Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 8 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 9 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிக்கிடாதீங்க..! மீண்டும் தலையெடுக்கும் உச்சபட்ச அபராதம்... இந்த விதியை மீறினா ரூ.10,000 அபராதமாம்!
தளர்வுகளுடன் பொதுமுடக்கம் செயல்பாட்டில் இருப்பதால் வாகனங்களின் இயக்கம் மீண்டும் பழைய நிலைக்கு ஆரம்பித்துள்ளது. ஆகையால், விதிமீறுவோர்க்கு எதிராக காவல்துறை மீண்டும் உச்சபட்ச அபராதத்தைக் கையிலெடுக்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ச்சியாக காணலாம்.

இந்தியாவில் விபத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறலே மிக முக்கியமான காரணமாகும். தற்போது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தளர்வுகளுடன் பொது முடக்கம் நீடித்து வருகின்றது.

ஆனால், இந்த கால கட்டத்திலும்கூட விபத்துகள் அதிகமாக அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. ஏன், நாடு முழுவதும் முழு பொது முடக்கம் நிலுவையில் இருந்த காலத்திலேயே விபத்தின் எண்ணிக்கை சற்றும் குறையாமல் அதிகரித்தவாறு இருந்ததாக புள்ளி விவரங்கள் சில தெரிவிக்கின்றன. இதற்கு நாட்டின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடிய நிலையில் இருந்ததும் ஓர் காரணம்.

சாலைகளா, அது எப்படி காரணமாகும்? வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இதனால், அதிகபட்ச சாலைகள் காலியாகும் நிலை உருவாகியது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள், அரசு தங்களுக்காகவே இப்படிச் செய்து கொடுத்திருப்பதாக எண்ணி, வாகனங்களை கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் இயக்கி வந்தனர். இதன் விளைவாகவே பெரும்பாலான விபத்துகள் அரங்கேறியிருக்கின்றன.

அதேசமயம், கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்த காரணத்தினால் காவல்துறை வழக்கமான சில நடவடிக்கைகளை நிகழ்த்தாமல் தளர்த்தின. இதைக் கூடுதல் பிளஸ்ஸாக எடுத்துக்கொண்ட விதிமீறல் வாகன ஓட்டிகள் மேலும் விதிமீறலில் ஈடுபட ஆரம்பித்தனர். எனவே, நாட்டில் மீண்டும் போக்குவரத்து விதிமீறல்கள் தலையோங்கத் தொடங்கியிருக்கின்றது. இது, தற்போது அந்த துறைச்சார்ந்த அதிகாரிகளுக்கு தலை வலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆகையால், ஒரு சில மாநிலங்கள் போக்குவரத்து விதிமீறலுக்கு முட்டுக் கட்டைப் போடும் விதமாக மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன. அந்தவகையில், பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் வாகனத்தை ஓட்டிக் கொண்டே செல்போன் பயன்படுத்துவோருக்கு எதிராக போர்க் கொடி தூக்க ஆரம்பித்துள்ளது. இந்த விதிமீறலுக்கு எதிராக கடுமையான விதி பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது, செல்போன் பேசியவாறு வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமீறலை முதல் முறை செய்பவராக இருந்தால் அவருக்கு முதலில் ரூ. 1,000 மட்டுமே அபராதமாக விதிக்கப்படும்.

அதேசமயம், தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் ஒரே நபர் இந்த விதிமீறலில் சிக்குவாரானல் அவருக்கே பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட இருக்கின்றது. இதுமட்டுமின்றி, அந்நபர் மீது வழக்கு பதியவும் உபி மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் அதிகமாக விபத்துகள் அரங்கேறுவதற்கு கவனில்லாமல் வாகனங்களை இயக்குவதும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. அதில் செல்போனில் பேசிக் கொண்டு வாகனங்களை இயக்குவது முதல் இடத்தைப் பிடிக்கின்றது. எனவேதான் உபி போக்குவரத்துத்துறை இந்த விதிமீறலுக்கு எதிராக உச்சபட்ச அபராதத்தை விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் விதிமீறல் வாகன ஓட்டிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கச் செய்திருக்கின்றது இந்த உச்சபட்ச அபராதம் பற்றி அறிவிப்பு.

தற்போது நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைராசால் ஏற்கனவே மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் பலர் வேலையை இழந்து, வருமானத்தை இழந்து வருமாட்டக் கோட்டின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த மாதிரியான நிலையில் உச்சபட்ச அபராதத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.