இணையத்தில் வைரலான வீடியோ... மொத்தமாக சிக்கிய 12 இளைஞர்கள்!! உபி-யில் நடைபெற்ற சம்பவம்

இந்தியாவை பொறுத்தவரையில் சாலைகளில் சாகசம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் சாகசங்களை செய்யும் வாகன ஓட்டிகளை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.

இணையத்தில் வைரலான வீடியோ... மொத்தமாக சிக்கிய 12 இளைஞர்கள்!! உபி-யில் நடைபெற்ற சம்பவம்

அவ்வாறான சாலை சாகச நிகழ்வை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். உத்திர பிரதேசத்தில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

உத்திர பிரதேசத்தில் சாலை கட்டுமான பணிகள் கடந்த சில வருடங்களில் பெரிதும் மேம்பட்டுள்ளன. ஆனால் இதனை தவறாக பயன்படுத்துவோரும் இருக்கதான் செய்கின்றனர். மேலுள்ள வீடியோவில் மூன்று கார்களில் காலியான நெடுஞ்சாலை ஒன்றில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

இணையத்தில் வைரலான வீடியோ... மொத்தமாக சிக்கிய 12 இளைஞர்கள்!! உபி-யில் நடைபெற்ற சம்பவம்

இளைஞர்களுக்கு செல்பி மோகம் இன்னமும் குறைந்தபாடில்லை. இந்த வகையில் நெடுஞ்சாலையில் வேகமாக இயங்கி கொண்டிருந்த காரின் மேற்கூரையில் ஏறி சில இளைஞர்கள் செல்பி எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் அதிவேகத்தில் இயங்கி கொண்டிருந்த காரின் மேற்கூரையில் நடனமாடியும் பார்த்துள்ளனர்.

இணையத்தில் வைரலான வீடியோ... மொத்தமாக சிக்கிய 12 இளைஞர்கள்!! உபி-யில் நடைபெற்ற சம்பவம்

மொத்தமாக 3 கார்களில் எப்படியிருந்தாலும் 12 இளைஞர்கள் இருப்பர். வெறும் 25 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக இந்த வீடியோ இருந்தாலும், இந்த சில வினாடிகளிலேயே இது எத்தகைய குற்றம் செயல் என்பதை நமக்கு புரிய வைத்துவிடுகிறது.

இது தொடர்பான வீடியோக்களும், படங்களும் இணையத்தில் வைரலானது மட்டுமில்லாமல், இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து புகார்கள் அதிகளவில் வெளிவர துவங்கியதை அடுத்து இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாவிடினும், போலீஸார் இதுகுறித்து விசாரிக்க துவங்கியுள்ளனர்.

இணையத்தில் வைரலான வீடியோ... மொத்தமாக சிக்கிய 12 இளைஞர்கள்!! உபி-யில் நடைபெற்ற சம்பவம்

வீடியோக்களை வைத்து இளைஞர்களை அடையாளம் காண போலீஸார் தீவிரமாக உள்ளனர். அதேநேரம் கார்களை அவற்றின் பதிவெண் மூலம் கண்டறியவும் போலீஸார் முயற்சித்து வருகின்றனர். வீடியோவில் காரின் பதிவெண்ணை அவ்வளவாக தெளிவாக பார்க்க முடியவில்லை.

இன்னும் சொல்லப்போனால், ஒரு காரில் பதிவெண் பலகையே இல்லை. போலீஸார் தங்களை தேடக்கூடாது என்பதற்காக இளைஞர்கள் அவற்றை நீக்கியிருக்கலாம். ஏனெனில் பொது சாலையில் இவ்வாறான சாகசங்களில் ஈடுப்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இணையத்தில் வைரலான வீடியோ... மொத்தமாக சிக்கிய 12 இளைஞர்கள்!! உபி-யில் நடைபெற்ற சம்பவம்

இது போன்ற சாலை சாகசங்கள் விபத்தில் சென்று முடிய அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறான ஸ்டண்ட்களை மேற்கொள்வோர் மட்டுமின்றி அருகில் செல்லும் மற்ற வாகனங்களும் பாதிப்படைய கூடும். இணையம் நமது வாழ்வில் பெரும் பங்கு வகிப்பதால் இவ்வாறான சம்பவங்கள் உடனடியாகவும் அதிகளவிலும் நமக்கு தெரியவந்து கொண்டிருக்கின்றன.

போலீஸாரும் சிசிடிவி வீடியோக்களை வைத்தே குற்றவாளிகளை பிடிக்கின்றனர். இத்தகைய குற்றவாளிகள் மீது கடுமையான சட்டத்தை போலீஸார் எடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Video of youth stunting on cars goes viral Police start investigation & launch manhunt.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X