மணிக்கு 180 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த டிரெயின் 18 எக்ஸ்பிரஸ்!

டிரெயின் 18 ரயிலானது மணிக்கு 180 கிமீ வேகத்தில் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டால்கோ ரயில் 180 கிமீ வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இந்தியாவிலேயே உருவாக்

சென்னையில் தயாரிக்கப்பட்ட டிரெயின் 18 எக்ஸ்பிரஸ் ரயில் சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிமீ வேகத்தை தொட்டு அசத்தி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த டிரெயின் 18 எக்ஸ்பிரஸ்!

ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஒருபடியாக, டிரெயின் 18 என்ற புதிய அதிவேக ரயில் சென்னை ஐசிஎஃப்பில் உருவாக்கப்பட்டது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் கடந்த இரு வாரங்களாக நடந்து வருகிறது.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த டிரெயின் 18 எக்ஸ்பிரஸ்!

முதல்கட்டமாக 115 கிமீ வேகத்தில் இயக்கி இந்த ரயிலின் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டது. அதுமுதல் படிப்படியாக வேகம் அதிகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த தநிலையில்,நேற்று டெல்லி- மும்பை ராஜ்தானி வழித்தடத்தில் வைத்து இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த டிரெயின் 18 எக்ஸ்பிரஸ்!

அப்போது, டிரெயின் 18 ரயிலானது மணிக்கு 180 கிமீ வேகத்தில் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டால்கோ ரயில் 180 கிமீ வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த டிரெயின் 18 எக்ஸ்பிரஸ்!

இந்தநிலையில், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த புதிய ரயில் கிட்டத்தட்ட 180 கிமீ வேகத்தை நெருக்கமாக சென்று அசத்தி இருக்கிறது. தற்போது இந்தியாவில் இயக்கப்படும் பிற அதிவேக ரயில்களை போல டிரெயின் 18 ரயிலுக்கு தனி எஞ்சின் தேவையில்லை.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த டிரெயின் 18 எக்ஸ்பிரஸ்!

ரயில் பெட்டிகளின் அச்சில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு, சக்கரங்களுக்கு நகர்வு உந்துசக்தி நேரடியாக கொடுக்கப்படுகிறது. இதனால், இந்த ரயில் மிக விரைவாக வேகமெடுக்கும். அதேபோன்று, மிக விரைவாக வேகத்தை குறைக்கும்.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த டிரெயின் 18 எக்ஸ்பிரஸ்!

இந்த ரயில் புல்லட் ரயில்களை போலவே, முகப்பு பகுதி ஏரோடைனமிக்ஸ் எனப்படும் காற்றை கிழித்துச் செல்வதற்கான சிறப்பான வடிவமைப்பை பெற்றிருக்கிறது. இதனால், காற்று உராய்வு குறைந்து வேகம் எடுக்கவும், மின் சிக்கனத்தை பெறுவதற்கும் உதவி புரியும்.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த டிரெயின் 18 எக்ஸ்பிரஸ்!

இந்தத ரயிலின் இருபுறத்திலும் ஓட்டுனர் கேபின் அமைந்துள்ளது. எனவே, ரயிலை ஓட்டுனர்கள் மாறிக் கொண்டு எளிதாக இயக்க முடியும். இந்த வசதி மூலமாக பயண நேரம் 15 சதவீதம் அளவுக்கு குறையும். இந்த ரயிலில் மிகச் சிறப்பான பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த டிரெயின் 18 எக்ஸ்பிரஸ்!

டெல்லி - போபால் இடையிலான சதாப்தி ரயிலுக்கு மாற்றாக இந்த புதிய டிரெயின் -18 ரயில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. அப்படி பயன்பாட்டுக்கு வரும்போது மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலில் ஏராளமான சொகுசு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மணிக்கு 180 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த டிரெயின் 18 எக்ஸ்பிரஸ்!

தற்போது டெல்லி - போபால் இடையே இயக்கப்படும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்தான் இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. கதிமான் எக்ஸ்பிரஸ் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய டிரெயின் 18 ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருப்பதால், இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெறும்.

Image Source:The Financial Express

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
Train 18 crosses 180 kmph speed limit during test run
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X