வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இனிமேல் குறைவான எரிபொருளுடன் கார் ஓட்டினால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

நம்மில் பலருக்கும் குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டும் பழக்கம் இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பது முதலாவது காரணம். விலை மிகவும் அதிகம் என்பதால், நம்மிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்ப, ஓரளவிற்கு பெட்ரோல், டீசல் நிரப்பி கொள்கிறோம்.

வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

சில சமயங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப மறந்து விடுகிறோம். அல்லது நேரமின்மை காரணமாக இருக்கும் எரிபொருளை வைத்து கொண்டு தொடர்ந்து பயணம் செய்கிறோம். ஆனால் குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது என்பதுதான் உண்மை. தொடர்ந்து குறைவான எரிபொருளுடனே காரை ஓட்டி கொண்டிருந்தால், பல்வேறு பாகங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இது உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தி விடும். இந்த சூழலில், குறைவான எரிபொருளுடன் காரை ஓட்ட கூடாது என அரசாங்கமே உத்தரவிட போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து புதிய சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட இருப்பதாகவும், இந்த உத்தரவை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

மிகவும் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டிருக்கும்போது இதை எப்படி சமாளிக்க போகிறோம்? என்ற அச்சம் உங்களுக்கு வேண்டாம். ஏனெனில் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட இருப்பது இந்தியாவில் அல்ல. இங்கிலாந்தில். அந்த நாட்டின் அரசாங்கம்தான் தற்போது இது தொடர்பாக பரிசீலனை செய்து கொண்டுள்ளது.

வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

கார்களை பொறுத்தவரை, எரிபொருள் குறைவாக இருந்தால் டேஷ்போர்டில் எச்சரிக்கை விளக்கு ஒளிரும். பெரும்பாலான கார்களில் இந்த வசதி உள்ளது. இன்னும் சுமார் 30 கிலோ மீட்டர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்ற சமயத்தில், இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிரும். ஆனால் கார்களை பொறுத்து, இந்த எண்ணிக்கை மாறுபடும்.

வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிர்ந்தாலும் கூட, அதனை பொருட்படுத்தாமல் ஒரு சிலர் தொடர்ந்து பயணம் செய்கின்றனர். எனவே சில சமயங்களில் கார் நடுவழியில் நின்று விடுகிறது. இதன் காரணமாக காரில் பயணம் செய்பவர்களுக்கு நேர விரயமும், தேவையற்ற மன உளைச்சலும் ஏற்படுகிறது. ஆனால் இங்கிலாந்து அரசு இந்த காரணத்திற்காக புதிய சட்டம் குறித்து பரிசீலிக்கவில்லை.

வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

அதற்கு வேறொரு முக்கியமான காரணம் உள்ளது. டிரைவர்கள் சிலர் குறைவான எரிபொருளுடன் பயணம் செய்வதால், சில சமயங்களில் கார் நடுரோட்டில் நின்று விடுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் தேவையில்லாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் நேர விரயம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

அத்துடன் எரிபொருள் தீர்ந்து நிற்கும் கார் மீது, மற்ற வாகனங்கள் மோதி விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இதன் காரணமாக யாருக்காவது படுகாயங்கள் ஏற்படலாம். உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனை மனதில் கொண்டுதான், புதிய சட்டம் குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.

வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இந்த புதிய சட்டம் கூடிய விரைவில் பிறப்பிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், கடும் அபராதங்களும் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் பார்த்தால் சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

அத்துடன் சம்பந்தப்பட்ட நபரின் ஓட்டுனர் உரிமத்தில் தகுதியிழப்பு புள்ளிகளும் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் எரிபொருள் தீர்ந்து நிற்கும் கார் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டால், அபராத தொகையும், தண்டனையும் இன்னும் கடுமையாக உயரும் எனவும் கூறப்படுகிறது. எனவே வரும் காலங்களில் எரிபொருள் தீர்ந்து கார் நடுரோட்டில் நிற்கும் சூழல் ஏற்படாது என நம்பப்படுகிறது.

வருகிறது புதிய சட்டம்... இனி குறைவான எரிபொருளுடன் வண்டி ஓட்ட கூடாது! எவ்ளோ அபராதம்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வரும் இந்த புதிய சட்டம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சட்டம் அமலுக்கு வந்த பின்னர்தான், அதன் நடைமுறைகள் குறித்த விபரங்கள் நமக்கு தெரியவரும். சாலை விபத்துக்களும், போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்படும் என்பதால், இந்த சட்டத்தை கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Uk may have law against driving on low fuel here are all the details
Story first published: Monday, September 27, 2021, 15:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X