விமானத்தில் பயணம் செய்யுபவர்களுக்கான 7 முக்கிய டிப்ஸ்

விமானங்களில் செல்லும்போது பெரும்பாலான பயணிகளுக்கு தெரியாத சில ரகசியங்களும் இருக்கிறது. அவைகளை பற்றி தெரிந்து கொள்ளவும் அடுத்த பயணத்தில் நீங்கள் பாதுகாப்பாக செல்ல இதை வழங்குகிறோம்

விமான பயணம் என்பது பெரும்பாலானவர்களுக்கு ஆலாதி பிரியமான ஒன்று, சிலர் விமானத்தில் பயணம் செய்வதையே தங்கள் வாழ்நாள் விருப்பமாக கூட வைத்திருக்கின்றனர்.

விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கான 7 முக்கிய டிப்ஸ்

அதிகமான விலை, பணக்கார்கள் பயணிக்கும் வாகனம் என பல்வேறு பிம்பங்கள் அடங்கியிருப்பதால் விமானத்தில் எல்லாம் விஷயங்களும் மிக நேர்த்தியாகவும், உலக தரம் வாய்ந்ததாகவும் இருக்கும் என பலர் நினைக்கின்றனர்.

விமானத்தில் பயணம் செய்யுபவர்களுக்கான 7 முக்கிய டிப்ஸ்

ஆனால் விமானங்களில் செல்லும்போது பெரும்பாலான பயணிகளுக்கு தெரியாத சில ரகசியங்களும் இருக்கிறது. அவைகளை பற்றி தெரிந்து கொள்ளவும் அடுத்த பயணத்தில் நீங்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும், எந்த இடைஞ்சல்களும் இல்லாமல் விமானங்களில் செல்லவும் இதை உங்களுக்காக நாங்கள் வழங்குகிறோம்.

விமானத்தில் பயணம் செய்யுபவர்களுக்கான 7 முக்கிய டிப்ஸ்

குளிர் அதிகமாக இருக்கும்.

விமானம் பறக்கும் போது விமானத்திற்கு வெளியில் சுமார் -60 முதல் -65 டிகிர செல்சியஸ் அளவிற்கு குளிர் இருக்கும். என்ன தான் விமானம் பாதுகாப்பாக இருந்தாலும் விமானங்களின் ஜன்னல்கள் ஒரு கண்ணாடி தான் என்பதால் மற்ற இடங்களை விட ஜன்னல் சீட்டில் இருப்பர்களுக்கு குளிர் அதிமாக இருக்கும். உங்கள் உடலுக்கு அதிக குளிர் ஒத்து வராது என்றால் நீங்கள் ஜன்னல் சீட்டை தேர்ந்தெடுக்காதீர்கள்.

விமானத்தில் பயணம் செய்யுபவர்களுக்கான 7 முக்கிய டிப்ஸ்

காபி, டீ களை தவிர்க்கவும்

விமானங்களில் தயாராகும் காபி மற்றும் டீக்கள் பெரும்பாலும் விமானங்களில் சேமித்து வைக்கப்படும் குடிநீர் பயன்படுத்தியே தயார் செய்கின்றனர். அதில் அதிக பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது. அதனால் காபி, டீ உள்ளிட்ட தண்ணீர் உபயோகித்து செய்யப்படும் உணவுகளை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக பிரஷ் ஜூஸ் வாங்கி அருந்தலாம்.

விமானத்தில் பயணம் செய்யுபவர்களுக்கான 7 முக்கிய டிப்ஸ்

டேபிள் பயன்படுத்தும் போது கவனம்

பொதுவாக விமானங்களில் நீங்கள் உணவருந்தவும், உங்கள் பொருட்களை வைத்து பயன்படுத்தவும் உங்களுக்கு வசதியாக உங்கள் சீட்டிற்கு முன் போல்டிங் டேபிள் ஒன்று இருக்கும். சிலர் அதில் பர்கர், பிரட், சான்வேஜ் போன்ற உணவுகளை நேரடியாக அந்த டேபிளில் வைத்து அருந்துவர்.

விமானத்தில் பயணம் செய்யுபவர்களுக்கான 7 முக்கிய டிப்ஸ்

அது அவ்வளவு சுத்தமானது அல்ல. சிலர் தங்கள் கைகுழந்தைகளுக்கு டயப்பர் மாற்றுவதற்கு கூட அதை பயன்படுத்து கின்றனர். இதனால் அதில் கிருமிகள் அதிகமாக இருக்கலாம். நீங்கள் நேரடியாக உணவுகளை அதில் வைத்து சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

விமானத்தில் பயணம் செய்யுபவர்களுக்கான 7 முக்கிய டிப்ஸ்

பகல் நேரம் பயணம் செய்யுங்கள்

இரவு நேரத்தை விட பகல் நேரங்களில் விமானங்களில் பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள். பகல் நேரங்களில் புறப்படும் விமானங்கள் காலதாமதம் ஆவது இரவு நேரங்களை ஒப்பிடும் போது மிகக்குறைவு. மேலும் பகல் நேரங்களில் வானிலையில் காற்றின் அழுத்தமும் குறைவாக இருப்பதனால் விபத்து நடக்கும் வாய்ப்புகள் குறைவு

விமானத்தில் பயணம் செய்யுபவர்களுக்கான 7 முக்கிய டிப்ஸ்

விமானத்தின் பின் பக்க இருக்கையை தேர்ந்தெடுங்கள்

பொதுவான விமானத்தில் உள்ள பணியாளர்கள் எல்லாம் நாம் அமர்ந்திருக்கும் கேபினுக்கு பின் பகுதியில் தான் அவர்களுக்கான இடம் இடம் இருக்கும். ஆகையால் நீங்கள் பின் பக்க சீட்டை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவர்களது உதவி உங்களுக்கு எளிதாக கிடைக்கும். உணவு பரிமாறப்படும் போதும் உங்களுக்கு விரைவாக உணவு கிடைக்க வாய்ப்புள்ளது.

விமானத்தில் பயணம் செய்யுபவர்களுக்கான 7 முக்கிய டிப்ஸ்

காற்று தலையனைகளை பயன்படுத்துவதில் கவனம்

விமானம் பறக்கும் போது விமானத்தில் உள்ள பிரஷரில் மாற்றம் ஏற்படும். அதனால் நீங்கள் காற்று அடைக்கப்பட்ட தலையனைகள் அல்லது கழுத்து மாட்டிகளில் முழுமையாக காற்றை அடைக்காமல் சற்று காற்றின் அழுத்தத்தை குறைந்தே வையுங்கள். முழுமையாக காற்று இருந்தால் அது வெடித்து விட வாய்ப்புள்ளது.

விமானத்தில் பயணம் செய்யுபவர்களுக்கான 7 முக்கிய டிப்ஸ்

ஸ்பெஷல் உணவுகளை தேர்ந்தெடுங்கள்

சமீபகாலமான சில விமான நிறுவனங்கள் வெஜிட்டேரியன், கடல் உணவுகள், ஹலால் உணவுகள், என பல வகை உணவுகளை வழங்குகின்றனர். நீங்கள் வழக்காமான உணவை விட ஸ்பெஷல் உணவு எதாவது இருந்தால் அதை தேர்ந்தெடுங்கள் அதன் சுவை சதாரண உணடுகளின் சுவையை விட சற்று அதிகமாக இருக்கலாம்.

Most Read Articles
மேலும்... #டிப்ஸ் #tips
English summary
Tips for the Ideal Flight Most Travelers Don’t Know About. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X