Just In
- 46 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவிற்கே பாடம் எடுத்த தமிழக அரசின் உத்தரவு இதுதான்... அமல்படுத்த போட்டி போடும் மற்ற மாநிலங்கள்
தமிழக அரசு பிறப்பித்த ஒரு அதிரடி உத்தரவை மற்ற மாநிலங்களும் அமல்படுத்த தொடங்கியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரை சாலை விபத்துக்களினால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். அவர்கள் இரு சக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் இயக்குவதே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஏனோ இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் அதனை கடைபிடிப்பதே இல்லை.

எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களை கட்டாயமாக ஹெல்மெட் அணிய வைக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதிய டூவீலர்களை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என டீலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடக காவல் துறையின் டிராபிக் மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர்தான் இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் இது தொடர்பாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய டூவீலர்களை விற்பனை செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் வழங்குமாறு, தங்கள் அதிகார வரம்பில் செயல்படும் இரு சக்கர வாகன டீலர்களிடம் வலியுறுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து டீலர்களும், புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கவுள்ள வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஹெல்மெட்களை வழங்கவுள்ளனர். இந்த உத்தரவு விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததன் காரணமாக நிகழும் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதை பற்றி சிறிய வீடியோ ஒன்றையும், கர்நாடக மாநிலத்தில் உள்ள இரு சக்கர வாகன டீலர்கள் திரையிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிக்கள் உடனான கூட்டத்தின் போது இதுகுறித்து பேசிய ஏடிஜிபி, டிராபிக் மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் பி எஸ் சாந்து, ''ஹெல்மெட் அணியாததன் காரணமாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஏராளமான இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்துக்களில் தலையில் ஏற்படும் காயம் காரணமாக நிகழும் உயிரிழப்புகளை குறைப்பதற்கான எங்களின் பல்வேறு முயற்சிகளின் ஒரு பகுதிதான் இது. இந்த உத்தரவை டீலர்கள் கட்டாயமாக்கினால், அது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை ஊக்குவிப்பதாக இருக்கும்.

அனைத்து மாவட்டங்களிலும், இரு சக்கர வாகன டீலர்கள் உடனான கூட்டத்தை நடத்த வேண்டும் என எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அப்போது இந்த உத்தரவை டீலர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென தெரிவிக்குமாறும் கூறியுள்ளேன்.

இதுதவிர ஷோரூம் அளவில் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் டீலர்கள் மேற்கொள்ளவுள்ளனர். இதன் காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதுடன், சாலை விபத்துக்களினால் ஏற்படும் எண்ணிக்கை குறையும்'' என்றார்.

கர்நாடக போலீசாரின் இந்த முயற்சி கட்டாயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். முன்னதாக மத்திய மோட்டார் வாகன சட்ட விதி 138 (4) (f) 1989ன் படி, புதிய டூவீலர்களை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

இந்த உத்தரவை தமிழக அரசு சமீபத்தில் மிக கடுமையாக அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக போக்குவரத்து துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறப்பித்தது.

இதனை அந்தந்த பகுதி ஆர்டிஓக்கள் கண்காணிக்க வேண்டும் எனவும், இது தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை கமிஷனரின் அலுவலகத்தில் மாதந்தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழகத்தை பின்பற்றி கர்நாடக மாநிலமும் இத்தகையை நடவடிக்கையை எடுத்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மூலமாக சாலை விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் நன்றாக இருக்கும்.
Source: ET Auto