சிங்கப்பூர் மக்களே... இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க! எம்ஆர்டி செலவை எளிதாகக் குறைக்கலாம்...

சிங்கப்பூர் எம்ஆர்டியில் காசை சேமிப்பது எப்படி என பலர் யோசித்து வருகின்றனர். அவர்களுக்காக எம்ஆர்டியில் எப்படி எளிமையாகச் செலவைக் குறைக்கலாம் என சில டிப்ஸ்களை உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

சிங்கப்பூர் மக்களே... இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க! எம்ஆர்டி செலவை எளிதாகக் குறைக்கலாம்...

கடந்த 2018ம் ஆண்டு குளோபல் மனித வள ஆலோசனை மையம் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான நகரம் என்றால் அது சிங்கப்பூர் தான் என்று கூறியுள்ளது. அதுவும் சிங்கப்பூரில் உள்ள பொது போக்குவரத்திற்கான செலவு குறிப்பாக எம்ஆர்டி செலவு மக்களின் காஸ்ட் ஆஃப் லிவ்விங்கை அதிகரித்துள்ளது எனக் கூறுகிறது. அதன் அடிப்படையில் இங்குச் சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் எம்ஆர்டி காரை எப்படியெல்லாம் மிச்சப்படுத்தலாம் என இங்கே சொல்லப்போகிறோம்

குறைந்த விலை கார்டு

எம்ஆர்டியில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக கார்டு வைத்திருக்கிறார்கள், மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டில் 50 சதவீதம் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே போல சீனியர் சிட்டிசன் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான மாத பாஸ் கட்டணம் பாதி விலையில் வழங்கப்படுகிறது. நீங்கள் இதில் ஏதாவது கேட்டகிரியில் வந்தால் அதற்கான கார்டை வாங்கிக்கொள்ளுங்கள். மற்றவர்களை விடப் பாதி செலவு செய்தால் போதுமானது.

மற்றவர்களுக்கான மாத பால் 128 டாலர் என்ற விலையில் கொடுக்கப்படுகிறது. ஆனால் இது விலை அதிகம். அதிகமாக எம்ஆர்டியில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே இந்த பாஸ் உபயோகமாக இருக்கும். மற்றவர்கள் ரெகுலாராக ரீசார்ஜ் செய்து பயணித்தாலே, கட்டணம் குறைவாகத் தான் இருக்கும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. நீங்கள் ஸ்டேஷனிற்குள் சென்று பயணிக்காமல் மீண்டும் திரும்பி வந்தாலும் உங்களது கார்டிலிருந்து பணம் கழிக்கப்படும்.

பீக் டைம் இல்லாத நேரத்தில் பயணம்

எம்ஆர்டிஐ பொருத்தவரை காலை 7.45க்கு முன்பு வரை பீக் டைம் இல்லாத நேரமாகக் கருதப்படுகிறது. அந்த நேரத்தில் எம்ஆர்டியில் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும். அந்த நேரங்களில் பயணம் செய்பவர்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பயணத்தில் 50 சென்டிற்கும் குறைவான விலையில் நீங்கள் பயணித்தால் அந்த பணம் உங்கள் கார்டில் கழிக்கப்படாது. நீங்கள் அந்த பயணத்தை இலவசமாகவே செய்யலாம். அதிகாலையில் மக்களை எம்ஆர்டியை பயன்படுத்த வைக்க இந்த சலுகையைச் சிங்கப்பூர் அரசு வழங்குகிறது.

தினமும் எம்ஆர்டியை பயன்படுத்தும் மக்களுக்கு லேண்ட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி டிராவல் ஸ்மார்ட் ஜர்னி என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி தினமும் ஒருவர் எப்படிப் பயணிக்கிறார் என்பதை வைத்து அவருக்கான கஸ்டமைஸ்டு பயண அட்டையை வழங்குகிறது. இதன் மூலம் பயணித்தால் பயணத்திற்கான செலவு கொஞ்சம் குறையும். இந்த திட்டம் எம்ஆர்டியில் கூட்டத்தைக் குறைப்பதற்காக அந்நாட்டு அரசு எடுத்த நடவடிக்கை

இந்த டிஎஸ்ஆர் திட்டத்தில் கையெழுத்திட்டால் எல்டிஏ நீங்கள் பயணிக்கும் நாள், நேரம், ஸ்டேஷன் ஆகிய நேரத்தை கண்காணிக்கும். அப்பொழுது அவர்கள் நீங்கள் அதிக கூட்டமாக இருக்கும் நேரத்தில் பயணித்துக்கொண்டிருந்தால் உங்கள் பயண நேரத்தை மாற்றியமைக்க சில பரிந்துரைகளை வழங்கும் அதன்படி நீங்கள் பயணத்தை மாற்றியமைத்தால் உங்களுக்கான பயண செலவு குறையும்.

கிரெடிட் கார்டு மூலம் டாப் அப்

உங்கள் கிரெடிட் கார்டு மூலம் இஸி லிங்க் பரிவர்த்தனைகளைச் செய்தால் நீங்கள் கட்டும் பணத்திற்கு 2 சதவீதம் உங்களுக்கு கேஸ் பேக்காக கிடைக்கும். உதாரணமாக நீங்கள் 100 சிங்கப்பூர் டாலருக்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 2 டாலர் கேஸ்பேக் கிடைக்கும் அதாவது நீங்கள் வெறும் 98 சிங்கப்பூர் டாலர் செலவில் 100 சிங்கப்பூர் டாலருக்கான மதிப்பில் பயணம் செய்யலாம். இதுவும் பயண செலவைக் குறைக்கும் ஒரு வழி முறை தான்.

எஸ்எம்ஆர்டி ரிவார்ட்ஸ்

எஸ்எம்ஆர்டி விங்க்+ என்ற ஒரு ஆப்பை ரிவாட்ஸ் வழங்குவதற்காக வைத்திருக்கிறது. இதில் நீங்கள் எம்ஆர்டிக்குள் நுழையும் போதும் வெளியே செல்லும்போதும் நீங்கள் அதைக் கணக்கிட்டு உங்களுக்கு ரிவாட்ஸை வழங்கும். அதாவது நீங்கள் எவ்வளவு பயணம் செய்கிறீர்களா அவ்வளவு ரிவாட்ஸ் கிடைக்கும். இதில் இரண்டாவது முறையாக எம்ஆர்டி ஸ்டேஷன்களில் உள்ள க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தாலும் கிடைக்கும்படி ஒரு திட்டம் இருந்தது.

ஆனால் பலர் இதைப் புகைப்படம் எடுத்து வீட்டிலிருந்தே ஸ்கேன் செய்து ரிவார்ட்ஸ்களை பெற்றதால் இந்த திட்டம் சஸ்பென்ட் செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறாக வழங்கப்படும் ரிவாட்ஸ் பாயிண்ட்களை கொண்டு டிக்கெட் விலையை நேரடியாகக் குறைக்க முடியாது ஆனால் உணவு, ஷாப்பிங் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தும் இ வவுச்சர்களை இதன் மூலம் பெற முடியும். ஆனால் இதைப் பெற நீண்ட காலம் எடுக்கும்.

குறிப்பாக நீங்கள் ஒரு முறை டேக் செய்தால் உங்களுக்கு ஒரு பாயிண்ட் வழங்கப்படும். 50 பாயிண்ட் எடுத்தால் தான் நீங்கள் ஒரு 1 விங்க்+ஐ பெற முடியும். 1 விங்க் + என்பது 50 சென்டிற்கு சமம் இதனால் நீண்ட நாட்களாகப் பயணம் செய்பவர்கள் இதைப் பயன்படுத்தி வவுச்சர்களை பெற்றகு்கொள்ளலாம். விங்க்+ ஆப் மிகப்பெரிய சேமிப்பை எல்லாம் ஏற்படுத்தாது. இருந்தாலும் அதிகமாகப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

நீங்கள் எம்ஆர்டிக்கான பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால் இதை எல்லாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும், இதுவே மிகப்பெரிய அளவில் சேமிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சிறிது சிறிதாக நீண்ட காலத்திற்குப் பெரிய அளவில் சேமிக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு நாளுக்கு 50 சென்ட் சேமித்தாலே 100 நாளில் 50 டாலர் வரை சேமிக்க முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tips to reduce Singapore MRT expenses
Story first published: Thursday, September 29, 2022, 10:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X