இந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்!

இந்தியாவின் டாப் 5 மலிவு விலைக் கொண்ட அதிக பாதுகாப்பை வழங்கும் ஹெல்மெட்டுக்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலம்.

இந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்!

இரு சக்கர வாகனத்தை இயக்குபவரும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக ஹெல்மெட் அணிவது இருக்கின்றது. இது எதிர்பாராத துரதிரஷ்ட நிகழ்வுகளில் இருந்து இருவருக்கும் அதீத பாதுகாப்பை வழங்கும். இதன் காரணத்தினாலேயே அரசும், போக்குவரத்து விதிகளும் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயப்படுத்தியிருக்கின்றன.

இந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்!

ஆனால், ஒரு சில நிறுவனங்கள் வாகன ஓட்டிகளின் வாழ்க்கையில் விளையாடும் விதமாக மலிவான விலையில் போலியான ஹெல்மெட்டுகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றன. இது, விபத்து போன்ற அம்சபாவிதங்களில் உரிய பாதுகாப்பை வழங்க தவறுதால், மிகப்பெரிய இன்னலுக்கு அவர்கள் ஆளாக நேரிடுகின்றது. எனவே, ஹெல்மெட் வாங்குவதில் அதிகம் கவனம் தேவை.

இந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்!

அதேசமயம், மலிவு விலையில் அதிக பாதுகாப்பு நிறைந்த ஹெல்மெட்டுகள் இந்தியச் சந்தையில் விற்பனைக்குக் கிடைப்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் டாப் 5 விலை குறைந்த ஹெல்மெட்டுக்களின் பட்டியலைதான் நாம் இங்கு பார்க்கவிருக்கின்றோம்.

இந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்!

வேகா க்ரக்ஸ்

இதன் மதிப்பு ரூ. 1.142

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் இரு வித பயன்பாட்டை வழங்கும் ஹெல்மெட்டுகளில் ஒன்றாக வேகா க்ரக்ஸ் இருக்கின்றது. இது அதிக பாதுகாப்பு நிறைந்த ஹெல்மெட்டுகளிலும் ஒன்றாகும். இதனை அரை முக மற்றும் முழுமுக ஹெல்மெட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்!

அதாவது, தடைப்பகுதியைக் கவர் செய்யும் ஹெல்மெட்டின் முன்பக்க அடிப்பகுதியில் பொத்தான் வழங்கப்பட்டிருக்கும். அதனை அழுத்துவதன் மூலம் அதனை ஹால்ப் பேஸ் ஹெல்மெட்டாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த ஹெல்மெட் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதனை ஆன்லைன் மற்றும் கடைகளில் இருந்து வாங்க முடியும்.

இந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்!

ஸ்டட்ஸ் சியுபி 07

இதன் விலை ரூ. 1,175

அரை முக ஹெல்மெட்டாக ஸ்டட்ஸ் சியுபி காட்சியளிக்கின்றது. இந்த ஹெல்மெட்டும் இந்தியாவில் அதிக பாதுகாப்பை வழங்கும் தலைக் கவசங்களில் ஒன்றாக இருக்கின்றது. முக்கியமாக இதன் யுவி திறன் கொண்ட கண்ணாடிகள் சூரிய ஒளியில் இருந்து கண்களைக் காக்கும் வகையில் இருக்கின்றது. எனவே, இதன் அணிவதன் மூலம் விபத்தில் இருந்து தப்பிப்பது மட்டுமின்றி சூரிய ஒளியில் இருந்து பார்வைத் திறனையும் காத்துக் கொள்ள முடியும்.

இந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்!

ஸ்டீல் பேர்டு ஏர் 1 பீஸ்ட்

இதன் விலை ரூ. 1,969

ஸ்டீல்பேர்டு ஏர்-1 பீஸ்ட் ஹெல்மெட் சற்று விலை அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், ஓர் ஸ்மார்ட் ஹெல்மெட் ஆகும். இது மேட் பினிஷிங் பெயிண்டிங் ஸ்கீமில் கிடைக்கின்றது. இதன் உட்பகுதியில் இருக்கும் ஸ்பாஞ்ச் போன்றவற்றை தேவைப்பட்டால் ரீபிளேஸ் செய்து கொள்ள முடியும். இத்துடன், இந்த ஹெல்மெட்டை அணியும்போது அசௌகரியமான உணர்வு ஏற்படக்கூடாது என்பதற்காக வென்டிலேஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்!

ஸ்டீல்பேர்டு விஷன் ஹங்க்

இதன் விலை ரூ. 1,657

முழு முக ஹெல்மெட்டில் அதிக பாதுகாப்பு நிறைந்த ஒன்றாக ஸ்டீல்பேர்டு விஷன் ஹங்க் இருக்கின்றது. இந்த ஹெல்மெட்டில் காற்றை வடிகட்டி வழங்கும் திறன் உள்ளது. இது சற்றே அதிக எடைக் கொண்டது. இதன் ஒட்டுமொத்த எடையாக 1.2 கிகி உள்ளது.

இந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்!

இத்துடன், ஆண்டி அலர்ஜிக் மற்றும் ஆண்டிபேக்டீரியல் கோட்டிங் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன் கண்ணாடிகள் ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்டைப் பெற்றிருக்கின்றது. எனவே, நீண்ட காலம் பயன்படுத்தினாலும் இதன் காண்ணாடிகள் தெளிவான பார்வையையே வழங்கும்.

இந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்!

ஸ்டட்டஸ் க்ரோம் சூப்பர் டி1

இதன் விலை ரூ. 1,080

இந்த பட்டியலில் மிகக்குறைந்த விலையை மற்றும் அதிக பாதுகாப்பு திறனை கொண்டதாக ஸ்டட்டஸ் க்ரோம் சூப்பர் டி1 உள்ளது. இந்த ஹெல்மெட்டின் கண்ணாடியும் யுவி தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதுவும் தலையுடன் சேர்த்து கண்களுக்கும் அதிக பாதுகாப்பை வழங்குகின்றது.

இந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்!

இத்துடன், கவர்ச்சியான தோற்றத்தை வழங்க வேண்டும் என்பதற்காக வெள்ளை, கருப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் கிராஃபிக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் உட்பகுதி ஸ்பாஞ்சுகள் கழட்டி மாட்டும் தன்மைக் கொண்டவை. ஆகையால், தேவைப்பட்டால் அதனை கழட்டி, மீண்டும் துவைத்து பயன்படுத்த முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top 5 Best Safest Helmets In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X