வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையவே கிடையாது... போலீஸ் புதிய அதிரடி... இது வித்தியாசமா இருக்கே...

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக போலீசார் புதிய நடைமுறை ஒன்றை செயல்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையவே கிடையாது... போலீஸ் புதிய அதிரடி... இது வித்தியாசமா இருக்கே...

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் முன்பு இருந்ததை காட்டிலும் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையவே கிடையாது... போலீஸ் புதிய அதிரடி... இது வித்தியாசமா இருக்கே...

இதற்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும், மறுபக்கம் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. எனவே ஒரு சில மாநில அரசுகள் தாங்களாக முன்வந்து அபராத தொகைகளை ஓரளவிற்கு குறைத்துள்ளன. இருந்தபோதும் இந்தியாவின் எஞ்சிய மாநிலங்களை சேர்ந்த போலீசார், புதிய அபராத தொகைகளை வாகன ஓட்டிகள் மீது திணித்து வருகின்றனர்.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையவே கிடையாது... போலீஸ் புதிய அதிரடி... இது வித்தியாசமா இருக்கே...

அபராதங்கள் மிக அதிகமாக உள்ளதால், சில சமயங்களில் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. அதே சமயம் சில இடங்களில் வாகன ஓட்டிகளிடம் போலீசார் வித்தியாசமான அணுகுமுறையையும் கடைபிடித்து வருகின்றனர். இதற்கு குஜராத் மாநிலம் சூரத் நகர போலீசார் இதற்கு ஒரு உதாரணம்.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையவே கிடையாது... போலீஸ் புதிய அதிரடி... இது வித்தியாசமா இருக்கே...

சூரத் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் பெரும்பாலான வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் முன்பு 1,000 ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும். இந்த அபராத தொகை தற்போது 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் கூட ஒரு சிலர் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையவே கிடையாது... போலீஸ் புதிய அதிரடி... இது வித்தியாசமா இருக்கே...

எனினும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு சூரத் போலீசார் அபராதம் விதிப்பது கிடையாது. அதற்கு பதிலாக ஸ்பாட்டிலேயே அந்த வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் பெற உதவி செய்து வருகின்றனர். அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உதவியுடன் இதற்கான ஏற்பாடுகள் சூரத் நகர காவல் துறையால் செய்யப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையவே கிடையாது... போலீஸ் புதிய அதிரடி... இது வித்தியாசமா இருக்கே...

சூரத் நகரின் பல்வேறு இடங்களில், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் அணிகளை போலீசாருடன் பணியில் அமர்த்தியுள்ளன. இந்த அணிகள் நடைமுறைகளை முடித்த பிறகு, ஸ்பாட்டிலேயே வாகனங்களுக்கு இன்சூரன்ஸை வழங்கி வருகின்றன. சூரத் நகரில் இதற்கென பிரத்யேகமாக சிறப்பு ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையவே கிடையாது... போலீஸ் புதிய அதிரடி... இது வித்தியாசமா இருக்கே...

சூரத் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது பயனுள்ள நடவடிக்கை என்பது அவர்களின் கருத்து. இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் சுதிர் தேசாய் கூறுகையில், ''வாகன உரிமையாளர்களை தண்டிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் கிடையாது. ஆனால் அவர்கள் விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையவே கிடையாது... போலீஸ் புதிய அதிரடி... இது வித்தியாசமா இருக்கே...

எனவே வாகன உரிமையாளர்கள் ஸ்பாட்டிலேயே இன்சூரன்ஸ் பெற தேவையான உதவிகளை காவல் துறை செய்து வருகிறது'' என்றார். இதுபோன்ற பயனுள்ள நடவடிக்கைகளை மற்ற மாநில போலீசாரும் கூட கடைபிடிக்கலாம். இது தொடர்பான உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையவே கிடையாது... போலீஸ் புதிய அதிரடி... இது வித்தியாசமா இருக்கே...

முன்னதாக போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை ஒரு சில மாநில அரசுகள் குறைத்துள்ளன என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? இதில், குஜராத் மாநில அரசும் ஒன்று. இத்தனைக்கும் அங்கு பாஜக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை லட்சம் அபராதமா... அதிர்ச்சி!

போக்குவரத்து விதிமீறலுக்கான மாற்று ஏற்பாடுகளை சில மாநில போலீசார் செய்து வந்தாலும், சில இடங்களில் விதிக்கப்படும் அபராதத் தொகை அதிர்ச்சியை அளித்து வருகிறது. அதுபோன்று டிரக் டிரைவருக்கு போடப்பட்ட பல லட்சம் ரூபாய் அபாரதத் தொகை குறித்த அதிர்ச்சி சம்பவம் குறித்த தகவல்களை தொடார்ந்து பார்க்கலாம்.

இத்தனை லட்சம் அபராதமா... அதிர்ச்சி!

கடந்த வாரம் லாரி உரிமையாளர் ஒருவருக்கு விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி போலீஸார் அபராதத்திற்கான செல்லாணை வழங்கியிருந்தனர். அவருக்கு வழங்கப்பட்ட தொகையானது நாட்டிலேயே இதுவரை யாரும் பெறாத உச்சபட்ச தொகையாக கருதப்பட்டது. ஆகையால், அதிகபட்ச அபராதத்தைப் பெற்ற முதல் வாகன ஓட்டி என ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராம் கிஷான் பார்க்கப்பட்டார்.

இத்தனை லட்சம் அபராதமா... அதிர்ச்சி!

இதுபோன்று பார்ப்பதற்கு அவருக்கு எவ்வளவு தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது என்று தானே கேட்கிறீர்கள்... அவருக்கு அதுவரை எந்தவொரு வாகன ஓட்டிக்கும் வழங்கப்படாத அளவிலான, ரூ. 2 லட்சத்து 500-க்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டிருந்தது. ஆகையால், இவர் ஓவர் நைட்டில் ஒபாமாவைப் போன்று பிரபலமாகினார்.

இத்தனை லட்சம் அபராதமா... அதிர்ச்சி!

இந்த லாரி பல்வேறு விதிமுறைகளில் ஈடுபட்டதன் காரணத்தால் இவருக்கு இத்தகைய அபராதத் தொகையை வழங்கியதாக டெல்லி நகர போலீஸார் தெரிவித்திருந்தனர். அந்தவகையில், போலீஸார் ராம் கிஷான் ஈடுபட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை கீழே காணலாம்.

இத்தனை லட்சம் அபராதமா... அதிர்ச்சி!

அதிகபட்ச லோடை ஏற்றிவந்த குற்றத்திற்காக ரூ. 20 ஆயிரமும், அனுமதிக்கப்பட்டதை விட 18 டன் எடையுள்ள கூடுதல் பொருட்களை ஏற்றி வந்ததற்காக ரூ. 36 ஆயிரமும் அந்த லாரிக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு டன்னிற்கும் ரூ. 2 ஆயிரம் என்ற அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தனை லட்சம் அபராதமா... அதிர்ச்சி!

இத்துடன், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, பியூசி சான்று இல்லாதது, பெர்மிட் முறைகேடு, காப்பீடு இல்லாதது மற்றும் சீட் பெல்ட் அணியவில்லை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறி லாரியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு அபராத செல்லாண் வழங்கப்பட்டிருந்தது.

இத்தனை லட்சம் அபராதமா... அதிர்ச்சி!

இந்நிலையில், இந்த அதிகபட்ச அபராதத்தை தூக்கியெறியும் வகையில், தற்போது புதிய சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அந்தவகையில், நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த டிரக்கிற்கு ரூ. 6.53 லட்சத்திற்கான அபராதச் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

இத்தனை லட்சம் அபராதமா... அதிர்ச்சி!

இந்த அபராதமானது செப்டம்பர் 1ம் தேதிக்கு முன்னரே வழங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், புதிய மோட்டார் வாகன சட்டம் இதற்கு பின்னர்தான் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், ஆகஸ்ட் 10ம் தேதியே வழங்கப்பட்டுள்ள இந்த உச்சபட்ச அபராதம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Not Fine, But Surat Police Assist Uninsured Vehicle Owners To Get On-the-spot Insurance. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X