சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயசு பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

5 வயது சிறுவன் பென்ஸ் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த சிறுவன் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி.

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கார் அவசியமாகிறது. எனவே சொந்தமாக கார் வாங்குவதில் பலரும் ஆர்வமாக உள்ளனர். சொந்தமாக கார் இருக்கும் பட்சத்தில், செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் குடும்பத்துடன் சென்று வந்து விட முடியும். ஆனால் கார்களின் விலை சற்று அதிகம் என்பதால், அனைவராலும் சொந்த கார் வாங்க முடிவதில்லை.

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

எனினும் செகண்ட் ஹேண்டிலாவது ஒரு காரை வாங்கி விட வேண்டும் என தொடர்ந்து பலர் முயற்சி செய்து கொண்டேதான் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த செய்தி கண்டிப்பாக அதிர்ச்சி அளிப்பதாகதான் இருக்கும். அதே சமயம் இந்த சம்பவம் ஒரு சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

MOST READ: தாயுடன் ஸ்கூட்டரில் வந்த இளைஞர்... புது மாப்பிள்ளை போல் மாலை அணிவித்து கவுரவித்த போலீஸ்... ஏன் தெரியுமா?

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி (Lamborghini) நிறுவனம், மிகவும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. லம்போர்கினி கார்களின் வேகம், கவர்ச்சிகரமான டிசைன் ஆகிய அம்சங்களால், உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். ஒரு லம்போர்கினி காரையாவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஏராளம்.

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

இப்படி லம்போர்கினி கார்கள் மீது பலர் பைத்தியமாய் உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒரு சிறுவன் செய்த காரியம் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. லம்போர்கினி காரை சொந்தமாக வாங்க வேண்டும் என்பதற்காக, அந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். அதுவும் மெர்சிடிஸ் பென்ஸ் காரில்! இதற்கே ஆச்சரியப்படாதீர்கள். ஏனெனில் அந்த சிறுவனுக்கு 5 வயது மட்டுமே ஆகிறது!!

MOST READ: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிரடி... தெலங்கானாவில் எடுக்கப்பட்ட சூப்பர் நடவடிக்கை... என்ன தெரியுமா?

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

உலகமே தற்போது கொரோனா வைரஸால் (கோவிட்-19) கதிகலங்கி போய் நிற்கிறது. குறிப்பாக வல்லரசான அமெரிக்கா, கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ள முடியாமல் நிலை குலைந்து போயுள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலுக்கு மத்தியில், இந்த வினோதமான சம்பவம் நேற்று முன் தினம் (மே 4ம் தேதி) அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஆக்டன் நகரை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு, லம்போர்கினி கார்கள் என்றால் கொள்ளை பிரியம். எனவே லம்போர்கினி கார் வாங்கி தரும்படி பெற்றோரை நச்சரித்து கொண்டே இருந்துள்ளார். ஆனால் அந்த சிறுவனின் பெற்றோர், லம்போர்கினி கோரிக்கைக்கு 'நோ' சொல்லியுள்ளனர்.

MOST READ: அதிசயம்... உண்மையிலேயே வானில் பறப்பதற்காக உச்ச நட்சத்திரம் செய்த காரியம்... வாயை பிளந்த மற்ற நடிகர்கள்!

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

குறிப்பாக நேற்று முன் தினம் அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் மிக கடுமையாக வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சிறுவனின் தாய் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் தன் அம்மாவின் மெர்சிடிஸ் பென்ஸ் காரை எடுத்து கொண்டு அந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டான். காரை ஓட்டியதும் அந்த சிறுவன்தான்!!!

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

உட்டாவில் இருந்து கலிபோர்னியா சென்று சொந்தமாக லம்போர்கினி காரை வாங்கி விட வேண்டும் என்பது அந்த சிறுவனின் திட்டம். ஆனால் அந்த சிறுவனின் பாக்கெட்டில் வெறும் 3 அமெரிக்க டாலர்கள் மட்டும்தான் இருந்தன. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 200 ரூபாய். இந்த பணத்தை வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை அந்த சிறுவன் வாங்குவதற்கு சென்றுள்ளார்.

MOST READ: பர்த்டே கொண்டாட முடியாத குழந்தைக்கு சர்ப்ரைஸ்... போனில் பேசுவது யார்னு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

ஆனால் வீட்டில் இருந்து பயணத்தை தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குள், அந்த சிறுவனின் திட்டம் வீணாய் போய் விட்டது. ஏனெனில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அச்சிறுவன் ஓட்டி வந்த காரை தடுத்து நிறுத்தி விட்டனர். ஆரம்பத்தில் யாரோ காரை தாறுமாறாக ஓட்டி வருகின்றனர் என்றுதான் ரோந்து போலீசார் நினைத்துள்ளனர்.

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

ஆனால் காரை நிறுத்திய பின்பு 5 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் உள்ளே இருப்பதை பார்த்து அவர்களே அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். போலீசார் நிறுத்திய சமயத்தில், அந்த சிறுவன் இருக்கையின் நுனியில் அமர்ந்து காரை ஓட்டி வந்துள்ளார். இதன் மூலம் அந்த சிறுவனின் கால்களுக்கு எப்படியோ பெடல்கள் எட்டியுள்ளன.

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

5 வயது சிறுவன் கார் ஓட்டியதால், போலீசார் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். எனவே எங்கே கார் ஓட்ட கற்று கொண்டாய்? என அந்த சிறுவனிடமே போலீசார் கேள்வி எழுப்பினர். ஆனால் சிறுவன் என்பதால், இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

எனினும் சிறுவன் கார் ஓட்டி வந்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் பொது சொத்துக்கள் எதுவும் சேதமடையவில்லை எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் அந்த சிறுவனின் பெற்றோர் மீது காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயது பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த சிறுவனை உடன் பிறந்தவரின் கண்காணிப்பில் விட்டு விட்டு பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அந்த சிறுவன் காரை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து கிளம்பியதாக தெரிகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Note: Lamborghini images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
US: 5-Year-Old Boy Drives Mercedes To Buy A Lamborghini. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X