விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

நாம் அறிந்திராத சில வித்தியாசமான போக்குவரத்து விதிமீறல்களும், அதற்காக வசூலிக்கப்படும் அபராதத் தொகைப் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதனை கடைபிடிப்பதே இல்லை. இதன் விளைவாக போலீஸாரிடம் சிக்கி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அத்தோடு நில்லாமல், அதிகபட்ச அபராதத்தையும் பெறுகின்றனர்.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

குறிப்பாக, வாகன ஓட்டிகள் அதிகமாக ஹெல்மெட் இல்லாமல் பயணித்தல், சிக்னலை மீறுதல், தவறான பாதையில் பயணித்தல், அதிக வேகத்தில் பயணித்தல், லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்குதல், மது அருந்துவிட்டு வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவே தண்டனையைப் பெற்று வருகின்றனர்.

நாட்டில் அரங்கேறும் அதிகபட்ச போக்குவரத்து விதமீறல்களில் இவையே முதன்மை இடத்தில் இருக்கின்றன.

MOST READ: கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

ஆனால், இதேபோன்று பல்வேறு விதிகள் இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது. அந்தவகையிலான ஒரு சில போக்குவரத்து விதகள் நமக்கு மிகவும் புதியதாகக் காட்சியளிக்கும். அந்த விதியை மீறி முதல் முறையாக போலீஸிடம் சிக்கும்போதே, இப்படியொரு விதிமீறலில் பயன்பாட்டில் இருக்கின்றதா..? என நமக்குக் கேட்க தோன்றும்.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

அந்தவகையிலான, நாம் இதற்கு முன்பு கண்டிராத போக்குவரத்து விதிமீறல்களின் பட்டியலைதான் இந்த பதிவில் காணவிருக்கின்றோம். இதனை பலர் அறிந்திருக்கலாம். ஆனால், பெரும்பாலானோருக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லையென்றே கூறப்படுகின்றது.

அவர்களுக்கு விளக்கும் வகையில் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் இந்த பதிவை வெளியிடுகின்றது.

MOST READ: இதுவரை யாருமே கையில் எடுக்காத புதிய அஸ்திரம்... கொரோனாவிற்கு ஸ்கெட்ச் போட்ட கேரளா... வேற லெவல் சார்...

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

கார்களின் ஜன்னல்களுக்கு கருப்பு நிற கண்ணாடி பயன்படுத்துவது

இது புதுசால்ல இருக்கு... ஆனால், ரொம்ப பழைய விதிங்க இது... வாகனங்களின் ஜன்னல்களில் கருப்பு நிற கண்ணாடிகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற திருத்தம் மோட்டார் வாகன சட்டத்தில் பல வருடங்களாக இருந்து வருகின்றன. ஆனால், ஒரு வாகன ஓட்டிகள் சூரிய ஒளி காரணத்தைக் காட்டி உட்புறத்தை பார்க்க முடியாத வகையிலான கண்ணாடிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

இதுபோன்ற பயன்படுத்தும் கார்களின் மூலமே அதிகளவு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறுவதாக கூறப்பட்டது. அதனை உறுதிச் செய்கின்ற பல கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்கள் நாட்டில் முன்னதாக அரங்கேறி வந்தன.

இதனைக் கருத்தில் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் இதுபோன்ற மறைக்கும் வகையிலான கண்ணாடிகளை காரின் ஜன்னல்களில் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

MOST READ: முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்...

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

தொடர்ந்து, இதுபோன்ற கண்ணாடிகளைப் பயன்படுத்தும் கார்களின் உரிமையாளர்களை அதனை உடனடியாக நீக்கவும் கூறியது. இந்த விதியை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ. 500 முதல் ரூ. 1,500 வரை அபராசம் வசூலிக்கவும் வழி வகைச் செய்யப்பட்டுள்ளது.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

இதைதான் நாடு முழுவதும் போலீஸார் தற்போது கையாண்டு வருகின்றனர். மேலும், அந்தந்த மாநிலத்தின் சில விதிகளின் அபராதத்தை குறைத்தோ அல்லது உயர்த்தியோ வசூலித்து வருகின்றனர்.

MOST READ: ஜேசிபி இயந்திரம் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதான்! இவ்ளோ நாளா இந்த விஷயம் தெரியாம போச்சே

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

பிரஷ்ஷர் ஹாரன்

பிரஷ்ஷர் ஹாரன்களைப் பயன்படுத்துவதால் என்ன மாதிரியான பின் விளைவுகள் அரங்கேறும் என்பதுகுறித்த பல்வேறு தகவல்களை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தொகுத்து வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, இந்த வகையிலான அதிக ஒலியை ஹாரன்களைப் பயன்படுத்துவதால், சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். இது சில நேரங்களில் பேராபத்து அரங்கேற தூண்டு கோளாக இருக்கின்றது.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

அதுமட்டுமின்றி, ஒலி மாசு ஏற்படுவதில் இதுபோன்ற ஹாரன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வகையிலான ஹாரன்களைப் பயன்படுத்துவற்காக போலீஸார் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை அபராதமாக வசூலித்து வருகின்றனர்.

குறிப்பாக, இதுபோன்ற காதை கிழிக்கின்ற வகையிலான பிரஷ்ஷர் ஹாரன்களைச் சாலையில் பயன்படுத்து முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

உயர் வெளிச்சமுடைய மின் விளக்கு (ஹை பீம் மின் விளக்கு)

அதிக வெளிச்சமுடைய மின் விளக்குகளைப் பயன்படுத்தவதனால், எதிரில் வரும் வாகன ஓட்டிக்கு தெளிவான பார்வை கிடைப்பதில் தடை ஏற்படுகின்றது. இது விபத்து போன்ற பேராபத்தை விளைவிப்பதில் முக்கிய பங்களிக்கின்றது. முக்கியமாக, சாலையோர மின் விளக்கு இல்லாத பகுதிகளில் வாகன ஓட்டிகள் ஹை பீம் மின் விளக்கைப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும்போது எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தற்காலிக குருட்டு தனம் ஏற்படுகின்றது.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

இதனாலேயே சாதாரண நேரங்களில் ஹை பீமைப் பயன்படுத்த போக்குவரத்து விதி அனுமதிப்பதில்லை. சூழல் இவ்வாறு இருக்க, சில வாகன ஓட்டிகளோ ஆஃப்டர் மார்க்கெட்டில் விற்கும் அங்கீகரிக்கப்படாத அதிக வெளிச்சத்தை வழங்கும் மின் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

அவ்வாறு, பயன்படுத்தப்படும் மின் விளக்குகள் சில நேரங்களில் மனிதர்களின் கண்களை நேரடியாக தொடர்பு கொள்ளும்போது பார்வையையே பறிக்க நேரிடும்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே உயர் வெளிச்சமுடைய மின் விளக்குகளைப் பயன்படுத்து போக்குவரத்து விதிமீறல்களாக கருதப்படுகின்றது.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

அதேசமயம், இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாமல் வாகனத்தை இயக்குவது மிகப்பெரிய குற்றமாகும். குறிப்பாக, இருட்டான சாலையில் மின் விளக்கு இல்லாமல் வருவது விபத்திற்கு வழி வகுக்கும். ஆகையால், இது போன்ற குற்றங்களுக்கும் போலீஸார் ரூ. 500 வரை அபராதங்கள் வசூலித்து வருகின்றனர்.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

மாசு கட்டுப்பாடு சான்று

ஒரு வேலை நீங்கள் பயணிக்கும்போது போக்குவரத்துத்துறையினர் உங்கள் வாகனத்திற்கான மாசுக் கட்டுப்பாட்டு சான்றை கேட்க நேரிடலாம். அப்படி அவர்கள் கேட்கும்போது உங்களால் அதனை காண்பிக்க முடியவில்லை என்றால், அதற்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படுகின்றது. இந்த அபராதம் அதிக மாசை வெளிப்படுத்தும் வாகனங்களுக்கு மட்டும்தான்.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

அதேசமயம், உங்கள் வாகனம் போக்குவரத்து விதி அனுமதிக்கும் அளவுக்குள்ளாகவே மாசை வெளிப்படுத்துமானால், அதற்கு ரூ. 500 மட்டுமே அபராதம். இந்த அபராதம் உங்களிடம் மாசு சான்று இல்லையென்றால் மட்டுமே விதிக்கப்படும்.

காற்று மாசுறுதலுக்கு மிக முக்கிய காரணியாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை இருக்கின்றது. இது, சற்று பழைய வாகனங்களில் அதிகமாகவே வெளியேறுகின்றது.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

மேலும், பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை அதிக நச்சுத்தன்மைக் கொண்டதாக இருக்கின்றது. இதனாலயே அனைத்து வாகனங்களுக்கும் மாசுகட்டுப்பாட்டு சான்று பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

சைலென்சர் இல்லாமல்/சந்தைக்கு பிறகான சைலென்சர் பயன்படுத்துவது

வாகனத்தில் சைலென்சர் இல்லாமல் பயன்படுத்தும்போது அதிக சத்தம் உருவாகின்றது. இது, ஒலி மாசினை அதிக ஏற்படுத்தும். இதேபோன்று, ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களைப் பயன்படுத்துவதனாலும் அதிக சப்தம் வெளியேறுகின்றது. இது சக வாகன ஓட்டிகளுக்கு மிகப் பெரிய இடையூறாக அமைகின்றது. ஆகையால், சைலென்சர் இல்லாமல் அல்லது சந்தைக்கு பிறகான சைலென்சர்களைப் பயன்படுத்துவது போக்குவரத்து விதிமீறல்களின்படி குற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

புகைப்பிடித்தல்

வாகனத்தில் வைத்து புகைப்பிடிப்பதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். இது என்னங்க வம்பா போச்சு என்று உங்களுக்குத் தோன்றலாம். நீங்கள் வாகனத்தில் அமர்ந்தவாறு புகைப்பது உங்களுக்கு மட்டுமின்றி சாலையில் நடக்கும் அல்லது பயணிக்கும் சக மனிதர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும்.

விசித்திரமான போக்குவரத்து விதிமீறல்களும் - அபராதமும்.. நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்!

அத்தோடு இல்லாமல் காரில் அமர்ந்தவாறு புகைப்பது சில நேரங்களில் தீ விபத்தைக்கூட உருவாக்கலாம். ஆகையால், காரில் அமர்ந்தவாறு புகைப்பதை மோட்டார் வாகன சட்டம் கடுமையாக தடைவிதிக்கின்றது. இதற்கு அபராதமாக ரூ. 500 வரை அபராதம் வசூலிக்கப்படுகின்றது.

Most Read Articles
 
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Unusual Traffic Rules & Fines In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X