நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

பார்ப்பதற்கே பிரம்மிப்பை ஏற்படுத்தும் அதிசய சம்பவம் ஒன்று சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளது. அது என்னனு தெரிஞ்சா நீங்க கண்டிப்பா அசந்து போய்ருவீங்க.

நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

மலை தொடர்களில் நிலச்சரிவு ஏற்படுவது என்பது வாடிக்கையான விஷயம்தான். கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை சாலைகளில் நிலச்சரிவு போன்ற செய்திகளை நாம் அடிக்கடி கேள்விபட்டிருப்போம். குறிப்பாக மலை காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். எதிர்பாராமல் நிகழும் நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

நிலச்சரிவு ஏற்படுவதற்கு மனித செயல்பாடுகள் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன. தற்போது மலை பகுதிகளில் அதிகளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக மரங்கள் வெட்டி வீசப்படுகின்றன. மரங்களை கணக்கு வழக்கில்லாமல் வெட்டி வீசுவதால், நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து விடுகிறது.

MOST READ: இல்லாட்டி கதை கந்தல்தான்... பருவ மழை காலத்தில் வண்டிக்கு தனி கவனிப்பு அவசியம்... என்னனு தெரியுமா?

நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

இதன் காரணமாகதான் மலை தொடர்களில் கட்டிடங்களை கட்டுவதற்கு என ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலும் யாரும் அதனை சட்டை செய்வதில்லை. ஆனால் மனித செயல்பாடுகள் மட்டுமின்றி இயற்கையும் கூட, நிலச்சரிவுகளுக்கு ஒரு முக்கிய காரணம்தான். கன மழையின்போதும், நில நடுக்கத்தின்போதும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

இப்படிப்பட்ட சூழலில், மலை சாலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து ஸ்கூட்டர் ரைடர் ஒருவர் நூலிழையில் தப்பித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஒரு நொடி தாமதித்திருந்தால், அவர் நிலச்சரிவில் சிக்கி புதையுண்டிருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தபோதும் அவரது ஸ்கூட்டர் நிலச்சரிவில் புதையுண்டு விட்டது.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

இந்த வீடியோவில் நடுத்தர வயதுடைய ஒரு நபர் ஸ்கூட்டரில் வருவதை நம்மால் காண முடிகிறது. சாலையை நோக்கி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த நபர் ஃப்ரேமிற்குள் வருவதற்கு முன்பாகவே, பாறைகள், கற்கள் மற்றும் மரங்கள் சரிந்து வருவதை நம்மால் வீடியோவில் காண முடிகிறது.

நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

அந்த சமயத்தில் ஸ்கூட்டர் ரைடர் வேகமாக வந்தார். அப்போது மண் சரிந்து முழுவதுமாக சாலைக்கு வந்து விட்டது. ஆனால் வேகமாக வந்த காரணத்தால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரால் ஸ்கூட்டரை நிறுத்த முடியவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த நபரும் நிலச்சரிவில் சிக்கி விடுவார் என்றுதான் நினைத்திருப்பார்கள்.

MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் ஸ்கூட்டரை கீழே போட்டு விட்டு, எழுந்து ஓடி வந்து விட்டார். சற்று தாமதம் செய்திருந்தாலும் கூட, அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். ஆனால் நிலச்சரிவுகள் எவ்வளவு வேகமாக நடக்கும் என்பதை இந்த வீடியோவின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இத்தனைக்கும் இது மிகச்சிறிய நிலச்சரிவுதான்.

நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

ஆனால் இதற்கே அந்த சாலையில் போக்குவரத்து தடைபடும் அளவிற்கான சூழல் ஏற்பட்டு விட்டது. அங்கு இருந்த சிறு மரங்கள் மற்றும் தாவரங்கள் வேரோடு பிடுங்கி கொண்டு வந்து விட்டன. எனவே மலை சாலைகளில் பயணம் செய்யும்போது வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. சற்று எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமாக நிலச்சரிவுகளில் சிக்கும் அபாயத்தை தவிர்க்கலாம்.

MOST READ: இவரை போன்ற தொழிலதிபர் இருப்பது இந்தியாவிற்கே பெருமை... பிரம்மிக்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா

நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் இருந்தால், சில அறிகுறிகளை வைத்து, நிலச்சரிவு ஏற்படவுள்ளதை முன்கூட்டியே கணிக்க முடியும். சுற்றுப்புறத்தை நீங்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டு வாகனங்களை ஓட்டினால், உங்களால் நிலச்சரிவு ஏற்படவிருப்பதை நிச்சயமாக கணிக்க முடியும். பொதுவாக பாறைகள் மற்றும் சிறிய கற்கள் கீழே விழுவதன் மூலமாகதான் நிலச்சரிவு தொடங்கும்.

நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

இதனால் மழை பெய்து கொண்டிருக்கும் சமயத்தில், பாறைகள் மற்றும் சிறிய கற்கள் சாலையில் விழுந்து கிடப்பதை நீங்கள் கண்டால், எச்சரிக்கையுடன் வாகனத்தை முன்னோக்கி செலுத்துங்கள். அதை விட வாகனத்தை நிறுத்தி விட்டு, சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது? என்பதை பார்ப்பது இன்னும் நல்லது. ஸ்கூட்டர் ரைடர் அதிர்ஷ்டவசமாக தப்பித்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

நிலச்சரிவிற்கு நாம் மேலே கூறியுள்ள அறிகுறிகளை இந்த வீடியோவிலும் நம்மால் காண முடிகிறது. எனவே மலை சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக மழை காலங்களில் பயணிக்கும்போது கண்டிப்பாக கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். ஏனெனில் மழை காலங்களில் நிலச்சரிவுடன், சாலை வழுக்கும் சூழலும் ஏற்படும் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Two Wheeler Rider Narrowly Escapes From Landslide - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X