ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய சுரங்கம்! சுரங்கம் பற்றி அறியவேண்டிய 5 முக்கியமான தகவல்கள் இதோ!

ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கம் பற்றி அறிந்துக் கொள்ள 5 முக்கிய தகவல்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய சுரங்கம்... இந்த சுரங்கம் பற்றிய 5 முக்கியமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

உலகின் நீளமான சுரங்கப்பாதை 'அடல் சுரங்கம்' கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மணாலி-லடாக்கை இணைக்கும் வகையில் சுமார் 8.8 கிமீ தூரம் நீளத்தில் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய சுரங்கம்... இந்த சுரங்கம் பற்றிய 5 முக்கியமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

இந்த நிலையில் இதேபோன்று ஓர் புதிய சுரங்கம் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றது. இது ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கம் பற்றிய சுவாரஷ்யமான ஐந்து தகவல்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய சுரங்கம்... இந்த சுரங்கம் பற்றிய 5 முக்கியமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இணைப்பு:

புதிதாக உருவாகி வரும் சுரங்கம் கஷ்மீர் மற்றும் ஜம்முவை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இது பனிஹல் மற்றும் தென் காஷ்மீரின் காஸிகுண்ட் பகுதிகளுக்கு இடையில் அமைய இருக்கின்றது. இது பயன்பாட்டிற்கு வந்தால் தங்கு தடையில்லா போக்குவரத்து உருவாகும்.

ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய சுரங்கம்... இந்த சுரங்கம் பற்றிய 5 முக்கியமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

இப்போது, கால நிலைக்கு ஏற்ப சில நேரங்களில் பனிஹல் மற்றும் தென் காஷ்மீரை இணைக்கும் பாதை மூட்படுவதுண்டு. ஆனால், புதிய சுரங்கம் பயன்பாட்டிற்கு வந்தால் இந்த நிலை ஏற்படாது. குறிப்பாக, அதிக பனி மற்றும் நிலச்சரிவால் ஏற்படும் தடை முழுமையாக இந்த சுரங்கத்தால் தவிர்க்கப்பட இருக்கின்றது.

ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய சுரங்கம்... இந்த சுரங்கம் பற்றிய 5 முக்கியமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

Image Courtesy: Basit Zargar/Twitter

பயண நேரம் குறையும்

புதிய சுரங்கம் பயன்பாட்டிற்கு வந்தால் பயண நேரம் பெருமளவில் குறையும் என கூறப்படுகின்றது. அதாவது, ஜம்மு-ஸ்ரீநகர் பயணிக்க 1 முதல் 1.5 மணி நேரங்கள் வரை மட்டுமே எடுத்துக் கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது இருப்பதை விட 16 கிமீ குறையவும் வாய்ப்பு உருவாகும்.

ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய சுரங்கம்... இந்த சுரங்கம் பற்றிய 5 முக்கியமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

எவ்வளவு செலவில் சுரங்கம் அமைக்கப்பட்டு வருகின்றது?

8.5 கிமீ நீளத்தில் புதிய சுரங்கம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதற்காக ரூ. 2,100 கோடி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் 2011ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மிக விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் இக்கட்டான சூழ்நிலையில் லேசான கால தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. இத்துடன் இன்னும் சில தடங்கல்களும் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய சுரங்கம்... இந்த சுரங்கம் பற்றிய 5 முக்கியமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

சுமூகமான போக்குவரத்து வசதி:

சுமூகமான போக்குவரத்து வசதிக்காக சுரங்கத்தை கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. சுரங்கப்பாதையின் உள்ளே 124 ஜெட் மின் விசிறிகள், 234 சிசிடிவி கேமிராக்கள் மற்றும் தீ விபத்தை எதிர்க்கும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இடம்பெற இருக்கின்றது.

ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய சுரங்கம்... இந்த சுரங்கம் பற்றிய 5 முக்கியமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

மேலும், 500 மீட்டர் இடைவெளிக்கு ஒரு முறை ஒரு அவசர கால வெளியேறும் பாதையும் இடம்பெற இருக்கின்றது. ஆகையால், இடையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இந்த அவசர கால பாதைகளின் வாயிலாக பிற வாகனங்களால் சுலபமாக வெளியேற முடியும்.

ஜம்மு-ஸ்ரீநகர் இடையில் கட்டப்பட்டு வரும் புதிய சுரங்கம்... இந்த சுரங்கம் பற்றிய 5 முக்கியமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

ஜவஹர் டனலுக்கு 400மீட்டர் கீழே இது அமைகின்றது:

ஜவஹர் டனலுக்கு 400மீட்டர் கீழே புதிய சுரங்க வழி அமைகின்றது. மேலும், இப்புதிய சுரங்கம் கடல் மட்டத்தில் இருந்தது 2,194 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பு: முதல் ஐந்து படங்களை மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top 5 Things To Know About New Tunnel Connecting to Srinagar. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X