இந்தியாவில் பாஸ்போர்ட்கள் ஏன் வெவ்வேறு கலர்களில் உள்ளன தெரியுமா? வெள்ளை, மெரூனுக்குதான் பவர் அதிகம்!

இந்தியாவில் என்னென்ன வகையான பாஸ்போர்ட்கள் உள்ளன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பாஸ்போர்ட்கள் ஏன் வெவ்வேறு கலர்களில் உள்ளன தெரியுமா? வெள்ளை, மெரூனுக்குதான் பவர் அதிகம்!

இந்திய அரசு தன்னுடைய குடிமக்களுக்கு வழங்கும் மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று பாஸ்போர்ட் (Passport). சர்வதேச பயணங்களை மேற்கொள்வதற்கு மட்டும் என்று பாஸ்போர்ட்டின் பயன்பாட்டை சுருக்கி விட முடியாது. இதுதவிர இன்னும் பல்வேறு விஷயங்களுக்கும் பாஸ்போர்ட் பயன்பட்டு வருகிறது. உங்கள் குடியுரிமையை சரிபார்க்க உதவுவது பாஸ்போர்ட்டின் முக்கியமான பயன்களில் ஒன்றாகும்.

இந்தியாவில் பாஸ்போர்ட்கள் ஏன் வெவ்வேறு கலர்களில் உள்ளன தெரியுமா? வெள்ளை, மெரூனுக்குதான் பவர் அதிகம்!

அத்துடன் பாஸ்போர்ட்டை வைத்து, இந்தியாவில் ஓட்டுனர் உரிமமும் (Driving Licence) பெற முடியும். இப்படி பாஸ்போர்ட் என்ற மிக முக்கியமான ஆவணத்தின் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம். பாஸ்போர்ட் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது நீல நிறம்தான். ஏனெனில் ப்ளூ கலர் பாஸ்போர்ட்களைதான் நாம் மிகவும் அதிகமாக பார்த்திருப்போம்.

இந்தியாவில் பாஸ்போர்ட்கள் ஏன் வெவ்வேறு கலர்களில் உள்ளன தெரியுமா? வெள்ளை, மெரூனுக்குதான் பவர் அதிகம்!

இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் ப்ளூ கலர் பாஸ்போர்ட் மட்டுமே இருக்கிறது என பலரும் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையல்ல. ஏனெனில் இந்தியாவில் இன்னும் பல்வேறு வண்ணங்களில் பாஸ்போர்ட்கள் இருக்கின்றன. இந்தியாவில் என்னென்ன வகையான பாஸ்போர்ட்கள் உள்ளன? அவை ஒவ்வொன்றின் சிறப்பம்சங்கள் என்ன? என்பதையெல்லாம் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பாஸ்போர்ட்கள் ஏன் வெவ்வேறு கலர்களில் உள்ளன தெரியுமா? வெள்ளை, மெரூனுக்குதான் பவர் அதிகம்!

வெள்ளை பாஸ்போர்ட் (White Passport)

வெள்ளை பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களில் ஒன்று. அரசு அதிகாரிகள்தான், வெள்ளை பாஸ்போர்ட்டை பெறுவதற்கு தகுதியானவர்கள். அலுவல்பூர்வமான வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. பொதுவாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயர் அதிகாரிகளுக்கு வெள்ளை பாஸ்போர்ட் வழங்கப்படும்.

இந்தியாவில் பாஸ்போர்ட்கள் ஏன் வெவ்வேறு கலர்களில் உள்ளன தெரியுமா? வெள்ளை, மெரூனுக்குதான் பவர் அதிகம்!

வெள்ளை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.வந்திருப்பது அரசு அதிகாரிகள் என்பதை, கஸ்டம்ஸ் (Customs) மற்றும் இமிகிரேஷன் (Immigration) அதிகாரிகள் எளிதாக தெரிந்து கொள்ள வெள்ளை பாஸ்போர்ட் உதவி செய்கிறது. இதன்பின் அரசு அதிகாரிகளை எப்படி நடத்த வேண்டுமோ, அந்த வழிமுறைகளை அவர்கள் பின்பற்றுவார்கள்.

இந்தியாவில் பாஸ்போர்ட்கள் ஏன் வெவ்வேறு கலர்களில் உள்ளன தெரியுமா? வெள்ளை, மெரூனுக்குதான் பவர் அதிகம்!

ப்ளூ பாஸ்போர்ட் (Blue Passport)

இந்தியாவின் சாமானிய மனிதர்களுக்கு நீல நிற பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்தியாவின் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சாமானிய மக்கள் ஆகிய இரு தரப்பினரையும் வேறுபடுத்தி அறிவதற்கு, கஸ்டம்ஸ், இமிகிரேஷன் மற்றும் இதர அதிகாரிகளுக்கு ப்ளூ கலர் பாஸ்போர்ட் உதவி செய்கிறது. பொழுதுபோக்கு அல்லது தொழில் ரீதியிலான வெளிநாட்டு பயணங்களுக்கு, பொதுமக்கள் நீல நிற பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்தியாவில் பாஸ்போர்ட்கள் ஏன் வெவ்வேறு கலர்களில் உள்ளன தெரியுமா? வெள்ளை, மெரூனுக்குதான் பவர் அதிகம்!

மெரூன் பாஸ்போர்ட் (Maroon Passport)

வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இந்தியாவின் தூதர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கு மெரூன் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இது அதிக மதிப்புமிக்க பாஸ்போர்ட் என்பதால், தனியாக விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த மெரூன் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்களுக்கு, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

இந்தியாவில் பாஸ்போர்ட்கள் ஏன் வெவ்வேறு கலர்களில் உள்ளன தெரியுமா? வெள்ளை, மெரூனுக்குதான் பவர் அதிகம்!

முதலில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு விசாவே தேவையில்லை. மேலும் மெரூன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், மற்ற சாதாரண நபர்களுடன் ஒப்பிடும்போது, இமிகிரேஷன் நடைமுறைகளை, மிகவும் வேகமாக 'க்ளியர்' செய்து விட முடியும். இப்படி மெரூன் கலர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு கிடைக்க கூடிய நன்மைகளை இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Types of passports in india white blue maroon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X