Just In
- 4 hrs ago
525எச்பி ஆற்றலில், ஆற்றல்மிக்க டிஃபெண்டர் காரை உலகளவில் வெளியிட்டது லேண்ட் ரோவர்!! இந்தியாவர வாய்ப்பிருக்கா?
- 5 hrs ago
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்? ரோடு டெஸ்ட் ரிவியூ!
- 7 hrs ago
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- 9 hrs ago
ஹெக்டர் எஸ்யூவி காரின் உற்பத்தியில் புதிய மைல்கல்... பெண்களுக்கு பெருமை சேர்த்த எம்ஜி மோட்டார்...
Don't Miss!
- News
தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குறைந்த செலவில் படுக்கை அறையுடன் வீடாக மாறிய கார்... இந்தியா முழுவதும் பயணம் செய்யும் கேரள தம்பதி...
கேரள தம்பதியினர் தங்களது காரையே வீடாக மாற்றிக்கொண்டு, இந்தியா முழுவதும் பயணம் செய்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கேரளாவின் திருச்சூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஹரி கிருஷ்ணன் (31) - லட்சுமி கிருஷ்ணா (23). டின்பின் ஸ்டோரிஸ் என்ற யூ-டியூப் சேனலை இவர்கள் நடத்தி வருகின்றனர். இந்த சேனலை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து, அந்த அனுபவங்களை பார்வையாளர்களுடன் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதுபோன்ற யூ-டியூப் சேனல்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் ஹரி கிருஷ்ணன் - லட்சுமி கிருஷ்ணாவை பற்றி மட்டும் நாம் இங்கே பேசி கொண்டிருக்க நிறைய காரணங்களும் இருக்கின்றன. ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியை அவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்துள்ளனர். அந்த காரில்தான் அவர்கள் பயணம் செய்கின்றனர்.

பயணம் செய்வது மட்டுமல்லாது, சாப்பிடுவது, உறங்குவது என அனைத்தையுமே அவர்கள் அந்த காரில்தான் செய்து கொண்டுள்ளனர். சரியாக சொல்வதென்றால் அவர்கள் அந்த காரில்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த வகையில் பார்த்தால் அவர்களின் பயண கதைகள் தனித்துவமானது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், பயண அனுபவங்களை அவர்கள் யூ-டியூப் சேனல் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சூழலில், புதிய பயண தொடர் ஒன்றை அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கினர். இந்த பயண தொடரில், ஹரி கிருஷ்ணன் - லட்சுமி கிருஷ்ணா தம்பதியினர் தற்போது வரை கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் என 4 மாநிலங்களை கடந்துள்ளனர். கேரளா திரும்புவதற்கு முன்பாக அவர்கள் இன்னும் நிறைய மாநிலங்களுக்கு பயணம் செய்யவுள்ளனர்.

பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு பயணம் செய்த பிறகுதான் அவர்கள் கேரளாவிற்கு வரவுள்ளனர். ஹரி கிருஷ்ணன் - லட்சுமி கிருஷ்ணா தம்பதியினர் தங்களது ஹூண்டாய் கிரெட்டா காரின் பின் பகுதியை தற்காலிக படுக்கை அறையாக மாற்றியுள்ளனர்.

இந்த படுக்கை அறையில்தான் அவர்கள் இரவை கழிக்கின்றனர். இந்த காரில் நிறைய யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட்களும் உள்ளன. அத்துடன் சிங்கிள் பர்னர் ஸ்டவ் ஒன்றையும் அவர்கள் தங்களுடன் வைத்துள்ளனர். மேலும் 5 கிலோ கொண்ட சிறிய சிலிண்டர் ஒன்றும் அவர்களிடம் இருக்கிறது. இந்த சிலிண்டரின் கேஸ் தீர்ந்து விட்டால், மீண்டும் நிரப்பி கொள்ளலாம்.

இதன் மூலம் பாதுகாப்பான இடங்களில் காரை நிறுத்தி அவர்கள் சமைத்து கொள்கின்றனர். காரை தங்கள் பயணத்திற்கு ஏற்ப மாற்றி கொள்வதற்கு அவர்கள் வெறும் 4 ஆயிரம் ரூபாயை மட்டுமே செலவு செய்துள்ளனர். ஹரி கிருஷ்ணன் - லட்சுமி கிருஷ்ணா இருவருக்குமே பயணம் செய்வதில் ஆர்வம் அதிகம். எனவே இந்த பயணத்தை அவர்கள் ரசித்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் காரில் பயணம் செய்வதில் சில நடைமுறை சிக்கல்களையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இரவு நேரங்களில் காரை நிறுத்துவதற்கு பாதுகாப்பான இடத்தை கண்டறிய நீண்ட நேரம் ஆவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அவர்களின் தூக்கம் தாமதமாகிறது. அதேபோல் சரியான நேரத்தில் வீடியோவை எடிட்டிங் செய்து அப்லோடு செய்வதிலும் சில பிரச்னைகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஹரி கிருஷ்ணன் - லட்சுமி கிருஷ்ணா தம்பதியினர் கூறுகையில், '' இதுபோன்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என தம்பதிகளுக்கு நாங்கள் பரிந்துரைப்போம். பயணங்களில் இருந்து நாங்கள் பெற்ற அனுபவங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. அவை எங்களை சிறந்த மனிதர்களாக மாற்றியுள்ளன.
பலருடன் கலந்துரையாடி அவர்களிடம் இருந்து கற்று கொள்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. பயணங்கள் எங்களை பணிவானவர்களாக மாற்றுகின்றன. இந்த அற்புதமான அனுபவங்கள் கிடைத்ததற்காக நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம். நமது நாடு அற்புதமானது. ஒவ்வொரு இடமும் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு கதையை தன்னகத்தே கொண்டுள்ளது'' என்றனர்.