பலமுறை சாலையில் உருண்ட இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...!

டொயோட்டா நிறுவனத்தின், புகழ்வாய்ந்த மடாலாக இருக்கும் இன்னோவா க்ரிஸ்ட்டா கார், பெரும் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் பாதுகாப்பு அம்சமான ஏர் பேக் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

விபத்தின்போது, காருக்குள் இருக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பல்வேறு சிறப்பம்சங்கள் கார்களில் பொருத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு, ஏர்பேக், பிரேக்கிங் வசதி, சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், பார்க்கிங் கேமிரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் அடங்கும்.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

இதில், முக்கியமான இடத்தில், ஏர் பேக் மற்றும் சீட் பெல்ட் ஆகியவை இருக்கின்றன. இவை, கார் விபத்திற்குள்ளாகும்போது, பயணிகளுக்கு ஏற்படும் பெருமளவிலான ஆபத்தை குறைக்க உதவும். இதற்காகவே, மேற்கூரிய அம்சங்களில் சிலவற்றை, புதிதாக விற்பனைக்கு களமிறங்க உள்ள கார்களில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாதுகாப்பு விதி அடுத்த வருடம் முதல் அமலுக்கு வரவிருக்கின்றது.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ந்த விபத்து ஒன்று மிக மோசமான தகவலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆம்... பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியான பகுதியில் அரங்கேறிய ஓர் விபத்து தான், இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

டொயோட்டா நிறுவனத்தின் க்ரிஸ்ட்டா கார்தான் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தை மிக முக்கியமானதாக நாம் பார்ப்பதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கின்றது. அந்த காரணம், பலரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

அந்தவகையில், அதிவேகமாக வந்த டொயோட்டா கார் ஒன்று, சாலை விபத்தில் சிக்கி பல முறை உருண்டுச் சென்றுள்ளது. இதில், துரதிர்ஷ்டவசமாக, காரின் ஏர் பேக்குகள் திறக்கவில்லை. இதனை, விபத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உறுதி செய்கின்றன. ஏர்பேக்குகள் செயலற்று போனதே இந்த விபத்தை மிக முக்கியமானதாக பார்க்க காரணமாக இருக்கின்றது.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

பொதுவாக ஏர்பேக்குகள் விபத்தின்போது, அதாவது சிறு மோதல் ஏற்பட்டால்கூட தானாக திறந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. அவை, பலூன் போன்ற அமைப்பைக் கொண்டவையாகும். விபத்து நடக்கக்கூடிய நேரத்தில் அது உடனடியாக விரிந்து ஓட்டுநர் உள்ளிட்ட பயணிகளை காயம் இன்றி காக்க உதவுகின்றது.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

இதன் மூலம் பெரிய விபத்துகளில் சிக்கினாலும்கூட, நம்மால் காயமின்றி உயிர்தப்பிக்க முடியும். ஆனால், இந்த டொயோட்டா க்ரிஸ்ட்டா காரில் இருந்த ஏர் பேக்குகள் செயல்படாமல், பெரும் ஆபத்தைச் சந்திக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும், இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பல முறை சாலையில் உருண்ட பின்பும், அந்த ஏர் பேக்குகள் வேலை செய்யவில்லை.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

அதிர்ஷ்டவசமாக, காரில் பயணித்த, இரு குழைந்தைகள் மட்டும் கார் ஓட்டுநர் சிறு காயங்களுடன் தப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த புகைப்படம் மற்றும் தகவலை டீம் பிஎச்பி என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

இந்த விபத்தானது, எதிர்புறத்தில் திடீரென வந்த ஹூண்டாய் காரால் நிகழ்ந்ததாக அப்பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்தனர். அதேசமயம், விபத்துக்குள்ளான காரின் புகைப்படங்களைப் பார்த்தால், மிக கோரமான விபத்தில் சிக்கியிருப்பது உறுதி செய்கின்றது. அந்த அளவிற்கு காரின் முகப்பு பகுதி, பக்கவாட்டு பகுதி என அனைத்து பகுதிகளும் கடுமையான சேதத்தைச் சந்திக்க வைத்துள்ளது.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

இதுபோன்ற விபத்தின்போது சென்சார் வேலை செய்யாமல் இருப்பதே, ஏர் பேக்குகள் வேலைச் செய்யாமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், சென்சார்களை தவிர்ப்பவையாக மிகப்பெரிய அளவிலான பம்பர்களே முக்கிய காரணமாக இருக்கின்றது. இவை, விபத்தின்போது காருக்கு கடத்தப்படும் சென்சார்களை தடுத்துவிடும்.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

இதனால், ஏர்பேக்குகளை ஆக்டிவேட் செய்வது தடுக்கப்பட்டு, பெரும் ஆபத்தில் சிக்கும் சூழ்நிலையை ஏற்படுடத்தி விடுகின்றது. ஆனால், தற்போது விபத்திற்குள்ளான, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் இதுபோன்ற பம்பர் அமைப்புகள் இருந்ததாக தெரியவில்லை. இருப்பினும், ஏர்பேக்குகள் வேலை செய்யாமல் தடுக்கப்பட்டுள்ளன. ஆகையால், உற்பத்தியின்போது ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

டொயோட்டா நிறுவனத்தின்மூலம் வெளிவரும் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. எம்பிவி ரகத்திலான இந்த 7 மற்றும் 8 சீட்டர் கார், பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்ற மாடலாக இருக்கின்றது. அதேபோன்று, இந்த கார் தற்போது ஜிஎக்ஸ், விஎக்ஸ், இசட்எக்ஸ் மற்றும் டூரிங் ஸ்போர்ட் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

இத்துடன், இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றது. இதில், சிறப்பம்சங்களாக, ஹாலஜன் ஹெட்லைட்டுகள், ஃபேப்ரிக் இருக்கைகள், ஏசி சிஸ்டம், பவர் விண்டோஸ், பவர் ஸ்டியரிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பல முறை சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான இன்னோவா க்ரிஸ்ட்டா... பாதுகாப்பு அம்சம் செயல்படாததால் அதிர்ச்சி...

இவற்றுடன் பாதுகாப்பு வசதியாக, முன்புறத்தில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடி வசதியுடன் கூடிய ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்டவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. இது தற்போது ரூ.14.93 லட்சத்திலிருந்து ரூ. 23.24 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இவையனைத்தும், டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toyota Innova Rolls Over Thrice In Crash; Airbags Fail To Deploy. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X