இந்த வாகனங்களுக்கு மட்டும் டோல் கட்டணம் இல்லை... இலவசமா போலாம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஆணையம்!!

இந்த வாகனங்கள் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அதிரடி உத்தரவை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த வாகனங்களுக்கு மட்டும் டோல் கட்டணம் இல்லை... இலவசமா போலாம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஆணையம்!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகின்றது. இரண்டாம் அலை பரவல் என குறிப்பிடப்படும் இது குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதி-தீவிரத் தன்மையைக் காட்டி வருகின்றது. தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளன.

இந்த வாகனங்களுக்கு மட்டும் டோல் கட்டணம் இல்லை... இலவசமா போலாம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஆணையம்!!

இதனால், படுக்கை மற்றும் மருத்துவ உபகரணம் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் தலை விரித்தாட தொடங்கியுள்ளது. பலர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கும் அவலும் நாட்டில் அரங்கேறி வருகின்றது.

இந்த வாகனங்களுக்கு மட்டும் டோல் கட்டணம் இல்லை... இலவசமா போலாம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஆணையம்!!

இந்த நிலையில், மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க மத்திய அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இத்துடன், சில தனியார் நிறுவனங்களும் தங்களின் தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ச்சியாக விநியோகம் இருக்க வேண்டும் என்பதில் அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றது.

இந்த வாகனங்களுக்கு மட்டும் டோல் கட்டணம் இல்லை... இலவசமா போலாம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஆணையம்!!

இந்நிலையில், ஆக்சிஜன் ஏற்றி வரும் அனைத்து டேங்கர்களும் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணமின்றி பயணிக்கலாம் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தங்கு தடையில்லா ஆக்சிஜன் சேவையை வழங்கும் நோக்கில் இவ்வறிப்பை ஆணையம் வெளியிட்டிருக்கின்றது.

இந்த வாகனங்களுக்கு மட்டும் டோல் கட்டணம் இல்லை... இலவசமா போலாம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஆணையம்!!

மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி வரும் டேங்கர்கள் அவசர வாகனமாக கருதி இந்த கட்டணமில்லா திட்டத்தை இந்திய தேசிய நெடுசாலை ஆணையம் அறிவித்திருக்கின்றது. அதாவது, மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி வரும் டேங்கர் லாரியை, உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களுக்கு இணையாக ஒப்பிட்டு இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களுக்கு மட்டும் டோல் கட்டணம் இல்லை... இலவசமா போலாம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஆணையம்!!

ஆகையால், மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் எந்தவொரு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான டோல்கேட்டிலும் கட்டணம் கட்ட தேவையில்லை. இந்த சிறப்பு திட்டம் அடுத்து வரும் இரண்டு மாதங்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை செல்லும்படியாகும் என ஆணையம் கூறியிருக்கின்றது.

இந்த வாகனங்களுக்கு மட்டும் டோல் கட்டணம் இல்லை... இலவசமா போலாம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஆணையம்!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த தரமான அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி வரும் டேங்கர் லாரி டிரைவர்களிடத்திலும் ஆதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இந்த வாகனங்களுக்கு மட்டும் டோல் கட்டணம் இல்லை... இலவசமா போலாம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஆணையம்!!

கடந்த முதல் அலை பரவலின்போது வெண்டிலேட்டர்கள் அதிக தேவைப்படும் சுவாச கருவியாக இருந்தது. தற்போது, ஆக்சிஜன் தேவை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையிலேயே ஆக்சிஜன் ஏற்றி வரும் லாரிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் இலவசமாகக் கடக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toll Fee for Tankers Carrying Medical Oxygen Exempted On National Highways. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X