நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

சென்னை நகரவாசியின் பயன்பாட்டுக்கு நவீன ரக சைக்கிளை 'சைக்கிள் ஷேரிங்' திட்டத்தின் தமிழக வாடகைக்கு விட உள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

1990ஸ் கிட்ஸ் மற்றும் அதற்கு முன்பாக பிறந்தவர்கள் மட்டுமே அறிந்த விஷயம் வாடகை சைக்கிள். அந்த காலத்திலெல்லாம் தெருவுக்கு தெரு ஓர் வாடகை சைக்கிள் கடை அமைந்திருக்கும். ஆனால், உலக நவீனமயமாக்கல் காரணமாக அவையனைத்தும் அழிந்துவிட்டன. இதனால், இந்த தொழிலைச் சார்ந்திருந்த தொழிலாளர்கள் பிழைப்பின்றி வருமையில் தள்ளப்பட்டனர்.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

வாடகை சைக்கிளைப் பற்றி நினைக்கும்போது, நமக்கு வடிவேலுவின் 'காக்கை சிறகினிலே' படத்தின் காமெடி தான் நினைவுக்கு வரும். அதில், வாடகைக்கு சைக்கிளை எடுக்கும் வடிவேலு, நீண்ட நாளாக வாடகையும் தராமல், சைக்கிளையும் ஒப்படைக்காமல் அராத்து செய்து வருவார். இதையடுத்து அவரிடம் இருந்த சைக்கிளை வாங்கும் நோக்கில் செயல்படும் ஹீரோ பார்த்திபன், வடிவேலுக்கு தெரியாமல் சைக்கிள் வீலின் காற்றைப் பிடிங்கிவிட்டு, மீண்டும் அவருக்கு உதவுவது போல் நடிப்பார்.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

சூழ்ச்சி வலையில் சிக்கியதை அறியாத வடிவேலு பார்த்திபனின் குண்டக்க மண்டக்க கேள்வியில் எரிச்சலடைந்து சைக்கிளிலிருந்து காற்றைப் பிடிங்கி விடுவார். அப்போது தான் ஆரம்பிக்கிறது வடிவேலுக்கு வினை, உன் சைக்கிள் இங்க இருக்கு நான் அடிச்ச காத்து எங்கனு பார்த்திபன் கேக்க, வடிவேலு ஒரு நிமிடம் கண் பிதுங்கிபோய் நிற்பார். காற்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டு சைக்கிளை வாங்கிச் செல் என, சைக்கிளை பார்த்திபன் பறிமுதல் செய்யும் காட்சி இப்போதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியாக இருந்து வருகிறது.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

இவ்வாறு, சைக்கிள் ஒரு காலத்தில் நமது வாழ்க்கையில் அன்றாட பயன்பாட்டு பொருளாக ஒன்றி இருந்து வந்தது. முந்தைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கண்டிப்பாக ஒரு சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். எதாவது ஒரு வீட்டில் தான் மோட்டார் சைக்கிள் நிற்கும். ஆனால், தற்போது இந்த நிலைமாறி மோட்டார் சைக்கிளின் ராஜ்யமாகவே காணப்படுகிறது. சைக்கிள்கள் துருப்பிடித்த நிலையிலும், வீல் இல்லமாலும் சிதிலமடைந்து காணப்படும் சூழலே இப்போது நிலவுகிறது.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

இதற்கு காரணம் மனிதனின் அன்றாடத் தேவையென்றாலும், சோம்பேரித் தனமே மிகப்பெரிய காரணமாக உள்ளது. எந்த ஒரு உடல் உழைப்பும் இன்றி அனைத்து வேலைகளும் நடக்க வேண்டும் என மனிதன் எண்ணியதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. நாம் எப்போது நவீன தொழில்நுட்பத்தை தேடிச் செல்ல ஆரம்பித்தோமோ, அப்போதே வியாதிகள் நம்மைத் தேடி வர ஆரம்பித்து விட்டன.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

நாம் பயன்படுத்தி வந்த மாவாட்டும் கல் எப்போது குப்பை மேட்டுக்குப் போனதோ அப்போதே சர்க்கரை என்னும் வியாதி நமது உடலில் வந்து ஒட்டிக்கொண்டது. இதற்கு காரணம் உடல் உழையாமை என்று மருத்துவர் கூறிய பின்னர், நமது மக்கள் உடற்பயிற்சி மையங்களைத் தேடி அலைய ஆரம்பித்துள்ளனர். அங்கு சென்று பார்த்தால், நின்ற இடத்திலேயே மிதி மிதியென மிதிக்கும் மிதிவண்டியை மிதிக்க சொல்கிறார் ஜிம் மாஸ்டர்.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

நாம், நமது பாரம்பரிய நடைமுறையை நாம் மறக்காமல் இருந்திருந்தால் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டிருக்கும். மேலும், தற்போது பெரும் செலவாக உருவாகி இருக்கும் மருத்துவச் செலவும் மிச்சமாகி இருக்கும். இதனைக் கருத்தில் கொண்ட நமது தமிழக அரசு, மக்களை மீண்டும் சைக்கிள் ஓட்டும் பழக்கத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

இதற்காக, சென்னை மாநகராட்சி மூலம் வாடகை சைக்கிள் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இதற்காக 'சைக்கிள் ஷேரிங்' என்னும் திட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இது அழிந்துபோன சைக்கிள் கலாசாரத்தை மக்கள் மத்தியில் மீண்டும் துளிர்க்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

இத்திட்டத்திற்காக தமிழக அரசு ஹைதரபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் என்னும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே தனது 'சைக்கிள் ஷேரிங்' திட்டத்தை அமராவதி, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயக்கி வருகின்றது. தற்போது தமிழக அரசுடன் கைகோர்த்திருக்கும் இந்த நிறுவனம் முதல்கட்டமாக சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், அண்ணாநகர் ஆகிய மூன்று பகுதிகளில் செயல்படுத்த உள்ளது.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

மேலும், இத்திட்டத்திற்காக இந்த மூன்று பகுதியிலும் 250 சைக்கிள்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக சைக்கிள் நிறுத்துமிடங்கள் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது முதற்கட்டமாக மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், அண்ணாநகர் ஆகிய மூன்று இடங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையானது, சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 375 இடங்களில் சைக்கிள் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

இதன்படி, 'சைக்கிள் ஷேரிங்' திட்டத்தின்கீழ் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள்களை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழு கட்டுப்பாட்டு அலுவலகமும் சென்னை மாநகராட்சி அலுவலகமான வெள்ளை மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

சென்னை வாசிகளின் குறைந்த தூரப் பயணத்திற்கு உபயோகப்படுத்தும் வகையில் இத்திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் முன் மற்றும் பின் பக்கத்தில் எல்இடி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, சைக்கிளை வேகமாக இயக்கும் வகையில் மூன்று கியர்கள் இடம் பெற்றுள்ளன.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

சைக்கிளை திருடிச் சென்றால் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் ஜிபிஎஸ் கருவிகள் இந்த பொருத்தப்பட்டுள்ளன. இதனால், சைக்கிளை நீண்ட நாட்களாக திரும்பக் கொடுக்கமால் ஏமாற்றவும் முடியாது. இத்தகைய சிறப்பான அம்சங்கள் கொண்ட சைக்கிளின் வாடகை தொகை, ஒரு மணி நேரத்திற்கு ரூ. 5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழை எளியோரும் பயன்படுத்தும் வகையில் இந்த தொகை நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

இந்த 'சைக்கிள் ஷேரிங்' திட்டத்தைப் பயன்படுத்த நினைப்பவர்கள், தங்களது ஸ்மார்ட்போனில் 'ஸ்மார்ட்பைக்' என்ற ஆப்பை டவுண்லோட் செய்து அதில் கேட்கும் தரவுகளை உள்ளிட வேண்டும். பின்னர், உங்களுக்கு அருகில் இருக்கும் சைக்கிள் வாடகை நிலையத்துக்குச் சென்று சைக்கிளை எடுத்துச்செல்லலாம். சைக்கிளை உபயோகம் செய்த பின்னர், சென்னையில் உள்ள மற்ற எந்த சைக்கிள் நிறுத்தத்தில் வேண்டுமானாலும் சென்று ஒப்படைத்து விடலாம்.

நவீன சைக்கிளை வாடகைக்கு அறிமுகம் செய்யும் தமிழக அரசு: ஒரு மணி நேர வாடகை எவ்வளவு தெரியுமா?

இதைப்போன்று, சைக்கிளை பயன்படுத்துவர்கள் எளிதாக சென்று வரும் வகையில், சைக்கிளுக்கான தனிப் பாதை அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 17 கிமீ தூரத்துக்கு அமைந்துள்ள இந்த தனி பாதை, பச்சை நிறத்தில் சைக்கிள் பாதை என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது. இந்த பாதையில் மற்ற வாகனங்கள் பயணித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
TN Govt Plan To Rental Cycle Scheme Implemented In Chennai. Read In Tamil.
Story first published: Thursday, February 28, 2019, 14:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X