India
YouTube

விமான பயணத்திற்கு இவ்வாறான ஆடை இல்லாமல் போய்டாதீங்க!! இதில் இவ்வளவு மேட்டரு இருக்கா!

பொதுவாக விமானங்களில் பயணிக்கும்போது மிகவும் குளிர்வது ஏன்? வாருங்கள் இதற்கான காரணத்தை இனி தொடர்ந்து இந்த செய்தியில் விவாதிப்போம்.

விமான பயணத்திற்கு இவ்வாறான ஆடை இல்லாமல் போய்டாதீங்க!! இதில் இவ்வளவு மேட்டரு இருக்கா!

விமானத்தில் பயணிப்பது என்பது உண்மையில் சிறிய சுற்றுலா செல்வது போன்றது. ஏனெனில் விமான பயணத்திற்கு என்றே நீங்கள் பிரத்யேகமாக சில உபகரணங்களை எடுத்து செல்ல வேண்டும். அத்தகையவைகளில் ஒன்று கம்பளி ஆடைகள் ஆகும்.

விமான பயணத்திற்கு இவ்வாறான ஆடை இல்லாமல் போய்டாதீங்க!! இதில் இவ்வளவு மேட்டரு இருக்கா!

ஏனெனில் பயணத்தின்போது விமானத்தின் கேபினுக்குள் சற்று அதிகமாகவே குளிரும். அளவில் சிறிய கார்களிலேயே ஏசி தேவைப்படுகிறது, அப்படியிருக்க அவ்வளவு பெரிய விமானத்தில் தேவைப்படாதா என நீங்கள் கேட்பது புரிகிறது. விமானங்களில் ஆடம்பர அம்சத்திற்காக மட்டுமில்லாமல், மருத்துவ காரணங்களுக்காகவும் ஏசி பயன்படுத்தப்படுகின்றன.

விமான பயணத்திற்கு இவ்வாறான ஆடை இல்லாமல் போய்டாதீங்க!! இதில் இவ்வளவு மேட்டரு இருக்கா!

அதாவது, உயரத்தில் பறப்பதாலும், கேபின் அழுத்தம் மற்றும் அங்கு நிலவும் வெப்ப நிலையாலும் விமானத்தின் கேபினுக்குள் இருக்கும் பயணிகளுக்கு தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். இதனை ஹைபோக்ஸியா என மருத்துவர்கள் அழைக்கின்றனர். போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காததாலும், அதிக அழுத்தம் மற்றும் உலர் வெப்ப நிலையாலும் ஏற்படக்கூடிய இந்த பிரச்சனையினால் உடலில் இரத்தம் ஓட்டம் பாதிப்படையும்.

விமான பயணத்திற்கு இவ்வாறான ஆடை இல்லாமல் போய்டாதீங்க!! இதில் இவ்வளவு மேட்டரு இருக்கா!

இதன் விளைவாக உடலில் ஆங்காங்கே தோல் திட்டுத்திட்டாக சிவப்பு நிறத்தில் மாறும். தொடர்ந்து அதே சூழலில் இருந்தோமேயானால், எளிதில் மாற்ற முடியாத அளவிற்கு முகத்திலும், கை, கால்களிலும் சில இடங்கள் கருப்பு (அ) அடர் நீல நிறத்தில் மாறக்கூடும். பயணிகளுக்கு இவ்வாறான பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவே விமானத்தின் கேபினுள் குறைந்த வெப்பநிலை கடைப்பிடிக்கப்படுகிறது.

விமான பயணத்திற்கு இவ்வாறான ஆடை இல்லாமல் போய்டாதீங்க!! இதில் இவ்வளவு மேட்டரு இருக்கா!

சாதாரணமாக கார்களில் ஏசி போடாமல் முழுவதுமாக ஜன்னல் கண்ணாடிகளை அடைந்துக்கொண்டு பயணம் செய்தாலே சற்று நேரத்தில் தலைவலி எடுக்க ஆரம்பித்துவிடும். அப்படி இருக்கையில், 30,000 - 40,000 அடி உயரத்தில், சூரியனை மேலும் நெருங்கியவாறு பறக்கும் விமானத்தில் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.

விமான பயணத்திற்கு இவ்வாறான ஆடை இல்லாமல் போய்டாதீங்க!! இதில் இவ்வளவு மேட்டரு இருக்கா!

ஆதலால் விமானத்தினுள் நடுங்க வைக்கும் அளவிற்கு ஏசியை போடுவார்கள், அதற்கேற்ப தயாராக பயணத்தை மேற்கொள்ள பாருங்கள். ஆனால் உண்மையில், பயணத்தின்போது விமானத்திற்குள் நிலவும் வெப்ப நிலையை சிலரால் எளிதாக எதிர்கொள்ள முடியும். அதாவது, எப்போதும் ஏசி அறைக்குள் பணிப்புரிபவர்கள் மற்றும் குளிர் மிகுந்த வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு.

விமான பயணத்திற்கு இவ்வாறான ஆடை இல்லாமல் போய்டாதீங்க!! இதில் இவ்வளவு மேட்டரு இருக்கா!

ஏனெனில் விமானத்தினுள் வெப்ப நிலையானது சராசரியாக 22 டிகிரி செல்சியஸில் இருந்து 24 டிகிரி செல்சியஸிற்குள் கடைப்பிடிக்கப்படும். இது நமது சென்னையில் குளிர்காலங்களில் நிலவும் மிகவும் குறைந்தப்பட்ச வெப்பநிலையை காட்டிலும் 1 டிகிரி - 2 டிகிரி மட்டுமே குறைவு. ஆகையால் இதனை இளம் வயதினரால் அடர்த்தியான ஆடைகளின் மூலமாகவே தாங்கிக்கொள்ள முடியும்.

விமான பயணத்திற்கு இவ்வாறான ஆடை இல்லாமல் போய்டாதீங்க!! இதில் இவ்வளவு மேட்டரு இருக்கா!

வயது முதிர்ந்தோருக்கு தான் கம்பளி ஆடைகள் தேவைப்படும். பயணத்தின்போது விமானத்தினுள் முக்கியமாக மணிக்கு ஒருமுறையாவது ரெஸ்ட் ரூம் வரையில் நடக்க பாருங்கள். ஏனென்றால், இவ்வாறு உடலுக்கு வேலை கொடுக்கும்போது வியர்வை வெளியேறுவதினால் குளிர் அவ்வளவாக தெரியாது. ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் மற்றவர்களை காட்டிலும் குளிர் அதிகமாக தெரியும்.

விமான பயணத்திற்கு இவ்வாறான ஆடை இல்லாமல் போய்டாதீங்க!! இதில் இவ்வளவு மேட்டரு இருக்கா!

குளிர் அதிகமாக உள்ளதென வீட்டில் மாற்றுவதை போல விமானத்தினுள் ஏசியின் வெப்ப அளவை பயணிகளால் மாற்ற இயலாது. இதற்கான கண்ட்ரோல் விமானி அல்லது பணிப்பெண்களிடம் இருக்கும். நீங்கள் மாற்றுமாறு கூறினாலும் அவர்களால் பெரியதாக மாற்றம் செய்ய இயலாது. ஏனெனில் ஒவ்வொரு ஏர்லைனும் விமானத்தினுள் வெப்ப நிலையில் தனிப்பட்ட நிலைப்பாட்டை கடைப்பிடிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
This is why it s so cold on airplanes
Story first published: Wednesday, August 3, 2022, 16:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X