திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு என்ற ரீதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அந்த டுவிட் அந்நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்லி வெளியேற்றத்த

By Balasubramanian

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு என்ற ரீதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அந்த டுவிட் அந்நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்லி வெளியேற்றத்தால் வேலையிழக்கபோகும் பலர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்கமதி செய்யப்படும் சில பொருட்கள் மீதான வரியை அதிகரித்தால் அதனால் கோபம் கொண்ட பல நாடுகள் அமெரிக்காவில் இருந்து தங்கள் நாடுகளுக்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரியை அதிகரித்தனர்.

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் அமெரிக்க பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதத்தில் அவர் இந்த நடவடிக்கையை எடுத்தார். அவர் எடுத்த இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது என்னமோ அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்கள் தான்.

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

அமெரிக்காவை மையமாக கொண்டு தயாரிப்புகளை தொடரும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஆண்டிற்கு 40 ஆயிரம் பைக்குகளை ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. டிரம்ப்பின் இந்த வரி விளையாட்டால் கோபமான ஐரோப்ப நாடுகள் அமெரிக்காவில் இருந்து தங்கள் நாட்டிற்குள் வரும் பொருட்கள் மீது வரிவிதித்தனர்.

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

இதில் ஹார்லி பைக்கிற்கான விலை சுமார் 2 ஆயிரம் டாலர் வரை அதிகரித்தது. இதனால் அந்நிறுவனத்தின் பைக் விற்பனை முழுவதும் கிட்டத்தட்ட நின்று போகும் அபாயம் ஏற்பட்டது. எவ்வளவு முயன்றும் அந்நிறுவனத்தால் இதை சமாளிக்க முடியவில்லை.

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

இதையடுத்து ஹார்லி நிறுவனம் அமெரிக்காவை காலி செய்யப்பபோவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து அதிபர் டிரம்பும் சில டுவிட்களை பதிவிட்டார். இது உலகம் முழுவதும் செய்தியானது.

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

இந்நிலையில் அமெரிக்க அரசு சார்பில் ஹார்லி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்நிறுவனம் அமெரிக்காவிலேயே தாங்கள் தயாரிப்பை தொடர விரும்ப வில்லை. அமெரிக்காவை காலி செய்யும் மன நிலையில் உறுதியாக இருந்தது.

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

அந்நிறுவனம் அமெரிக்காவை காலி செய்தால் பலர் வேலைகளை இழக்க நேரிடும். அந்நிறுவனத்தை நம்பி பலர் பக்கதொழில் ஆரம்பித்தவர்களுக்கும் வேலையில்லாமல் போகும். அதனால் அந்நிறுவனத்தை சார்ந்திருக்கும் ஊழியர்கள் என்னசெய்வது தெறியாமல் விழித்து கொண்டிருக்கிறார்கள்.

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிதாக டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "ஹார்லி நிறுவனம் அமெரிக்காவில் அவர்கள் தயாரிப்பை தொடர விரும்பவில்லை. எனது தலையமையிலான ஆட்சி மற்ற பைக் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

அவர்களை அமெரிக்காவிற்குள் பைக் தயாரிக்க வைக்கவுள்ளோம். ஹார்லி நிறுவனம் வெளியேறுவதை அதன் வாடிக்கையாளர்களே விரும்பவில்லை அதன் எதிரொலியாக

அந்நிறுவனம் 7 சதவீத சரிவை சந்தித்துள்ளது. " என பதிவிட்டுள்ளார்.

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

ஹார்லி நிறுவனம் ஏற்கனவே அதிக அளவு உற்பத்தி மற்றும் விற்பனையை செய்து வந்தது. அவர்களை விரட்டி விட்டு டிரம்ப் புதிய கம்பெனியை கொண்டு வருவதாக கூறியுள்ளார். புதிய நிறுவனங்கள் வந்தால் அவர்களால் எவ்வளவு பேருக்க வேலை வழங்கிவிட முடியும். எவ்வளவு பணப்புழக்கத்தை அமெரிக்காவிற்கு கொண்டு வந்து விட முடியும்ன என்பது பற்றி யோசிக்காமல் டிரம்ப் முடிவெடுத்து வருவதாக அந்நாட்டு மக்கள் பலர் பேசி வருகின்றனர்.

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

திரிஷா இல்லேன்னா திவ்யா என்ற ரேஞ்சிற்கு அதிபர் டிரம்ப் செயல்படுவது அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த விடும் என்பதை டிரம்ப் உணராமல் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திரிஷா இல்லேன்னா திவ்யா; ஹார்லி டேவிட்சன் இல்லன்னா இன்னொன்னு: டிரம்ப் கடுப்பு டுவிட்

தற்போது அமெரிக்காவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள ஹார்லி நிறுவனம் அடுத்தாத பல்வேறு நாடுகளில் தங்கள் தயாரிப்பை தொடர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக பிரேசில், இந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இதன் உற்பத்தியை துவங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Trump Threatens To Bring Other Motorcycle Brands Into The US. Read in Tamil
Story first published: Wednesday, July 4, 2018, 18:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X