டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தேவையான உடை மற்றும் பாதுகாப்பு கவசங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

தமிழகத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கி வரும் டிவிஎஸ் நிறுவனம், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களைத் தயாரித்து வருகின்றது. இதில், இருசக்கர வாகன உற்பத்தியிலேயே அது அதிக கவனத்தைச் செலுத்தி வருகின்றது.

இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தேவையான உடை மற்றும் பாதுகாப்பு கவசங்களை அது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

இந்த புதிய தயாரிப்புகளை அண்மையில் நடைபெற்ற டிவிஎஸ் 'மோட்டார் சோல்' (MotoSoul) என்ற நிகழ்வில் அது அறிமுகம் செய்தது. தொடர்ந்து, அவற்றிற்கு டிவிஎஸ் 'ரேசிங் பெர்ஃபார்மன்ஸ் கியர்' (TVS Racing Performance Gear) என்ற பெயரையும் வைத்துள்ளது.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

இந்த பொருட்கள் அனைத்தையும் ஆன்லைன் வர்த்தகம் மூலமாக விற்பனைச் செய்ய டிவிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் இயங்கி வரும் அதன் டீலர்கள் மூலமாகவும் விற்பனைச் செய்ய அது திட்டமிட்டுள்ளது. இதற்கான பணியில் அது தற்போது தீவிரம் காட்டி வருகின்றது.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

அந்தவகையில் ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட், ரைடிங் பேண்ட், கையுறை மற்றும் காலணி உள்ளிட்டவற்றை அது அறிமுகம் செய்துள்ளது. இத்துடன், டி சர்ட், மழை கால உடை, ஷூ, பேக், தொப்பி, சன் கிளாஸ், அர்பன் ஜாக்கெட் மற்றும் பேண்ட் உள்ளிட்டவையும் விற்பனைச் செய்யப்பட உள்ளது.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

ஹெல்மெட்:

டிவிஎஸ் அறிமுகம் செய்துள்ள ஹெல்மெட்டிற்கு ஐஎஸ்ஐ மற்றும் இசிஇ சான்று கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இந்த ஹெல்மெட்டில் ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

தொடர்ந்து ஹெல்மெட்டின் உள்பகுதியில் உள்ள பஞ்சு போன்ற அமைப்பினை தனியாக கழட்டி வெளியேற்றும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், அது அழுக்காக காணப்பட்டால், அதனை வெளியேற்றி துவைத்துக் கொள்ள முடியும். இதற்காகவே இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

மேலும், இந்த ஹெல்மெட்டில் உள்ள கண்ணாடி இருட்டிலும் அதிக பார்வைத் திறனை வழங்கும் சிறப்பு வசதியைக் கொண்டுள்ளது. இதற்கு ரூ. 2,500 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

ரைடிங் ஜாக்கெட்:

ரைடிங் ஜாக்கெட்டில் பிரத்யேகமாக 600டி தரத்திலான பாலிஸ்டர் துணி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நீண்ட நாள் உழைக்கும் தன்மைக் கொண்டது. இந்த ஜாக்கெட்டிற்கு நிலை 1 சிஇ சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனை அணிந்து பயணிக்கும் வாகன ஓட்டிக்கு முழங்கை, தோள்பட்டை மற்றும் முதுகு பகுதிகளுக்கு அதீத பாதுகாப்பை வழங்கும்.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

இது வாட்டர் ப்ரூஃப் தரத்தையும் பெற்றிருக்கின்றது. ஆகையால், இதனை மழைக் காலங்களிலும் பயன்படுத்தலாம். இந்த ஜாக்கெட்டிற்கு ரூ. 5,600 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

கையுறை:

கையுறை (ரைடிங் குளைவ்ஸ்)-களிலும் அதிக உயர்தரம் வாய்ந்த பாலியுரிதீன் மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விரல்களுக்கு இடையில் காற்றைச் செலுத்தும் வசதியைப் பெற்றிருக்கின்றது. அதேசமயம், சவாரியின்போது விரல்களுக்கு எந்த இடையூறையும் அது அளிக்காது. அதற்கேற்பவகையில் நெகிழ்வு தன்மையை அது பெற்றிருக்கின்றது.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

இத்துடன், கண்ணாடிகளை தூய்மைப்படுத்தும் வகையில் ரப்பர் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொடுதிரை திறன் கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர்களை கன்ட்ரோல் செய்யும் வகையில் கையுறைக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கையுறையின் விலையை டிவிஎஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

ரைடிங் பேண்ட்:

ரைடிங் ஜாக்கெட்டில் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் போன்றே, பேண்டிலும் 600 டி சிராய்ப்பு எதிர்ப்பு பாலிஸ்டர் துணி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விபத்தின்போது வாகன ஓட்டிக்கு சிறு காயத்தைக்கூட ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

மேலும், இது அதிகளவு நெகிழ்வு தன்மைக் கொண்டிருப்பதால் அதனை வாகன ஓட்டி அணியும்போது, அது உடலில் இருப்பதைப் போன்ற உணர்வு துளிகூட இருக்காது.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

இந்த பேண்ட்டிற்கு நிலை 1 சிஇ சான்று கிடைத்துள்ளது. இது, முட்டி மற்றும் காலுக்கு பாதுகாப்பு வழங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது. இந்த பேண்டில், ரைடிங் ஜாக்கெட்டை இணைக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பேண்ட் மற்றும் ஜாக்கெட் ஒரு சேர இணைத்துக் கொள்ள முடியும்.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

ரைடிங் ஷூ:

ஜாக்கெட் மற்றும் பேண்ட் ஆகியவற்றைப் போன்றே இந்த ஷூவும் ரைடருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த ஷூவிற்கு சிந்தடிக் மற்றும் அகன்று விரிகின்ற வகையிலான மேற் துணி கொடுக்கப்பட்டுள்ளது.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

தொடர்ந்து, ஷூவிற்குள் காற்று புகும் வகையில் துளைகளைப் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் கால்களுக்கு எந்தவொரு அசௌகரியத்தையும் வழங்காத வகையில் கட்டுமானத்தை அது பெற்றிருக்கின்றது. மேலும், இரவு நேரங்களில் பிரதிபலிக்கக்கூடிய ஸ்டிக்கர்கள் அதில் காணப்படுகின்றது.

டி-சர்ட், கையுறை, ஹெல்மட் விற்பனையில் களமிறங்கும் டிவிஎஸ்... விலை எவ்வளவு என்று தெரியுமா...?

டிவிஎஸ் மோட்டோ சோல்:

இந்த அனைத்து பாதுகாப்பு கவசங்களையும், நேற்று முன்தினம் (அக்டோபர் 18) கோவாவில் நடைபெற்ற மோட்டோசோல் (MotoSoul) நிகழ்வில் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.

தொடர்ச்சியாக 2 நாள் நடைபெற்ற இந்நிகழ்வில் பந்தய மற்றும் சாகச நடவடிக்கைகளில் ஈடுபடும், தேசிய மற்றும் சர்வதேச பந்தய வீரர்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Riding Gear & Causal Apparel Launched In India: We Have All The Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X