ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் செல்லும் அதிவேக ரயில் திட்டம்!

ஐக்கிய அரபு நாடுகளுடன் மும்பையை எளிதாக இணைப்பதற்கான கடலுக்கு அடியில் அதிவேக ரயில் போக்குவரத்தை செயல்படுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அசத்தும் ஐக்கிய அமீரகம்

அசத்தும் ஐக்கிய அமீரகம்

Picture credit: lilfrizyஅதிவேக ஹைப்பர்லூர் போக்குவரத்து மற்றும் பறக்கும் டாக்சி என அடுத்த நூற்றாண்டுக்கான போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துவதில் ஐக்கிய அமீரகத்திலுள்ள துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்கள் உலகிற்கே முன்னோடியாக விளங்குகின்றன.

Picture credit: lilfrizy

ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் புல்லட் ரயில்!

இந்த சூழலில், ஐக்கிய அமீரகத்தையும், மும்பை மாநகரையும் சிறப்பான போக்குவரத்து திட்டத்துடன் இணைக்கும் விதத்தில், கடலுக்கு அடியில் புல்லட் ரயில் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்தும் யோசனையை மஸ்தாரிலிருந்து செயல்படும் நேஷனல் அட்வைசரி பீரோ என்ற ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரி அல்சேஷி முன்வைத்துள்ளார்.

Picture credit: lilfrizy

ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் புல்லட் ரயில்!

ஐக்கிய அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்றான அல் புஜைரா நகரிலிருந்து மும்பைக்கு இந்த கடலடி அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டத்தையும் கூறி இருக்கிறார்.

Picture credit: lilfrizy

ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் புல்லட் ரயில்!

இந்த ரயில் பாதையானது மிதவை சுரங்க அமைப்புடன் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. அதன் ஊடாக அதிவேக ரயில்கள் இயக்கப்படும். இந்த கடலுக்கடியிலான திட்டம் குறித்து பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Picture credit: Toprak ERDEM/YouTube

ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் புல்லட் ரயில்!

இந்த திட்டத்தின்படி, அல் புஜைராவிலிருந்து மும்பைக்கு 2,000 கிமீ தூரத்திற்கான அதிவேக ரயில் பாதை அமைக்க வேண்டி இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். எனினும், பயண நேரம் என்பது மிக 7 முதல் 8 மணிநேரத்திற்குள் இருக்கும் என்று தெரிகிறது.

ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் புல்லட் ரயில்!

இந்த புதிய ரயில் திட்டத்தின்படி, பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சரக்கு ரயில் போக்குவரத்தையும் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, மும்பையிலிருந்து குடிநீரை பெறுவதற்கும், அதேபோன்று வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு அனுப்புவதற்கும் ஏதுவாக இருக்கும் என்று அவர் கூறி இருக்கிறார்.

Picture credit: Toprak ERDEM/YouTube

ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் புல்லட் ரயில்!

கடலுக்கடியில் ரயில் பாதை அமைப்பது என்பது புதிதான திட்டமா என்றால் இல்லை. பல திட்டங்கள் செயல்பாட்டிில் உள்ளன. அண்மையில் கடலுக்கடியில் புல்லட் ரயில் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தை சீனா துவங்கி இருக்கிறது. ஆனால், அனைத்தும் நிலப்பரப்பை ஒட்டிய கடல் பகுதியில் அமைகிறது. ஆனால், இந்த புதிய திட்டம் இதிலிருந்து முற்றிலும் வேறுபடும் என்று தெரிகிறது.

Picture credit: Toprak ERDEM/YouTube

ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் புல்லட் ரயில்!

அதேபோன்று, கடலுக்கடியில் பல்வேறு நாடுகளில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து நடக்கிறது. எனினும், இது உலகின் மிக நீளமான கடலுக்கு அடியிலான ரயில் போக்குவரத்து திட்டமாக அமையலாம்.

ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் புல்லட் ரயில்!

நார்வே நாட்டில் கடலுக்கடியில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அது வாகனப் போக்குவரத்துக்கான வசதியை பெற இருக்கிறது. ஆனால், இந்த பாலம் ரயில் போக்குவரத்துக்கான பாலமாக இருக்கும்.

Picture credit: Ingolfson/Wiki Commons

ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் புல்லட் ரயில்!

சீனாவின் தெற்கில் உள்ள ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள நிக்போ முதல் சவ்ஷான் வரையிலான 70 கிமீ தூரத்திற்கான புல்லட் ரயில் பாதையில் 16. 2 கிமீ தூரம் கடலுக்கடியில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு செல்ல இருக்கிறது. இந்த தடத்தில் மணிக்கு 250 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்படும்.

Picture credit: Luca Florio/Wiki Commons

ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் புல்லட் ரயில்!

அதேபோன்று, நம் நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்திலும் 27 கிமீ தூரத்திற்கு கடலுக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், நில கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக, நம் நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டப் பணிகளில் தொய்வு காணப்படுகிறது.

ஐக்கிய அமீரகத்திலிருந்து மும்பை நகரை இணைக்க கடலுக்கடியில் புல்லட் ரயில்!

அல் புஜைரா - மும்பை இடையிலான கடலுக்கடியிலான அதிவேக ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், இரு நாடுகளும், நகரங்களுக்கும் பொருளாதார அளவில் பெரும் பயன்களை பெறும் என்று நம்பலாம்.

Via- Khaleej Times

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
Underwater Bullet Train between UAE and Mumbai?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X