டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

மஹாராஷ்டிராவில் டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து இரு சக்கர வாகனத்தை இளைஞர்கள் இருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் தொடர்ச்சியாக நான்கு முறை இதுபோன்ற சம்பவம் அரங்கேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் டெஸ்ட் டிரைவ் செய்வதாகக் கூறி பைக்கை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் இணையதளப் பக்கம் மூலம் யூஸ்டு பைக்குகளை வாங்கவதைப் போல் அணுகும் அந்த நபர்கள், பைக்கை பார்வையிடுவதைப் போன்று நடித்து திருடிச் சென்றுள்ளனர்.

டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

பிப்ரவரி மாதம் 1ம் தேதியில் இருந்து இதுவரை தொடர்ச்சியாக நான்குக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அரங்கேறியிருப்பதால் புனே நகர் வாசிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

முன்னதாக ஆன்லைனில் விலையுயர்ந்த யூஸ்டு பைக்குகளைப் பார்வையிடும் அந்தக் கொள்ளைக் கும்பல், அந்த தளத்தின் வழியாக பைக்கின் உரிமையாளர்களைத் தொடர்புகொள்கின்றனர். பின்னர், பைக்கை பார்வையிடுவதற்காக இரண்டு அல்லது அதற்கும் மேலாக வரும் நபர்கள், தாங்கள் பைக் வாங்க வந்திருப்பதாகக் கூறி பைக்கின் ஓனரிடம் பேச ஆரம்பிக்கின்றனர்.

டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

மேலும், தங்களுக்கு பைக் பிடித்திருப்பதாகவும், அதன் மீது சற்று விலையைக் குறைக்கும்படியும் பைக் உரிமையாளரிடம் பேரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, பைக் உரிமையாளரிடம் நூதனமாகப் பேசி பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும் என்று அவர்களிடம் முறையிட்டுகின்றனர்.

டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

அவர்களிடம் நம்பிக்கை வார்த்தைக் கூறி ஆசையை அதிகரித்து நயவஞ்சமாகப் பேசி பைக்கை எடுத்து டெஸ்ட் டிரைவ் செய்ய செல்கின்றனர். அவ்வாறு பைக் எடுத்துச் சென்ற அந்த நபர்கள் பல மணி நேரமாகியும் திரும்பி வருவதில்லை. இந்த சூழ்ச்சுமத்தை அறியாத பைக்கின் உரிமையாளர், விலையுயர்ந்த பைக்கை களவு கொடுத்துவிட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்று, அம்மாநிலத்தில் பல இளைஞர்கள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

இதுகுறித்து, சமீபத்தில் பைக்கை பறிகொடுத்த சர்தக் ரிசரியா என்ற இளைஞர் கூறியதாவது, "நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பைனான்சியராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள பைக்கை விற்பனைச் செய்வதுக்காக, ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்திருந்தேன். அந்த தளத்தின் வழியாக் என்னைத் தொடர்புக்கொண்ட ஒரு நபர் தன்னை சஞ்சய் என அறிமுகம் செய்துகொண்டார்.

டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

பின்னர், பைக்கை வாங்குவதுக்கு தனக்கு விறுப்பம் இருப்பதாக தெரிவித்த அவர், நேரில் வந்து பார்வையிட வேண்டும் என என்னிடம் கூறினார். நானும் பைக்கை விற்பனையைச் செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக என்னுடைய விலாசத்தைக் கொடுத்து வரவழைத்தேன். அவ்வாறு கடந்த 3ம் தேதி வந்த இரு நபர்கள் பைக்கை பார்வையிட்டுவிட்டு பேரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும் எனக் கூறி பைக்கை எடுத்துச் சென்றனர்.

டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

தாங்கள் இருவராக வந்திருப்பதால், நாங்கள் இருவரும் பைக்கச் செக் செய்ய வேண்டும் எனக் கூறி பைக்கை எடுத்துச் சென்றனர். ஆனால், சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவேயில்லை. இதையடுத்து தான், பாரதி வித்யபீத் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து தகவல் அளித்தேன்" என்றார்.

டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

மேலும், இச்சம்பவம் குறித்து பாரதி வித்யபீத் காவல் நிலையத்தின் முதன்மை காவல் ஆய்வளரைத் தொடர்புகொண்டபோது, இச்சம்பவம் போன்று ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் தனது 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை பறிகொடுத்துள்ளார். மேலும், கண்டோன்மென்ட் காவல் நிலையத்திலும் இதேபோல பைக் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மொத்தம் புனேவில் மட்டும் இதுபோன்று நான்குக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

மேலும், நான்கு கொள்ளைச் சம்பவங்களும் ஒரே பாணியில் நடைபெற்றுள்ளது. ஆகையால், இந்த நான்கு இடங்களிலும் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது ஒரே கும்பலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆன்லைன் பைக் கொள்ளையர்களை நாங்கள் தீவிரமாக தேடி வருகின்றோம்.

டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

மேலும், பைக்கை விற்க நினைக்கும் இளைஞர்கள், இதுபோன்று டெஸ்ட் டிரைவ் கொடுப்பதற்கு முன்னால், பைக்கை வாங்க வரும் நபர்களின் ஏதேனும் சான்று அல்லது பொருட்களை வாங்கி வைத்துக்கோள்ள வேண்டும். இல்லையென்றால், டெஸ்ட் டிரைவ் செய்யும்போது நீங்களும் உடன் சென்றால் திருட்டு தவிர்க்கப்படும் என அறிவுரைக் கொடுத்துள்ளனர்.

டெஸ்ட் டிரைவ் செய்வதைப் போல் நடித்து பைக் திருட்டு: தொடர்ச்சியாக கைவரிசைக் காட்டிய பலே கொள்ளையர்கள்!

மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் புனே நகரத்தில் தொடர்ச்சியாக ஒரே மாதத்தில் நான்குக்கும் மேற்பட்ட இடங்களில் பைக் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Thieves Use Test Ride Trick To Stole Two Wheelers. Read In Tamil.
Story first published: Saturday, February 23, 2019, 18:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X