டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடியான முடிவு ஒன்றை எடுக்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிகப்படியான தொகையை செலவிட்டு வருகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகிறது. அத்துடன் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் இந்தியாவின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

எனவே இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் முடிவு கட்டும் விதமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது இதற்கு ஒரு உதாரணம். இதுபோல் வருங்காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இன்னும் பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணங்களில் இருந்து சிறப்பு சலுகைகளை வழங்குவதும் ஒன்று.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

என்எச்ஏஐ எனப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India - NHAI) தற்போது புதிய டோல் கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. பிசிஜி எனப்படும் பாஸ்டன் கன்சல்டன்சி குழுவுடன் (Boston Consultancy Group - BCG) இணைந்து, இந்த வரைவு டோல் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

இதில், டோல்கேட் கட்டணங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கலாம் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி டோல்கேட் கட்டணங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்கலாம் என ஒரு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

ஆனால் இதன் காரணமாக பெரும் அளவிலான வருவாய் இழப்பு ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே இது வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்றால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணங்களில் இருந்து 50 சதவீத தள்ளுபடி வழங்கலாம் என்றொரு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

MOST READ: மரண பயத்தை காட்டும் இந்த போட்டோக்களை பார்த்த பிறகும் சாலை விதிகளை மீறுவீங்க? கண்டிப்பா மாட்டீங்க

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

இதுபோன்ற சலுகைகள் கிடைத்தால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் எழும். எனவேதான் வரைவு டோல் கொள்கையில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பல்வேறு மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. தற்போது வரைவு டோல் கொள்கை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

MOST READ: ஆபத்தை உணராத மக்கள்... புதிய வாகனங்களில் இனி இது இருப்பது கட்டாயம்... விரைவில் அதிரடி அறிவிப்பு?

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

அங்கு இதன் மீது ஆலோசனை நடத்தப்படும். அதன்பின் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். நிதின் கட்கரியின் ஒப்புதலுக்காக வரைவு டோல் கொள்கை விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த விஷயத்தில் அவரே இறுதி முடிவு எடுப்பார்.

MOST READ: சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

இந்தியாவில் மின்சார வாகனங்களை பிரபலமாக்குவதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தே ஆக வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். எனவே மின்சார வாகனங்களுக்கு சாதகமான அறிவிப்பு வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

''புதிய டோல் கொள்கை அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த சலுகைகள் பொருந்தும்'' என்று இது தொடர்பாக விவரம் அறிந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் செயல்பட்டும் வரும் டோல்கேட்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அந்த வாகனங்களுக்கு மட்டும் சுங்க சாவடி கட்டணங்களில் இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த சூழலில் தற்போது வெளிவந்துள்ள இந்த தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக மக்கள் காத்து கொண்டுள்ளனர்.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

டோல்கேட்களில் இவ்வாறான சலுகைகள் வழங்கப்பட்டால், மக்களின் கவனம் மின்சார வாகனங்களின் மீது திரும்பும் என்பது உறுதி. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பான உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toll Fees Concession For Electric Vehicles On The Cards To Push Green Mobility. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X