ஆபத்தில் சிக்கி கொண்ட கார்... கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? ஹார்ட் பீட்டை எகிற வைத்த சம்பவம்...

மலை சாலையில் இருந்த நீரோடையில் டொயோட்டா இன்னோவா கார் ஒன்று சிக்கி கொண்ட சம்பவம் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.

ஆபத்தில் சிக்கி கொண்ட கார்... கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? ஹார்ட் பீட்டை எகிற வைத்த சம்பவம்...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான எம்பிவி ரக கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா (Toyota Innova) உள்ளது. சௌகரியம், விசாலமான இட வசதி ஆகியவையே இதற்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன. அத்துடன் டொயோட்டா மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் இன்னோவா காரை அவர்கள் விரும்ப ஒரு காரணம் என்றால் மிகையல்ல.

ஆபத்தில் சிக்கி கொண்ட கார்... கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? ஹார்ட் பீட்டை எகிற வைத்த சம்பவம்...

டொயோட்டா இன்னோவா காருக்கான பராமரிப்பு செலவும் கூட மிகவும் குறைவுதான். இப்படி இன்னோவா காரை இந்தியர்கள் விரும்புவது ஏன்? என்பதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். பல்வேறு ப்ளஸ் பாயிண்ட்கள் இருந்தாலும் கூட, டொயோட்டா இன்னோவா 2 வீல் டிரைவ் (2WD) சிஸ்டம் மட்டுமே கொண்ட கார் என்பது ஒரு மைனஸ்தான்.

MOST READ: பருவமழை வரப்போகுது... உங்க வண்டிக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு ரொம்ப முக்கியம்... என்ன பண்ணணும்னு தெரியுமா?

ஆபத்தில் சிக்கி கொண்ட கார்... கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? ஹார்ட் பீட்டை எகிற வைத்த சம்பவம்...

2 வீல் டிரைவ் சிஸ்டம் மட்டுமே இருப்பதால், ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்ளும்போது சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை நிரூபிக்கும் வகையிலான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பழைய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் ஒன்று மலை சாலையில் இருந்த நீரோடையின் நடுவே சிக்கி கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

ஆபத்தில் சிக்கி கொண்ட கார்... கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? ஹார்ட் பீட்டை எகிற வைத்த சம்பவம்...

Mountain Goat 4WD TV என்ற யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பழைய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் ஒன்று மலைச்சாலையில் இருந்த நீரோடையில் சிக்கி கொண்டிருப்பதை காட்டுவதுடன் இந்த வீடியோ தொடங்குகிறது. அப்பகுதியை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக டொயோட்டா இன்னோவா அங்கு சிக்கி கொண்டது.

ஆபத்தில் சிக்கி கொண்ட கார்... கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? ஹார்ட் பீட்டை எகிற வைத்த சம்பவம்...

அந்த காரின் பின் சக்கரம் பாறையில் சிக்கி கொண்டதால், அதனால் மேற்கொண்டு நகர முடியவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியே வந்து விட்டனர். இது போன்ற நீரோடைகளை கணிக்கவே முடியாது. திடீரென நீர்வரத்து அதிகரித்தால், பெரும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆபத்தில் சிக்கி கொண்ட கார்... கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? ஹார்ட் பீட்டை எகிற வைத்த சம்பவம்...

ஆனால் அப்படி எதுவும் நடக்காமல், காருக்குள் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். ஆனால் நீண்ட நேரமாக முயற்சி செய்தும் அவர்களால் காரை மீட்க முடியவில்லை. அந்த நேரத்தில் நீரோடையில் நீர்வரத்து சற்று அதிகரித்ததால், காருக்கு உள்ளேயும் தண்ணீர் புக தொடங்கி விட்டது. பொதுவாக மலை சாலைகள் குறுகலாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆபத்தில் சிக்கி கொண்ட கார்... கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? ஹார்ட் பீட்டை எகிற வைத்த சம்பவம்...

எனவே சாலையின் ஏதாவது ஒரு இடத்தில் ஏதேனும் ஒரு வாகனம் பழுதாகி நின்று விட்டாலோ அல்லது இது போன்று சிக்கி கொண்டாலோ மிகப்பெரிய அளவில் டிராபிக் ஜாம் ஏற்படும். அதே கதைதான் இங்கும் கூட நடந்தது. இந்த டொயோட்டா இன்னோவா சிக்கி கொண்டதால், அதன் பின்னால் வந்த வாகனங்கள் முன்னோக்கி செல்ல வழி இல்லாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

ஆபத்தில் சிக்கி கொண்ட கார்... கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? ஹார்ட் பீட்டை எகிற வைத்த சம்பவம்...

எனவே டொயோட்டா இன்னோவா காரை மீட்பதற்காக மீட்பு படை களத்தில் இறங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த உடனேயே டோ ரோப் மூலம் காரை இழுக்க அவர்கள் முயன்றனர். ஆனால் அந்த கார் பாறைகளுக்கு இடையே நன்றாக சிக்கி கொண்டது. அத்துடன் கொஞ்சம் சறுக்கி செல்லவும் தொடங்கியது. எனவே மஹிந்திரா பொலிரோ மூலம் இன்னோவாவை கயிறு கட்டி இழுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆபத்தில் சிக்கி கொண்ட கார்... கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? ஹார்ட் பீட்டை எகிற வைத்த சம்பவம்...

அதற்கு முன்பாக மீட்பு குழு அதன் பொஸிஷனை சரி செய்து கொண்டது. அத்துடன் க்ரிப் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இன்னோவா காரை சுற்றி சிறு சிறு பாறைகளையும் மீட்பு குழு போட்டு வைத்தது. உள்ளூர் மக்களும் இந்த பணிகளுக்கு உதவி செய்ய வந்தனர். இப்படி பலரின் கூட்டு முயற்சியின் காரணமாக, 14 மணி நேர போராட்டத்திற்கு பின் இன்னோவா ஒரு வழியாக மீட்கப்பட்டது.

ஆபத்தில் சிக்கி கொண்ட கார்... கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? ஹார்ட் பீட்டை எகிற வைத்த சம்பவம்...

டொயோட்டா இன்னோவா 4 வீல் டிரைவ் கார் கிடையாது. மேலும் இதுபோன்ற இடங்களில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் டொயோட்டா இன்னோவா வடிவமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இதுபோன்ற இடங்களில் டொயோட்டா இன்னோவா காரை ஓட்டி சென்றால், இப்படி சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற இடங்களுக்கு பயணிப்பதாக இருந்தால் கூடுமான வரை 4 வீல் டிரைவ் கார்களில் செல்லுங்கள். 2 வீல் டிரைவ் கார்களில் செல்வதாக இருந்தால், ஒரு குழுவாக பயணம் செய்வது நல்லது. ஏனெனில் தவறாக ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில், குழுவில் உள்ள மற்றவர்களால் உங்களுக்கு உதவி செய்ய முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toyota Innova MPV Gets Stuck In Mountain Stream: Mahindra Bolero Rescues It - Watch Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X