முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...

இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூர், அதேநேரம் போக்குவரத்து நெரிசலுக்கும் பெயர் பெற்றதாக விளங்குகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு நாளுக்கு நாள் பெங்களூரில் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, சந்தையில் புதியதாக அறிமுகமாகும் வாகனங்களையும் டெல்லிக்கு அடுத்தப்படியாக பெங்களூருவிலேயே அதிகப்படியாகவும், அறிமுகத்தில் இருந்து விரைவாகவும் காண முடிகிறது.

மேலும் இந்தியாவில் விற்பனையில் இல்லாத வெளிநாட்டு வாகனங்களையும் இந்த நகரத்தில் அவ்வப்போது பார்க்க முடியும். அவ்வாறுதான், சமீபத்தில் பெங்களூருவில் ஜே.பி நகர் சாலையில் வித்தியாசமான வாகனம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதாவது, உயரம் 1-இல் இருந்து 2 அடி மட்டுமே கொண்ட ஒரு வாகனம் சாலையை ஒட்டியப்படி குறிப்பிடத்தக்க வேகத்தில் வந்துள்ளது. சாலையில் இந்த வாகனத்தை கண்டவர்கள் ஏதோ விசித்திரமான வாகனம் போல் உள்ளது என படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!

குறிப்பாக, ரெவாந்த் டி18 என்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இதுகுறித்த வீடியோ உடன், "ஜேபி நகருக்கு அருகே இந்த மனிதனை சந்தியுங்கள். நெதர்லாந்தில் இருந்து மனிதரால்-இயங்கும் வாகனம்" என பதிவிடப்பட்டுள்ளது. இப்படியொரு வாகனத்தை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இத்தகைய வாகனங்கள் வெலோ மொபைல் (Velomobile) என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இது நெதர்லாந்து போன்ற மிகவும் சில வெளிநாடுகளில் மட்டுமே விற்பனையில் உள்ளது. இதன் செயல்பாடு ஆனது கிட்டத்தட்ட பை-சைக்கிள் போன்றதே.

அதாவது, இந்த வாகனத்திற்கு உள்ளேயும் மிதி பெடல்கள் உள்ளன. அவற்றை மிதிக்க மிதிக்க வாகனம் முன்னோக்கி செல்லும். பை-சைக்கிள்கள் எடை குறைவானவைகளாக பேனல்கள் அவ்வளவாக இல்லாதவைகளாக இருக்கின்றன. ஆனால் வெலோ மொபைல்கள் ஓட்டுனரை முழுவதுமாக கவர் செய்யும் வகையில் பேனல்களுடன் வடிவமைக்கப்படுகின்றன. இவ்வாறான வெலோ மொபைல்கள் தாழ்வானவைகளாக, கூர்மையான தோற்றத்தில் வடிவவமைக்கப்படுவதால் ஏரோ டைனாமிக்ஸ் பண்பு ஆனது சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!

ஆனால் அதேநேரம், பேனல்கள் அதிகமாக இருப்பதால், வாகனத்தின் எடை அதிகமாக இருக்கும். அதற்கும் ஏற்ப நீங்கள் தான் பெடலை மிதிக்க வேண்டியிருக்கும். வெலோ மொபைல் வாகன ஓட்டிகளுக்கு இடையே போட்டிகள் கூட வெளிநாடுகளில் நடத்தப்படுகின்றன. ஆனால் நம் இந்தியாவை பொறுத்தவரையில் இந்த வாகனம் தற்போதைக்கு சரிப்பட்டுவராது. ஏனெனில் நம் நாட்டில் முக்கியமான மாநகரங்களில் கூட சாலைகள் சில பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ளதை ஒத்து கொண்டுதான் ஆக வேண்டும்.

வெலோ மொபைல் வாகனங்களுக்கு நேர்த்தியான, தரமான சாலைகள் அவசியமாகும். ஏனெனில் இத்தகைய வாகனத்தில் இருந்து சாலையை காண்பது என்பது சற்று சிரமமானது. பள்ளம்/ மேட்டை கவனிக்காமல் சென்றால் இந்த வாகனத்தில் பலத்த காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால்தான் தற்போது பெங்களூருவில் அடையாளம் காணப்பட்டிருக்கும் இந்த நபர் கூட பாதுகாப்பிற்கு ஹெல்மெட் அணிந்துள்ளார். ஆனால் உண்மையில், ஹெல்மெட் அணிந்திருந்தாலும் உடலின் மற்ற பாகங்களில் ஏற்படும் காயங்களை தவிர்க்க இயலாது.

முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!

அதுமட்டுமின்றி, செயல்பாடுகள் பை-சைக்கிள் போன்றது என்றாலும், வெலோ மொபைல் வாகனம் சைக்கிளை போன்று எளிமையான ஹேண்ட்லிங்கை வழங்காது என்பது அதனை பார்க்கும்போது தெரிகிறது. உள்ளே நன்கு கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு பயணிக்கலாம் என்றாலும், உள்ளே நுழைவதும், வெளியேறுவதும் சற்று சிரமமாக இருக்கும் என்று நினைக்கிறோம். இதனால் ஏதேனும் விபத்து ஏற்படுவதுபோல் தெரிந்தால் வாகனத்தில் இருந்து உடனே வெளியேறி தப்பித்து செல்வது சற்று நேரமெடுக்கும்.

இதனால்தான் டுவிட்டரில், இத்தகைய வாகனம் நமது இந்தியாவிற்கு சரிப்பட்டு வராது என அனைவரும் பொங்கியுள்ளனர். பெங்களூருவில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட வெலோ மொபைல் ஆனது 4ஜே ஆல்பா 7 ஆகும். ஐரோப்பிய நாடான ரோமானியாவில் தயாரிக்கப்படும் இதன் விலை அங்கு 11,500 யூரோக்களாக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.10.19 லட்சமாகும். சைக்கிள் போன்று இயங்கும் ஒரு வாகனத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் விலை என்பது கொஞ்சம் டூ மச் என மனதிற்குள் நீங்கள் குமுறுவது புரிகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Unusual human powered vehicle in busy bangalore road shocks internet
Story first published: Friday, January 27, 2023, 20:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X