அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்: காப்பாற்றிய தொழில்நுட்பம் - திக் திக் வீடியோ!

மணிக்கு 135 கிமீ வேகத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர், இடைமறித்த டிப்பர் லாரி நடந்தது என்ன... திக் திக் வைரல் வீடியோவை உங்களது பாதுகாப்பு கருதி இந்த பதிவில் வெளியிட்டுள்ளோம்.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

சாலைகளில் எந்த அளவிற்கு வாகனங்கள் அதிகரித்து வருகிறதோ, அதற்கேற்ப அவைகளால் ஏற்படும் பின்விளைவுகளும் குறைவின்றி அதிகரித்து வருகிறது. அவ்வாறு சாலையில் ஏற்படும் விபத்து மற்றும் இழப்புகளைத் தவிர்க்கும் விதமாக போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து பாதுகாப்புச் சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், வருகின்ற ஏப்ரம் மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து இரு சக்கர வாகனங்களும் ஏபிஎல் அல்லது சிபிஎஸ் என்னும் பிரேக் சிஸ்டத்தைக் கட்டயமாக பொருத்த வேண்டும் என மத்திய உத்தரவிட்டுள்ளது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

அதில், 125cc அல்லது அதற்கும் மேலுள்ள cc-யைக் கொண்டு இயங்கும் இரு சக்கர வாகனங்கள் அனைத்திலும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு எனப்படுகின்ற (ABS-Anti Lock Breaking) பிரேக்கிங் சிஸ்டம் பொருத்த வேண்டும்.

அதேபோல, 125cc-க்கு குறைந்த திறனுள்ள அனைத்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களிலும் சிபிஎஸ் (CBS) எனப்படுகின்ற கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த நடைமுறையானது விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொருந்தாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு (ABS) மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தி வாகனத்தை உரிய நேரத்தில் நிற்கவைக்க உதவும். மேலும், வளைவுகளில் வாகனத்தை சிறப்பாக கையாளவும் இந்த சிஸ்டம் பெரும் உதவியாக இருக்கும். இந்த முறையில் வாகனத்தை பிரேக் செய்யும்போது, சக்கரங்கள் மாட்டிக்கொள்ளாமல் அதாவது, வாகனத்தின் சக்கரம் சூழலாமல் லாக்காகி கொள்வது தவிர்க்கப்படுகிறது.

மேலும், இந்த முறையில் பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் முழுமையாக நிறுத்தப்படாமல், சற்று விட்டு விட்டு பிடித்து நிக்க வைக்கும். இதனால் வேகம் இயல்பான கட்டுபாட்டுக்குள் இருக்கும்.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

இதேபோன்று, சிபிஎஸ் பிரேக் முறையில் பிரேக் பிடிக்கும்போது, முன் மற்றும் பின் சக்கரங்களின் பிரேக்குகள் சீராக புரோபர்ஷனல் கன்ட்ரோல் வால்வ் மூலம் இயங்கி நிற்கவைக்கப்படுகிறது. இத்தகைய பாதுகாப்பான விதிமுறைகளை வாகனங்களில் செயல்படுத்துவதன் மூலம், வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை பாதுகாப்பாக செய்யமுடியும்.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கனவே சில வாகனங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்த ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மூலம் வாகன ஓட்டி எவ்வாறு பாதுகாப்பாக தனது பயணத்தை மேற்கொண்டார் என்பதை விளக்கும் வகையில் தற்போது வீடியோ ஒன்று யுடியூபில் வைரலாகி வருகிறது.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

பார்ப்போரை ஒரு நிமிடம் சட்டென உரைய வைக்கும் அந்த வீடியோ, சாலையில் பாதுகாப்பாக செல்வது குறித்தும், ஏபிஎஸ் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம், கவுகாத்தியின் பிஸியான சாலையில் அதிவேகமாக, குறைந்தது மணிக்கு 135 கிமீ வேகத்தில் அந்த இளைஞர் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னாடிச் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று சட்டென வேகத்தை குறைத்து செல்ல ஆரம்பித்தது. இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர் சமயோஜிதமாக செயல்பட்டு வாகனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் 10 கிமீ வேகத்துக்குக் கொண்டு வந்தார்.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

இதுபோன்ற சாதூர்யமான செயலால் அவருக்கு நேரவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், இந்த காட்சிகள் அனைத்தும் அவரது ஹெல்மெட்டில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை, போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் ஏபிஎஸ் பிரக்கிங் சிஸ்டத்தின் தேவையை அறிய வைக்கும் வகையில் அந்த இளைஞர் வைரலாக்கி உள்ளார்.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

உண்மையில் ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் இத்தகைய தொழில்நுட்பமுள்ள வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த வீடியோக் காட்சி தெரிவிக்கிறது. பாதுகாப்பான முறையில் வாகனத்தைச் செலுத்தி நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும் காப்பது நமது கடமையாகும். சாலை பாதுகாப்பு என்பது யாரோ ஒருவருக்காக அல்ல, அது நம்மை காக்கவே செயல்படுத்தப்படுகிறது. இதை உணர்ந்து சாலையில் பயணம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
This Video Shows Why Bikers Need ABS Break. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X