சில நேரங்களில் ஓட்டுநர் உரிமம் செய்யப்படுகின்றது.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

பொது சாலைகளில் பந்தயம்

பந்தயங்களை தனியார் சாலைகள் மற்றும் பந்தயங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் மட்டுமே செய்ய வேண்டும். பொது சாலையில் பந்தயத்தில் ஈடுபட விரும்பினால் அது உங்களை சில நாள் ஜெயில் கம்பியை எண்ண வழி வகுக்கும். ஏனென்றால், பொதுசாலையில் ரேஸ் செய்வதனால் பல்வேறு பின் விளைவுகள் ஏற்படும்.

எந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...

எனவே, இதுபோன்ற ரேஸிங்கிற்கு எதிராக போலீஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஜெயில் தண்டனை அல்லது லைசென்ஸ் ரத்து போன்ற அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
These 10 Traffic Offence Will Allow Your Driving License Seize. Read In Tamil.
Story first published: Friday, February 21, 2020, 13:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X