உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

உலகின் தலைசிறந்த 10 ரேஸ் டிராக்குகள் பற்றிய தகவல்களைதான் இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் புகழ்மிக்க டாப் 10 ரேஸ் டிராக்குகள் பற்றியும், அதன் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களையுமே இங்கு தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

நர்பர்ஜிங் நோர்ட்ஸ்லீஃப் (Nurburgring Nordschleife)

உலகின் மிக சிறந்த ரேஸ் ட்ராக்குகளில் ஒன்றாக நர்பர்ஜிங் நோர்ட்ஸ்லீஃப் இருக்கின்றது. இந்த ஜெர்மன் நாட்டில் அமைந்திருக்கும் இந்த ரேஸ்டிராக்கில் ஒரே நேரத்தில் 1,50,000 பேர் அமர்ந்து பந்தயங்களை ரசிக்க முடியும். இந்த ரேஸ்டிராக்கில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க பந்தயங்கள் அரங்கேறியிருக்கின்றன.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

அடர்ந்த வன பகுதியைப் போல் இந்த ட்ராக் அமைந்துள்ளது. 21கிமீ தூரம் கொண்ட இந்த ட்ராக்கில் 154 வளைவுகள் இருக்கின்றன. கற்பனைக்கே எட்டாத வகையிலான வளைவுகள் அவை. தற்போதும் இந்த ரேஸ் டிராக்கில் பல்வேறு போட்டிகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

ஸ்பா ஃபிராங்கோர்சேம்ப்ஸ் (Spa-Francorchamps)

பெல்ஜியம், ஸ்டேவ்லாட் பகுதியிலேயே இந்த ரேஸ் டிராக் அமைந்துள்ளது. எஃப்1 போன்ற மிக முக்கியமான மோட்டார் ஸ்போர்ட்டுஸ்களே இங்கு அதிகம் நடைபெறும். ஸ்பா ஃபிராங்கோர்சேம்ப்ஸ், அழகிய கிராமம் ஒன்றிற்கு அருகில் அமைந்துள்ளது.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

ஆகையால், பசுமை மற்றும் இயற்கை மனம் மாறா டிராக்காக இது இருப்பதை நம்மால் காண முடிகின்றது. சிறந்த பந்தய அனுபவத்தை இந்த டிராக் வழங்கும் என இதில் களம் கண்ட போட்டியாளர்கள் உத்தரவாதம் அளிக்கின்றனர்.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

சுசுகா (Suzuka)

ஜப்பானின் கிராண்ட் பிரிக்ஸில் இந்த பந்தய மேடை அமைந்துள்ளது. பார்ப்பதற்கே திகிலை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இந்த பந்தய களம் பல்வேறு அச்சமூட்டும் வளைவுகளைக் கொண்டிருக்கின்றது.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

எஸ் மற்றும் டெக்னர் எனப்படும் அதி பயங்கரமான வளைவுகள் இந்த டிராக்கில் உள்ளன. ஆகையால், அதிக த்ரில்லை எதிர்பார்க்கும் பந்தய வீரர்களுக்கு உரிய டிராக்காக இது இருக்கின்றது. 1925ம் ஆண்டில் இருந்து இந்த டிராக் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

Image Courtesy: FIA WEC

சர்க்யூட் டே ல சர்தே (Circuit de la Sarthe)

பிரான்ஸ் நாட்டின் லீ மேன்ஸ் எனும் பகுதியில் இந்த ரேஸ் டிராக் அமைந்துள்ளது. உலக புகழ்பெற்ற பல்வேறு மோட்டார் பந்தயங்கள் இந்த டிராக்கில் நடைபெற்றிருக்கின்றன. இது ஓர் பொது சாலைகூட.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

ரேஸின் போது இது டிராக்காக மாறிவிடும். ஆகையால், இருவிதமான கலவையாக இந்த டிராக் காட்சியளிக்கின்றது. எனவேதான் பல வீரர்களின் விருப்பமான டிராக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. டன்லப், எஸ்ஸெஸ் மற்றும் போர்ஷே வளைவுகளுக்கு பெயர்போன டிராக் இதுவாகும்.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

மவுண்ட் பனோரமா (Mount Panorama)

ஆஸ்திரேலியாவின் புதிய தெற்கு வேல் பகுதியிலேயே இந்த புகழ்மிக்க ரேஸ் டிராக் அமைந்துள்ளது. மேலும், மிகவும் அழகான ரேஸ் டிராக் இது என கூறப்படுகின்றது. தொடர்ந்து, உலகின் மிகச்சிறந்த பந்தய தடங்களிலும் இது ஒன்றாக இருக்கின்றது.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

இதனை பாத்ரஸ்ட் என செல்லமாக பந்தய வீரர்கள் அழைக்கின்றனர். இது வழக்கமான நாட்களில் பொது சாலையாக இருக்கும். போட்டி என வந்துவிட்டால் ரேஸ் டிராக்காக இது மாறிவிடும். நீண்ட தூர நேரான பாதையைக் கொண்டிருக்கும் இதில் செங்குத்தான சாய்வுகள் மற்றும் விரைவான வளைவுகளும் அதிகம்.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

Image Courtesy: Mazda Raceway

லகுனா செகா (Laguna Seca)

மத்திய கலிஃபோர்னியாவில் அமைந்திருக்கும் இந்த பந்தய களம் 11 கார்னர்களைக் கொண்டிருக்கின்றது. களத்தின் புகைப்படத்தை பார்த்தாலே சிலருக்கு மயக்கம் வரும். அந்தளவிற்கு மிகவும் அபாயகரமான மற்றும் த்ரில்லான வளைவுகளை இது கொண்டிருக்கின்றது. குறிப்பாக, வியப்பை ஏற்படுத்தும் வகையில் சரிவு, மிக கடினமான திருப்பங்கள் பல இந்த டிராக்கில் இருக்கின்றன. இந்த டிராக் 1957ம் ஆண்டுகளில் இருந்து பயன்பாட்டில் இருக்கின்றது.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

Image Courtesy: Formula 1

சர்க்யூட் டெ மொனாக்கோ (Circuit de Monaco)

1950ம் ஆண்டுகளில் இருந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றது சர்க்யூட் டெ மொனாக்கோ. சிறு சிறு மாற்றங்களுடன் இது பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் 37 ஆயிரம் பார்வையாளர்களால் அமர்ந்து பந்தயத்தை ரசிக்க முடியும்.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

இதில் களம் காணும் வீரர்களால் அவ்வளவு எளிதில் வெற்றி காண முடியாதாம். மிக அதிக கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் கடினமான திருப்பங்களைக் கொண்டிருக்கும் கலவையாக இந்த டிராக் இருக்கின்றது. எஃப்1 பந்தயங்களுக்கு ஏற்ற டிராக்காக இது இருக்கின்றது.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

மோன்சா (Monza)

1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ரேஸ் டிராக் இதுவாகும். உலகின் மிக பழமையான பந்தய தடங்களில் இதுவும் ஒன்று. மோன்சா டிராக் இனி வரும் காலங்களில் பயன்பாட்டில் இருக்குமா என்பது தெரியவில்லை.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

மிக நெருக்கமான வளைவுகள் மற்றும் நீளமான நேர் பாதைகளுக்கு பெயர்போன தடமாக இது இருக்கின்றது. மிகவும் தனித்துவமான பாதை அமைப்பையும் இது கொண்டிருக்கின்றது. இதில், 1,18,865 பேர் வரை அமர்ந்து பந்தயங்களை ரசிக்கலாம் என கூறப்படுகின்றது.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

சில்வர் ஸ்டோன் (Silverstone)

இங்கிலாந்து நாட்டின் மிகவும் புகழ்பெற்ற பந்தய தடமாக சில்வர் ஸ்டோன் இருக்கின்றது. மோட்டார் வாகன உலகின் தாயகமாக விளங்கும் இங்கிலாந்தில் இது அமைந்திருப்பது, அதற்கு மேலும் சிறப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

போட்டிகள் காரணமாக அவ்வப்போது பிஸியாகும் டிராக்காக இது இருக்கின்றது. அதாவது, இந்த தடத்தில் ஏதாவது ஒரு அடிக்கடி ஏற்பட்ட வண்ணமே இருக்குமாம். 1948 ஆம் ஆண்டே இந்த பந்தய களத்தை பிரிட்டிஷ் கிராண்ட பிரிக்ஸ் உருவாக்கியிருக்கின்றது.

உலகின் 10 சிறந்த ரேஸ் டிராக்குகள் பற்றிய சிறப்பு தகவல்கள்... அடேங்கப்பா இத்தனை கி.மீட்டரில் டிராக்கா?..

இன்டர்லகோஸ் (Interlagos)

இது ஓர் கிளாசியான பந்தய தடம் ஆகும். பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ எனும் பகுதியில் இந்த தடம் அமைந்திருக்கின்றது. இதுவரை ஆயிரம் கணக்கான போட்டிகளை இந்த தடம் சந்தித்திருக்கின்றது. பல்வேறு அதி பயங்கரமான வளைவுகளையும், நெருக்கமான திருப்பங்களையும் கொண்டிருக்கின்ற காரணத்தினால் உலகின் சிறந்த ரேஸ் டிராக்குகளில் ஒன்றாக இது காட்சியளிக்கின்றது. இந்த டிராக் 1940ம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இதில் ஒட்டுமொத்தமாக 60 ஆயிரம் பார்வையாளர்களால் அமர முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top 10 Best Racing Tracks In The World: Here Is Full List. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X