பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

இந்தியாவில் பெட்ரோல் விலை விண்னை எட்டி விட்டது. விரைவில் சதம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது இந்தியாவில் வாகனம் பயன்படுத்துபவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி பெட்ரோலை எப்படி மிச்சம்

இந்தியாவில் பெட்ரோல் விலை விண்னை எட்டி விட்டது. இது இந்தியாவில் வாகனம் பயன்படுத்துபவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி பெட்ரோலை எப்படி மிச்சம் பிடிப்பது என்று மக்கள் எண்ண துவங்கி விட்டனர்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்கள் லிட்டருக்கு 15-25 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரக்கூடியது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்லக்கூடிய மைலேஜை விட நாம் ஓட்டும் போது குறைவாக தான் கிடைக்கும். அதற்கு முக்கிய காரணம் நாம வாகனம் ஓட்டும் விதம், மற்றும் ரோட்டின் கண்டிஷன் தான்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

இந்த செய்தியில் விண்னை முட்டும் அளவிற்கு பெட்ரோல் விலை இருக்கும் போது, நாம் என்ன எல்லாம் செய்து நமது வாகனத்தை அதிக மைலேஜ் கிடைக்க வைத்து பெட்ரோலை மிச்சப்படுத்த முடியும் என்பதை கீழே 7 டிபஸ்களாக கொடுத்துள்ளோம்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

சர்வீஸ்

சர்வீஸ் என்றால் உடனடியாக ஷோரூமில் உள்ள சர்வீஸ் சென்டரில் இருந்து போன் செய்தவுடன் அவர்களிடம் காரை கொண்டு சென்று சர்வீஸிற்கு வீடுவது அல்லது. அதுவும் ஒரு புறம் முக்கியம் என்றாலும் நீங்களும் உங்கள் காரை குறிப்பிட்ட கால இடைவெளியில் கவனிக்க வேண்டியது அவசியம்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

காரை தினம்தோறும் செக் செய்யாவிட்டாலும், 2 வாரங்களுக்கு ஒரு முறையாவது ஆயில் அளவுகள், கூலண்ட் அளவுகளை கண்காணிக்க வேண்டியது அவசியம். கார் தயாரிப்பாளர்கள் பரிந்துரை செய்யும் கிரேட் ஆயில்களையே பயன்படுத்துவது நல்லது.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

அடுத்து முக்கியமாக ஏர் பில்டர்கள், ஆயில் பில்டர்கள், ஆகியவற்றை நாம் அவ்வப்போது செக் செய்து கொள்வது நல்லது. இதுவும் நல்ல மைலேஜ் கிடைக்க வழி வகுக்கும். இதே போல் ஸ்பார்க் பிளக்களும் சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

ஏர் பிரஷர்

உங்கள் காரின் மைலேஜ் பாதிக்கப்பட அடுத்த முக்கியமான காரணம் ஏர் பிரஷர் தான் உங்கள் கார் டயரில் காற்றின் அளவுகள் சரியாக இருக்கிறதா என்பதை குறைந்தது வாரத்தில் ஒரு முறையாவது செக் செய்து கொள்ளுங்கள். சரியான அளவு ஏர் இல்லாத டயர்களால் கார்களின் கைனட்டிக் எனர்ஜி குறையும். இதனால் காரின் வேகம் குறைந்து, குறைந்த தூரம் செல்வதற்கே அதிக பெட்ரோல் செலவாகும்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

சில கார்களின் டயரின் ஏர் பிரஷரை டேஷ் போர்டிலேயே மானிட்டர் செய்யக்கூடிய வசதி இருக்கும் அவ்வாறான கார்களில் நீங்கள் டயர் பிரஷரை சரியாக செக் செய்து பிரஷர் குறையும் போது எல்லாம் மீண்டும் ஏர் பிடித்து பிரஷரை சரியான அளவில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

சரியான கியரில் பயணியுங்கள்

நீங்கள் ஹாலிவுட் படமான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் ஹீரோ வின் டீசலோ, அல்லது பால் வாக்கரோ இல்லை. நீங்கள் யாரையும் காரில் துரத்தி செல்லப்போவதும் இல்லை. இதனால் காரில் நொடிக்கு நொடி கியரை மாற்றி கொண்டிருக்க வேண்டாம். எந்த ஆர்.பி.எம்மில் எவ்வளவு கியரில் செல்ல வேண்டுமே அந்த கியரில் சென்றால் நன்றாக பெட்ரோலை மிச்சப்படுத்தலாம்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

அதே போல நாம் செய்யும் மிகப்பெரிய தவறு காரின் ஆர். பி.எம்.மை ரைட் லைன் வரை ரேஸ் செய்த பின்பு கியரை மாற்றுவது.உங்களுக்கு மைலேஜ் குறித்து கவலையில்லை என்றால் அவ்வாறு செய்யலாம். ஆனால் நல்ல மைலேஜ் கிடைக்க வேண்டும் என்றால் அந்த பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும். இதன் மூலம் நல்ல மைலேஜ் கிடைக்கும்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

காரில் செல்லும் போது கியரை முடிந்த அளவிற்கு சீக்கரமாக அதிகரித்து கொண்டே போக வேண்டும் அதே நேரத்தில் தேவைப்ட்டால் மட்டுமே கியரை குறைக்க வேண்டும். அதே போல மலைப்பகுதியில் இருந்து இறக்கும் போது காரை அதிகமான கியரிலோ அல்லது நியூட்டரிலோ காரை விட்டு விடுங்கள்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

அதிக கியர் இருக்கும் போதும், நியூட்டரிலில் இருக்கும் போதும், உங்கள் ஆர்.பி.எம் குறையாமல் இருக்கும். இதனால் இ.சி.யூவின் கண்டரோலில் பெட்ரோல் இருக்கும். இதனால் நீங்கள் சிறந்த மைலேஜை பெறலாம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் இறக்கத்தில் வரும் போது காரை ஆப் செய்து விடாதீர்கள்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

தேவயில்லாத பாரம் தேவையில்லை

காரில் ஏற்றப்படும் எடையும் காரின் மைலேஜை தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் காரில் பயணிப்பவர்களை நீங்கள் கீழே இறங்க சொல்ல முடியாது. ஆனால் காரில் ஏதேனும் தேவையில்லாத பொருட்கள் இருந்தால் அதை குறைத்து விடுங்கள். அதேநேரம் வெளியூர் பயணிங்களில் போது ஸ்டெப்னி வீல் இருப்பது அவசியம். சிட்டி பயணிகளின் போது அதை தவிர்க்கலாம்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

ஜன்னல் கதவுகளை மூடுங்கள்.

நீங்கள் காரில் செல்லும் போது காருக்குள் வெளி காற்று வருவது உங்கள் காரின் வேகத்தை குறைக்கும் இதனால் முடிந்த அளவு காரின் ஜன்னல் கண்ணாடிகளை முடிவைத்த நிலையில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் நல்ல மைலேஜ் மாற்றத்தை உணரலாம். ஏ.சி. கார்களின் ஜன்னல்களை பூட்டிவிட்டு ஏ.சி.யை ஆன் செய்து பயணிக்கலாம். ஆனால் அதனால் நீங்கள் சிறிது அளடு மைலேஜை இழக்க நேரிடும்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

நிழல்களில் காரை நிறுத்துங்கள்.

நீங்கள் வெளியில் காரை நிறுத்தினால் வெளியில் உள்ள வெப்பத்தை விட காருக்குள் வெப்பம் அதிகமாக இருக்கும். அதன் பின் நீங்கள் காரை எடுக்கும் போது அதிக நேரம் ஏ.சி.யை முழு ஸ்பீடில் போட வேண்டியது. வரும் இதனால் நீங்கள் மைலேஜை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதுவே நீங்கள் நிழலில் காரை பார்க் செய்தால் காருக்குள் வெப்பம் குறைவாக தான் ஏறும் இதனால் நீங்கள் ஏ.சி. பயன்படுத்தும் நேரம் குறைவாக இருக்கும்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

அதிக நேரம் காரை நிறுத்தாதீர்கள்

நீங்கள் சிக்கனலுக்காக நிற்கும் போது, அல்லது யாரேனும் வருவதற்காக காத்திருக்க நேர்ந்தால் காரை அதிக நேரம் ஸ்டார்ட் செய்த படியே நிறுத்தாதீர்கள். சுமார் 100 நொடிகளுக்கு மேற் நிற்க வேண்டிய அவசியம் வந்தாலே காரை ஆப் செய்து விட்டு நிறுத்துவது சிறந்தது. காரை ஸ்டார்ட் நிலையிலேயே இருந்தால் அதிக பெட்ரோல் செலவாகும். இதனால் உங்கள் மைலேஜ் பாதிக்கப்படும்.

பெட்ரோல் விற்குற விலைக்கு இதை பண்ணாதான் கட்டுப்படியாகும்; சிறந்த மைலேஜிற்கான 7 டிப்ஸ்

மேலே சொன்ன டிப்ஸ்களை நீங்கள் கடைபிடித்தால் நீச்சயம் உங்கள் கார் தற்போது தரும் மைலேஜை விட சிறந்த மைலேஜை உங்களுக்கு வழங்கும். இதனால் நீங்கள் நிச்சயம் பெட்ரோலுக்காக ஆகும் செலவை மிச்சப்படுத்தலாம்.

Most Read Articles
English summary
Top 7 Tips To Get Best Fuel Economy From Your Petrol Or Diesel Car. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X