வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு இதுதான்... பன்மடங்கு உயரவிருக்கும் அபராத தொகை...

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டு வரும் அபராதத் தொகை பத்து மடங்கு அதிகமாக உயர்த்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

போக்குவரத்து நெரிசல், அதிக விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக போக்குவரத்து விதிகள் இயக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதனை பெரும்பாலான வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதே இல்லை.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

இதன்காரணமாக, அண்மைக்காலங்களாக சாலை விபத்துகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிகளுக்கு விதமாக பல்வேறு நடவடிக்கைகள் வருகின்றன.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

இருப்பினும், இதைச் துச்சமாக நினைக்கும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுக் கொண்டுத்தான் இருக்கின்றார்கள். ஆகையால், விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் விதமாக சமீபகாலமாக பல்வேறு புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

இந்நிலையில், போக்குவரத்து விதிமுறை மீறிலில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கும் தொகையை பன்மடங்கு உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டு வருகவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை இடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

அந்தவகையில், புதிய விதிகள் அமலுக்கு கூடிய விரைவில் அமலுக்கு வரவுள்ளன. அவ்வாறு, வரவிருக்கும் இந்த புதிய விதிகளுக்கான மசோதா மக்களவை மூலம் ஒப்புதல் பெறப்பட்டு, மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கான பில் அமல்படுத்தப்பட்டால், தற்போது விதிக்கப்பட்டு வரும் அபராதத் தொகையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும்.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

இந்த புதிய விதியானது நாட்டின் தற்போதைய போக்குவரத்து முறையை மாற்றியமைக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வகையிலான புதிய விதிகளைதான், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இதற்கான ஒப்புதல் அடுத்த நடைபெற இருக்கும் கூட்டத்தில் வழங்கப்பட உள்ளது.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

மத்திய அரசின் இந்த புதிய திட்டத்திற்கு எதிர்கட்சிகள் அனைத்தும், தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய திருத்தங்கள், சாலை போக்குவரத்து பாதுகாப்பு வழங்குவதற்கான எந்தவொரு அம்சமும் இல்லை என்றும், அது மாநில ஆட்சி உரிமையை பறிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

மேலும், புதிய போக்குவரத்து விதி கர்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அபராதத் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட இருப்பது, வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

புதிய விதியில், காலவதியான ஓட்டுநர் உரிமத்தை வைத்து வாகனத்தை இயக்குபவருக்கு, ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த குற்றத்திற்காக ரூ. 500 மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகின்றது.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

அதேபோன்று, இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டே செல்போனில் பேசினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். ஆனால், தற்போது ரூ. 1,000 அபராதம் வசூலிக்கப்படுகின்றது. இதேபோல, குடித்துவிட்டு வாகனத்தை இயக்குபவர்களிடம் தற்போது வசூலிக்கப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கு பதிலாக, ரூ. 10 அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

இதைத்தொடர்ந்து, வேகமாக இயக்கப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் ரூ. 1,000 ஆயிரம் அபராதம், ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இதேபோன்று, கார் உரிமையாளர்களால் அரங்கேற்றப்படும் விதிமீறல்களுக்கும் அபராத தொகை அதிகரிக்கப்பட உள்ளது.

அந்தவகையில், சீட் பெல்ட் அணியாமல் காரை இயக்குபவர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட உள்ளது. இந்த குற்றத்திற்காக தற்போது நூறு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகின்றது.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

இத்துடன், இந்த மசோதாவில் கூடுதலாக சில விதிகளும் அமல்படுத்தப்பட உள்ளன. அந்தவகையில், 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால், அபராதம் விதிப்பது மட்டுமின்றி அவர்களை சிறையிலடைக்கவும் புதிய விதியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, சிறார்கள் வாகனத்தை இயக்குவதை அவர்களின் பெற்றோர்கள் தவிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

இதைத்தொடர்ந்து, இனி புதிதாக ஓட்டுநர் உரிமையைப் பெறவும், வாகனங்களை பதிவு செய்யவும் இனி ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட உள்ளது. இது, ஒரே நபர் இரண்டுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமத்தைப் பெறும் சூழலை தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக உள்ளது.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

மேலும், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள வரி வித்தியாசத்தை சீர் செய்யவதற்காக, ஒன் நேஷன், ஒன் டேக்ஸ் என்ற திட்டத்தையும் இத்துடன் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், நாடு முழுவதும் ஒரே தொகையிலான இன்சூரன்ஸ் பிரீமியம் நிர்ணயிக்கப்படும்.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

மத்திய அரசின் இந்த புதிய திட்டமானது, சாலை போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்குவிதமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அதிகபட்ச அபராதத் தொகையைக் கணக்கில் கொண்டு, சில போலீஸார் முறைகேட்டில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. அதிகளவிலான அபராத தொகையைக் காட்டி அவர்கள் லஞ்சம் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.

வாகன ஓட்டிகளே உஷார்... பத்து மடங்கு அதிகரிக்கும் அபராத கட்டணங்கள்...? முழு தகவல் உள்ளே!

ஏற்கனவே, சில போலீஸார், "கோர்ட்ல போய் காத்திருந்து அபராதம் கட்டுறியா இல்ல, இங்கேயே ரூ. 50 அல்லது ரூ. 100 கொடுத்திட்டு கெளம்புறியா என கேட்டு வருகிறார்கள். ஆகையால், இந்த புதிய விதியை அமல்படுத்துவதற்கு முன்னதாக, போலீஸார் செய்யும் முறைகேட்டைத் தவிர்க்க, கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வாகன ஓட்டிகளும், சமூக நல ஆர்வலர்களும் முன் வைத்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Traffic Fines Increasing 10 Percent Extra. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X