அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களினால் சாலை போக்குவரத்து மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறது. இதனால் ஏற்படும் நெரிசலை சமாளிப்பது போக்குவரத்து போலீசாருக்கு பெரிய சவாலான விஷயமாக உள்ளது.

அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

நெரிசல் ஒருபுறம் இருக்க, தகுந்த சான்றிதழ், ஹெல்மெட் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பது என போக்குவரத்து போலீசார் அதிகளவிலான பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக அரசாங்கமும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

கடுமையான விதிகள் மற்றும் அதிகளவிலான அபராதங்களுடன் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தாலும் இதனால் விதி மீறல்கள் குறைந்தபாடில்லை. இந்த அதிக கட்டணத்தை தவிர்க்காமல் மாறாக அதையும் செலுத்திவிட்டு செல்லும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் வருகிறது.

அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

இத்தகைய அபராதம் எல்லாம் அரசாங்கத்திற்கு வருவாய்தான். ஆனால் இதிலும் சிலர் மோசடி வேலைகளில் ஈடுபட தயங்குவதில்லை. அதாவது அபராதங்களை உடனடியாக செலுத்த இயலாதோர் மற்றும் ஆன்-லைன் மூலமாக பணம் பரிமாற்றம் செய்வோர் இ-செல்லான் அமைப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு செலுத்துவோர்களில்தான் பலர் அபராதத்தை முறைப்படி செலுத்துவதில்லை என்கின்றனர், போக்குவரத்து போலீசார்.

அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

மும்பை நகரத்தில் மட்டும் இவ்வாறு இ-செல்லான் மூலமாக செலுத்தப்படாத தொகை ரூ.80 கோடி அளவில் உள்ளது. இது மும்பை போலீஸை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்க, அபராதம் செலுத்தாதவர்களை கைது செய்ய வாராண்ட்களை பிறப்பிக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தை மும்பை போலீசார் நாட உள்ளனர்.

அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

இதுகுறித்து வருகிற டிசம்பர் 1ஆம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கிவிடும் என்றே தெரிகிறது. அனுமதி வழங்கப்பட்டுவிட்டால் அடுத்த மாதம் முதல் மும்பையில் அபராதம் செலுத்தாமல் சென்றால் சிறைத்தண்டனைதான்.

அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

மும்பையில் 2016ல் இ-செல்லான் அமைப்பின் மூலம் அபராதம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த அறிமுக நாளில் இருந்து இதுவரை சுமார் 27 லட்சம் இ-செல்லானிற்கு அபராதம் செலுத்தப்படவில்லை. இதன் மொத்த மதிப்பு தொகைதான் இந்த 80 கோடி ரூபாய். இதில் 9,000 இ-செல்லான்களுக்கான அபராத தொகை ரூ.5,000 ஆகும்.

அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

இவ்வாறு அபராதம் செலுத்தாமல் சென்றவர்களுக்கு போலீஸ் தரப்பில் இருந்து குறுந்தகவல்களும், கடிதங்களும் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இதற்கு சரியாக பதில் அளிப்பவர்கள் மிக சிலரே என்கின்றனர், மும்பை போலீசார்.

அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

மும்பை நகரத்தில் போக்குவரத்து விதி மீறல்களால் இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 100 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது 139 கோடி ரூபாய் வசூலான 2018ஆம் ஆண்டை விட குறைவுதான் என்றாலும் இந்த 80 கோடி ரூபாய் விஷயம்தான் மும்பை போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

இதில் அதிக தொகையை செலுத்தாமல் இருப்பவர் மும்பையை சேர்ந்த ரஹீல் மேத்தா என்கிற தொழிலதிபர்தான். இவர் தனது ஹோண்டா அக்கார்ட், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் போன்ற லக்சரி கார்களில் சுமார் 103 தடவைக்கு மேலாக வேகமாக சென்றதற்காக அபராதத்திற்கு உள்ளாகியுள்ளார். இதன் மொத்த மதிப்பு தொகை ரூ.1.04 லட்சமாகும். ஆனால் இதில் அவர் ஒரு அபராதத்தை கூட செலுத்தவில்லை. இதனால் மும்பை போலீசார் அவரது ஹோண்டா அக்கார்ட் காரை கடந்த ஆண்டு பறிமுதல் செய்தனர்.

அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

ரஹீல் மேத்தா மட்டுமின்றி பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும், அரசியல்வாதிகளும் இந்த இ-செல்லான் மூலம் அபராதம் செலுத்தாதவர்களின் லிஸ்ட்டில் உள்ளனர். இதன் காரணமாகவே மும்பை போலீசார் சிறைத்தண்டனை என்கிற அதிரடியான முடிவுக்கு சென்றுள்ளனர்.

அபராதம் செலுத்தவில்லை எனில் சிறை... மும்பை போலீசார் கொண்டு வரவுள்ள புதிய சட்டம்...

இதுபோன்ற சம்பவங்கள் மும்பை மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றவாறுதான் உள்ளன. இதனால் அபராதம் செலுத்தாதவர்களுக்கு சிறைத்தண்டனை என்கிற சட்டம் எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

source: Mumbai Mirror

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Traffic Police To Arrest Motorists With Unpaid Traffic Fines: Too Strict?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X