வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

தமிழக மக்கள் எளிதாக இ-பாஸ் வாங்குவது எப்படி? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 3, மே 17, மே 31ம் தேதி வரை என இந்த ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. இதன் காரணமாக பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன.

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

கார், பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் மக்கள் வெளியே வருவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. உரிய காரணமின்றி தேவையில்லாமல் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் காவல் துறை தரப்பில் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

MOST READ: 1,500 கிமீ பயணிக்கும் தொழிலாளர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

எனினும் திருமணம், மருத்துவ அவசரம், இறப்பு போன்ற காரணங்களுக்காக மக்கள் இ-பாஸ் பெற்று பயணம் செய்ய முடியும். ஆனால் இ-பாஸ் எப்படி பெறுவது? என்பது பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்கு உதவும் வகையில், இந்த செய்தியை வழங்கியுள்ளோம். இதில், இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறைகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

தமிழ் நாட்டை சேர்ந்த மக்கள் இ-பாஸ் பெறுவதற்கு தமிழக அரசின் http://tnepass.tnega.org/ என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். இதில், குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களும் மற்றும் தனி நபர்களும் விண்ணப்பம் செய்து இ-பாஸ் பெற முடியும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும்தான் தனி நபர்களால் விண்ணப்பிக்க முடியும்.

MOST READ: அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

இதன்படி திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வேறு இடத்தில் சிக்கி தவித்தல் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே தனி நபர்களால் விண்ணப்பிக்க முடியும். தமிழக அரசின் இந்த இணையதளத்திற்குள் சென்றதும், உங்கள் செல்போன் எண்ணை பதிவிட வேண்டும். இதன்பின் கேப்ட்சாவை நிரப்பியவுடன் உங்கள் செல்போனிற்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

அதனை உள்ளீடு செய்வதன் மூலம், நீங்கள் இந்த இணையதளத்திற்குள் லாக்-இன் செய்யலாம். ஏற்கனவே கூறியபடி தனி நபர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. நீங்கள் தனிநபர் எனும்பட்சத்தில், அதனை தேர்வு செய்யுங்கள். ஆனால் இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டியது அவசியம்.

MOST READ: மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

தற்போது ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு, அந்தந்த மாவட்டங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்ய தமிழக அரசு தளர்வு வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் பிறப்பித்தார்.

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

இதன்படி கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நாகப்பட்டிணம், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய 25 மாவட்ட மக்கள் இ-பாஸ் இல்லாமல் அந்தந்த மாவட்டங்களுக்கு பயணிக்கலாம்.

MOST READ: கொரோனா அச்சத்தால் இந்தியர்கள் எடுக்கும் திடீர் முடிவு... அவங்க காட்ல இனி பண மழை கொட்ட போகுது

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

உதாரணத்திற்கு நீங்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றால், சங்ககிரி செல்ல இ-பாஸ் தேவையில்லை. ஆனால் வெளி மாவட்டங்களுக்கோ அல்லது வேறு எங்கேயாவதோ பயணிப்பதாக இருந்தால், Continue கொடுத்து, தொடர்ந்து உள்ளே செல்லுங்கள். இ-பாஸ் பெறுவதற்கான செயல்முறை மொத்தம் 3 படிநிலைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

முதல் ஸ்டெப்பில், தனிநபர் இ-பாஸிற்கான அடிப்படை தகவல்களை நீங்கள் கொடுக்க வேண்டும். தனிநபர் என்றால், ஏற்கனவே கூறியபடி திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம் மற்றும் வேறு இடத்தில் சிக்கி தவித்தல் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில், உங்களது காரணத்தை குறிப்பிடவும்.

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

இதற்கு அடுத்தடியாக எங்கு வரை பயணம் செய்கிறீர்கள் என்ற தகவலை குறிப்பிட வேண்டும். அதாவது மாவட்டத்திற்கு உள்ளேயாவா? மாவட்டத்திற்கு வெளியேவா? தமிழகத்திற்கு வெளியேவா? அல்லது தமிழகத்திற்குள் வர விரும்புகிறீர்களா? என்ற தகவலை குறிப்பிட வேண்டும். அத்துடன் அனுமதி தேவைப்படும் நாட்கள், பெயர், பாலினம் ஆகிய தகவல்களையும் வழங்க வேண்டும்.

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

தாய்/தந்தை/கணவர் பெயர், விண்ணப்பதாரரின் வயது, பயணிகள் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பதாரர் அடையாள சான்று எண், வாகன வகை ஆகிய கட்டங்களையும் நிரப்பி விடுங்கள். மேலும் உங்கள் அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிப்பதும் அவசியம். ஆதார், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, பாஸ்போர்ட் ஆகிய ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

நீங்கள் பயணம் செய்யவுள்ள வாகனத்தின் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயம். இந்த கட்டங்களை நிரப்பிய பின், நீங்கள் அடுத்த ஸ்டெப்பிற்கு செல்லலாம். இங்கே வீட்டு எண், தெரு பெயர், இடம், மாநிலம், மாவட்டம், பின்கோடு ஆகிய விபரங்களை நீங்கள் குறிப்பிட வேண்டும். நீங்கள் எங்கிருந்து எங்கே செல்கிறீர்களோ? அதற்கு ஏற்ப விபரங்களை வழங்க வேண்டும்.

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

இதற்கு அடுத்தபடியாக 3வது மற்றும் கடைசி ஸ்டெப்பிற்கு செல்லலாம். நீங்கள் திருமணத்திற்கு செல்வதாக இருந்தால், திருமண அழைப்பிதழை சமர்ப்பிப்பது அவசியம். இந்த தகவல்களை சமர்ப்பித்து, இ-பாஸ் பெறலாம். அதேசமயம் உங்கள் வாகனத்தில் விண்ணப்பதாரர் தவிர கூடுதல் பயணிகள் பயணம் செய்வதாக இருந்தால், அவர்களை பற்றிய விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா?

இதற்கான ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஃபைலின் ஃபார்மெட்டை மாற்ற கூடாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உங்கள் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்ட பின், அனுமதி வழங்கப்படும். இந்த இ-பாஸை பிரிண்ட் எடுத்து, உங்கள் வாகனத்தின் முன் பகுதியில் ஓட்டி கொள்வது நல்லது. இதன்மூலம் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
TN ePass Registration: How To Apply TN Lockdown ePass. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X